உருவத்தைப் பார்த்து ஒருவரை எடை போடக்கூடாது என்று பொதுவாகச் சொல்வார்கள். அது உண்மை என்பதற்கு ஆர்.ஜே விக்னேஷ்காந்த் அழகான உதாரணம். ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்கிற வெறியில் பல கனவுகளை சுமந்து கொண்டு சென்னைக்கு வந்தவர் ஆஹா எஃப். எம். மூலம் அகில உலக சூப்பர் ஸ்டார் ஆனார். அதன்பின் தொலைக்காட்சி, யூ டியூப் என சோஷியல் மீடியாவில் கலக்கிக் கொண்டு, சினிமாவிலும் கிடைத்த கேப்பில் கெடா வெட்டிக் கொண்டிருப்பவரை அவரின் தாய் வீட்டிற்கு அழைத்து வந்தோம். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவரது பயணத்தைப் பற்றி மனம் திறந்து உற்சாகமாகப் பேசினார்....சிறு வயதிலே சினிமா மோகம் தொற்றிக் கொண்டதா? படிப்பில் எப்படி? “நான் வீட்டுக்கு ஒரே பையன். சின்ன வயசுலயே மேடையில பேசுறது, பாடுறதுன்னு சுத்திகிட்டே இருப்பேன். தெரியாத்தனமா கொஞ்சம் நல்லா படிக்குற பையனாவும் வளர்ந்துப்புட்டேன். இதனாலே 11th ல என்னை ஸ்கூல் என்கிற பெயரில் இயங்கும் சிறைச்சாலையான நாமக்கல்லில் இருக்குற ஸ்கூல்ல கொண்டு போய் சேத்துட்டாங்க. அங்க காலையில 4 மணிக்கு ஆரம்பிச்சு நைட் 11 மணி வரை படி படின்னு சொன்னதாலேயே கொஞ்சம் ஞாபகம் இருந்த படிப்பும் சுத்தமா மறந்து போச்சு. 12th மார்க்கும் ரொம்ப கம்மி. அதுக்குப் பிறகு நமக்கு எது வருதுன்னு கண்டுபிடிச்சு அந்த படிப்பை கத்துக்க ஆரம்பிச்சேன்.” RJ கனவு நிறைவேறியது எப்படி? “சென்னயில வந்து இன்ஜினியரிங் படிச்சா நாமளும் மீடியாகுள்ள போயிறலாம்னு ஒரு காலேஜ்ல சேந்தேன். எங்க காலேஜ் சென்னையில இருக்குனு நினச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சுது அது சென்னைக்கு மிக அருகில் மதுராந்தகம்னு. சரின்னு மனச தளரவிடாம முயற்சி பண்ணிட்டே இருந்தேன். எப்டியாச்சும் ஆர்.ஜே. ஆகணும்னு வெறி. ஒரு நாள் ஆஹா எஃப்.எம்.ல செலக்ட் ஆயிட்டேன்.அங்கதான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். 2011ல இருந்து 2015வரை சூப்பரா போச்சு.” .இந்த பயணத்தில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா? “நாங்க 5 பேர். அதுல ஒருத்தன் தான் சிவசுப்ரமணியம். நாங்க எல்லாரும் ஒரு ஒரு காலேஜ்க்கு போய் எங்க வெப்சைட்ட ப்ரோமோஷன் பண்ணுனோம். அப்டி ஒரு நாள் ஒரு காலேஜ்க்குப் போகும் போது ட்ரெயின்ல இருந்து ஸ்லிப் ஆகி கீழ விழுந்த்து அவன் இறந்துட்டன்.