ஆப்சென்ட் நயன் அப்செட் கெளரிஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இரட்டைக் குழந்தைகளின் ’ஃபர்ஸ்ட்லுக்’கை இன்ஸ்டாவில் ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்கிற கமென்டுடன் பகிர்ந்துள்ள நயன்தாரா, ஷாரூக்கானின் ‘ஜவான்’ ஆடியோ நிகழ்ச்சியைத் தவிர்த்தது, சென்னை முதல் மும்பை வரை பெரும் சர்ச்சையாகி உள்ளது.சென்னை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் அட்லீ குடும்பத்தினருடன் ‘ஜவான்’ படம் பார்த்த நயனுக்கு, தனது பல காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்பட்டது குறித்து பயங்கர அப்செட்டாம். இது ஒரு காரணமாக இருக்க, ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ஒரு கோடி ரூபாய் பேமென்ட் கேட்டாராம் நயன்.அதற்கு படத்தின் தயாரிப்பாளரான ஷாரரூக்கின் மனைவி கெளரி சம்மதிக்கவில்லை. ‘சொந்தப் படபுரமோஷன்ல கலந்துக்க கோடிரூபா.இவ எப்பிடி அடுத்தடுத்து இந்திப் படங்கள்ல நடிக்கிறாங்குறதை நான் பாக்குறேன்’ என்று குமுறினாராம் கெளரி..விஜய் மகனுடன் கைகோக்கும் யுவன்நடிகர் விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் செய்தியை, அதைத் தயாரிக்கவிருக்கும் லைகா நிறுவனம் எப்போது செய்தியாக வெளியிட்டதோ,அப்போது முதலே மீடியாவாலாக்கள் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அதில் உச்சக் கட்டம் ஜேஸனின் படத்தில் விக்ரமின் வாரிசு துருவ் ஹீரோ, ஷங்கரின் வாரிசு அதிதிஹீரோயின், ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசு அமீன் இசை என்று ரீல் விட்டிருப்பதுதான்.தனது டைரக்ஷன் முயற்சி தொடர்பாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பே லண்டனில் லைகா சுபாஸ்கரனை சந்தித்த ஜேஸன், தன்னிடம் முழுமையாக முடிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் தயாராக இருப்பதாகவும், அதை விஜய்சேதுபதியிடம் சொல்லி ஏற்கெனவே ஓகே வாங்கிவிட்டதாகவும் சொல்லித்தான் சந்தித்தார். அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கதிட்டமிட்டுள்ள ஜேஸன் படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் குறித்து இதுவரை எந்த மூவிலும் இறங்கவில்லை.ஜேஸன் யுவனின் தீவிர ரசிகர் என்பதால் இசை அநேகமாக யுவனேதான். அதற்காகத் தான் முன்னெப்போதும் இல்லாமல் இம்முறை யுவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி,அதை ட்ரெண்டிங் செய்து வருகிறது லைகா நிறுவனம்..நெல்சன் vs நெட்டிசன்ஸ்‘ஜெயிலர்’ வசூல் சமாச்சாரங்கள் ஆரம்ப நாட்களில் ஓவராக கலாய்க்கப்பட்டதால் அதை ரஜினியும், அப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரும் பெரும் பிரஸ்டீஜ் சமாசாரமாக எடுத்துக் கொண்டார்கள்.தற்போது படம் 25 வது நாளை எட்டி, வசூல் இன்னும் ஓரளவு ஸ்டெடியாக உள்ள நிலையில், திடீரென ரஜினியை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் அவரது சம்பளத்தை 100 கோடி என்று ரவுண்டு செய்யும் வகையில் மேலும் 20 லட்சத்துக்கு செக் கொடுத்து, அடுத்து யாரும் எதிர்பாராத இன்னொரு அதிரடியையும் செய்தார். எட்டு வகையான மாடல்களில் விலை உயர்ந்த பி.எம். டபுள் யூகார்களை வரவழைத்து ரஜினிக்குக் காட்டிய அவர் ‘உங்களுக்குப் புடிச்சத எடுத்துக்கோங்க’ என்றவுடன் மலைத்துப் போனரஜினி, தனக்குப் பிடித்த ஒரு பிராண்டை செலெக்ட் செய்தார்.‘ரஜினிக்கு ஓகே. அவருக்கு ரொம்ப காலத்துக்கு அப்புறம் ஹிட் படம் கொடுத்த நெல்சனுக்கு ஒரு மினி கூப்பராவது கொடுத்திருக்கலாமே?’ என்று அங்கலாய்த்து வருகிறார்கள் வெட்டிசன்கள்..அம்மா சிநேகா ‘தளபதி 68’ படத்துக்காககொடைக்கானலில் மூன்று மாதங்களுக்கும் மேலாக டேரா போட்டிருந்த வெங்கட்பிரபு, முன் தயாரிப்புப் பணிகளுக்காக சென்னை திரும்பிவிட்டார். அக்டோபர் மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.கதையில் ஏற்கெனவே, அப்பா, மகன் என்று இரண்டு விஜய்கள் இருந்த நிலையில் கிளை மாக்ஸில் மூன்றாவதாக ஒரு விஜய்யும் வருகிறாராம். ஹீரோயின்கள், மற்ற நடிகர்கள் தேர்வு விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், நாம் ஏற்கெனவே சொன்னது போல் ஜோதிகா ஜகா வாங்கிவிட்டார்.‘ ஏதாவது வில்லி கேரக்டர் தந்திருந்தால் கூட ஓகே. சொல்லியிருக்கலாம். ஆனால், அப்பா விஜய்யின் மனைவி என்பது நமக்கு மைனஸ்.அடுத்தடுத்து இதே போல் அம்மா கேரக்டருக்கு அழைக்க ஆரம்பிப்பார்கள்’ என்று வெங்கட்பிரபு விடம் ஓப்பனாக சொல்லியே ஒதுங்கிக் கொண்டாராம்,ஜோ.ஜோவுக்குப் பதிலாக அந்த அம்மா கேரக்டரில் நடிக்க விருப்பவர் சரியாக 20 வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன் ‘வசீகரா’வில் ‘நெஞ்சம் ஒரு முறை நீ என்றது’ என்று டூயட் பாடிய சிநேகா.கட்சிக்கு மகளிர் அணித்தலைவி கிடைச்சிட்டாங்க!