-முத்துராமலிங்கன்காரணம் ஆயிரம்!2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியின் ‘துருவ நட்சத்திரம்’ கடந்த 7 ஆண்டுகளில் சந்தித்த சோதனைகள் வானின் நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காதவை.சமீபத்தில் நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தால் தானே சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்த கெளதம், இதுவரை நாலைந்து ரிலீஸ் தேதிகளை அறிவித்தும் படம் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை.இடையில் இன்னொரு சோதனையாக இப்படத்தின் ‘ஒரு மனம் நிக்கச்சொல்லுதே’ பாடல் திருட்டுத்தனமாக தனியார் யூடியுப் தளங்களில் ரிலீஸாகிவிட, படு அப்செட் ஆகிவிட்டாராம் கெளதம். ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இரு நாயகிகளாக நடித்திருந்த நிலையில், 3 மணி நேரம் ஓடிய படத்தின் நீளத்தை 2.30 மணி நேரமாகக் குறைக்க, ஐஸ்வர்யாவின் கேரக்டரையே படத்திலிருந்து வெட்டி தூர எறிந்துவிட்டாராம். இச்செய்தி இதுவரை ஐஸுக்கே தெரியாது. இப்ப வருமோ… எப்ப வருமோ!.சமந்தாவுக்கு விஜய் யோசனை ! பழநிமலை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் என்று அடுத்தடுத்து தமிழக கோயில்களில் தனது உடல்நலனுக்காகப் பிரார்த்து வரும் சமந்தா, லேட்டஸ்டாக தரிசிக்க ஆஜராகியிருப்பது ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயில். இக்கோயில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் படப்பிடிப்பு இருந்தாலொழிய நட்சத்திரங்கள் ஆஜராவது அரிது. இக்கோயிலுக்குச் சென்று வழிபடும்படி சமந்தாவுக்கு யோசனை சொன்னவரே நடிகர் விஜய்தானாம். சொன்னதோடு மட்டுமன்றி கோயில் நிர்வாகிகளுக்கு தனது மேனேஜர் மூலம் அழைத்து சிறப்பு பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்தாராம்..இத்தோடு கோயில் தரிசனங்களை முடித்துக்கொள்ளும் சமந்தா, இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தனது மயோசிடிஸ் நோய்க்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளப்போகி றார். அங்கிருந்து தாயகம் திரும்ப 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூட ஆகலாம் என்கிறார்கள்.இதைவிட துயரமான செய்தி சிகிச்சைக்குகிளம்பிப்போனவுடன் சோஷியல் மீடியாவிலும் சமந்தாவை பார்க்கமுடியாது. சமர்த்தா… நலம் பெறட்டும்!.ரஜினியின் கூட்டணி கச்சேரி!மாலத்தீவில் தன்னந்தனியாக துயரமாக நடந்து செல்லும் ரஜினியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கதைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. போனதே ‘எங்கே நிம்மதி’ என்று தேடித்தான் என்பதால், இச்செய்திகளை மட்டுமல்ல; தனது தொலைபேசித் தொடர்பைக் கூட முற்றிலுமாக துண்டித்துவிட்டே அப்பயணம் கிளம்பினாராம் ரஜினி. இன்னும் ஒரு சில தினங்களில் மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார், ‘ஜெயிலர்’ ரிலீஸுக்குப் பின்னர் த.செ.ஞானவேல் படத்தில் கலந்துகொள்கிறாராம்..ரஜினியின் அடுத்த படம் இதுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதை யாரும் கண்டுகொள்ளாமல், இதுவரை ஒரு சந்திப்பு கூட நடக்காத, தயாரிப்பு நிறுவனமே யார் என்று கூட தெரியாத, லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியின்‘ரஜினி 171’ படம் குறித்தே மீடியாக்கள் அதிகம் ஃபோகஸ் பண்ணுவதால் பெரும் கவலையில் இருக்கிறதாம் லைகா நிறுவனம்..‘வா நீ’ வாணி! ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’ ஆகிய முதல் இரு படங்களைத் தவிர்த்து வரிசையாக சொதப்பல் படங்கள் கொடுத்து வந்த வசந்தபாலன், ‘அநீதி’ படத்தின் மூலம் தனது பள்ளிக்கால நண்பர்களின் நிதிக்குஅநீதி இழைத்த வகையில் ‘தலைமைச் செயலகம்’ என்ற டைட்டிலில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்..சினிமா ரிஸ்க், வெப் சீரிஸ்தான் பாதுகாப்பு என்று இப்படி பல இயக்குநர்கள் வெப் சீரிஸ்களை நோக்கி விரைந்துகொண்டிருக்க, அதில் மிக அதிர்ச்சிகரமாக, நல்ல தரமான இயக்குநர் என்று பெயரெடுத்த ராதா மோகனும் இணைந்திருக்கிறார்.’சட்னி சாம்பார்’ என்று ருசியாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் யோகி பாபு தொடங்கி ராதா மோகனின் கம்பெனி ஆர்டிஸ்ட்கள் பலர் நடிக்க, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, மீண்டும் தாய் வீடான சின்னத்திரைக்கே திரும்புகிறார் வாணி போஜன். இவருக்கு முன்பாக இந்த கேரக்டரில் நடிக்க ராதா மோகனால் அணுகப்பட்டவர், அவரது முந்தைய ‘பொம்மை’ பட நாயகியான பிரியா பவானி ஷங்கர். கதை கூட கேட்காமல்பிரியா நோ சொல்லவே ‘வா நீ’ என்று வாணியை அழைத்துக்கொண்டாராம் ராதா மோகன். பார்த்து சமைங்கப்பா!