(கண்கலங்கியபடி நிற்கிறார்). அந்த மரணம் என்ன பெரிசா பாதிச்சது. எனக்குள்ள பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, மறக்க முடியாத சம்பவமா மனசுக்குள்ளயே இருக்கு...” சோசியல் மீடியா சோறு போட்டதா? “ எங்க போட்டுச்சி... தொட்டதெல்லாம் நஷ்டம்தான். வெப்சைட் ஆரம்பிச்சதுல பெரிய நஷ்டம்னா, அதை விட பெரிய லாஸ் வெப் ரேடியோ.. பிறகு நண்பர்களா சேர்ந்து ஒரு யூடூப்பில் வேலை பாத்து அதை முன்னேத்தி கொண்டு வந்தோம். ஒரு கட்டத்துல அதுல இருந்து வெளியேற்றப்பட்டோம். கஷ்டப்பட்டு கண்ணீர்விட்டு வெளியே வந்து ஜெயிக்கணும்னு மீண்டும் ஒரு வெறி. எங்களை நம்பி ஒருத்தர் பணம் போட்டாரு, அப்படித் தான் பிளாக் ஷீப் ஆரம்பித்தோம். வெறித்தனமா வேலை பார்த்தா நிச்சயம் ஜெயிக்கலாம்!”.கொஞ்சநாளா உங்கள பத்தி நிறைய சர்ச்சைகள் நிறைய வருதே... எப்படி சமாளிக்கிறீங்க? “அறிஞர் அண்ணா இப்படி சொல்லுவாராம்...‘உங்க காலுல ஒரு மச்சம் இருக்குனு சொன்னாங்க, கால காமிச்சு இல்லையேன்னு சொன்னேன். அப்புறம் முட்டிகிட்ட இருக்குன்னு சொன்னாங்க, அங்கயும் இல்லன்னு கொஞ்சம் வேட்டிய தூக்கி முட்டிய காமிச்சேன்... உடனே, ‘இல்ல இல்ல உங்க தொடையில இருக்கு’ன்னு சொன்னாங்க... அதுக்கு மேல வேட்டிய தூக்கவா முடியும்? இப்படி யாரோ எதுவோ சொல்றாங்கன்னு அதையெல்லாம் கேட்டுகிட்டிருந்தா நான் வேட்டி இல்லாம தான் நிக்கணும்...’ னு சொன்னாராம்.இததான் நாங்களும் ஃபாலோ பண்ணுறோம். நாம தப்பு பண்ணலனு நமக்கு தெரியும் அதுக்கான ஆதாரமும் நமக்கு இருக்கு. ஆனா அதை இப்போ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, விட்ருவோம். ஒருகட்டத்துக்கு மேல சர்ச்சைகள் அதிகரிக்கும் போது எங்களுக்கு அது பழகிப் போச்சு. எங்க எல்லாருக்கும் சினிமால சாதிக்கணும், நடிகராகணும் இயக்குநராகணும்னு நெறய கனவுகள் இருக்கு. அதை நோக்கி ஓடிட்டு இருக்கும் போது இந்த விமர்சனங்களை படிக்க நேரமில்லை. ” உங்கள மாதிரியே நிறைய பேர் இப்போ மீடியாவுக்கு வர்றாங்க. அவங்களுக்கு என்ன சொல்ல நினைக்குறிங்க? “எடுக்கப் போற ஒவ்வொரு முயற்சியையும் ‘லோ ரிஸ்க்’, ‘ஹை ரிஸ்க்’னு நாங்க பிரிச்சுப்போம். ‘லோ ரிஸ்க்ல நல்ல கம்ஃபர்ட் இருக்கும், லைஃப் ஜாலியா இருக்கும். ‘ஹை ரிஸ்க்’ல நாம நினைக்காத அளவு சந்தோஷமும் கிடைக்கும், அதே நேரத்துல நினைச்சு பார்க்க முடியாத வலியும் இருக்கும். ஆனால் நாங்க எப்பவும் எடுக்குறது ஹை ரிஸ்க் தான். யூ டியூப்ல வியூஸ்காக, கிளிக் பைட்டுக்காக நீங்க வைக்கக்கூடிய தம்ப்நெய்ல்லாம் நம்மள கொண்டு போய் விடக் கூடிய இடம் ரொம்ப ஆபத்தானது. இதுல மாட்டக்கூடிய இளைஞர்கள் அதுல இருந்து வெளிய வர ரொம்ப கஷ்டப்படுறாங்க. நாம வளரனும் அப்டிண்றதுக்காக இன்னொருத்தர தாக்கி வீடியோ பண்ணாதீங்க.” - பா.ரஞ்சித் கண்ணன்