அண்மையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதில் ‘ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல் பாடங்கள் நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்’ என்பதுதான் அதிலுள்ள செய்தி. கல்லூரி மாணவர் சேர்க்கை குறைந்ததால் நிறுத்தப்படுகிற இயற்பியல், வேதியியல் துறைகள்தான் நம் இந்தியாவுக்கு நோபல் பரிசுகளையே பெற்றுத் தந்தன. இதனை மறந்துவிட்டதன் அடையாளம்தான் கல்லூரிகளில் இப்பாடங்களின் நிறுத்தம். உண்மையில் கணிதம் என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தோடும், இயற்பியல் என்பது தொழில்துறையுடனும் பின்னிப்பிணைந்தப் பாடமாகும். கணிதம், இயற்பியல் பாடங்களைப் பயின்றால் வேலைவாய்ப்பு கிடைக்காது எனும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கல்விக் கூடங்கள் அகற்றவேண்டும். மேலும் கணிதம் மட்டுமே நவீன தொழில்நுட்பக் கருவிகள் செயல்படுவதற்கான அறிவைத் தரமுடியும்..கல்லூரிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை நிறுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இந்தத் துறைகள் குறித்த பொது அறிவு இல்லாமலே போய்விடும். இதனால் இவர்களால் போட்டித் தேர்வுகளை அணுகுவது சிரமமாகிவிடும்.இன்னொரு விஷயம், கல்லூரியில் இளங்கலை வகுப்புகளில் மேற்சொன்ன பாடங்களை நிறுத்திவிட்டால், எதிர்காலத்தில் வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் பட்ட மேற்படிப்பும், உயர் கல்வி பெறுபவர்களும் இல்லாது போய்விடுவார்கள். அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் உருவாவதும் இல்லாமல் போய்விடும்.அரசும், பல்கலைக்கழங்களும் இந்தப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் விருப்பமுடன் சேருவதற்கான நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும். அதற்குரிய விழிப்புணர்ச்சியை பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.மாணவர்கள் சேராததைக் காரணம் சொல்லி, அப்பாடங்களை நிறுத்துவது வருங்கால தலைமுறைக்கு அறிவுத் தடைகளாக அமைந்துவிடும்.