சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு கவனிக்கத்தக்கது. ‘வெறுப்பு உணர்வைத் தூண்டுவோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்பதே அந்த உத்தரவின் சாரம்சம். அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான இந்த உத்தரவுக்கான அவசியத்தை யோசித்தால் ஒரு விஷயம் புரிகிறது.நம் மொத்த சமூகத்தையும் சமூக ஊடகங்கள் ஆக்ரமித்திருக்கும் இந்த நாட்களில் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் எதுவும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை வந்துவிட்டது. விளைவு, பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் வார்த்தைச் சகதிகளை வாரியிறைத்துக்கொள்கிறார்கள். சாதி, மத, இன, மொழிச்சண்டைகளை ஆளுக்கு ஆள் நடத்துவது சகஜமாகிவிட்டது. அரசியல் முதல் அந்தரங்கம் வரை எல்லாமும் அம்பலத்தில் ஆடுகின்றன.மேம்போக்காக பார்த்தால், இவை சாதாரணமாக தோன்றினாலும் இவற்றின் விளைவுகள் பெரும் கலவரங்களில் முடியும் வாய்ப்பு உண்டு. உணர்ச்சிகளைத் தூண்டி, பிறரின் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடிய இத்தகைய செயல்களுக்கு விதையாக இருப்பது எது? வேறென்ன... வெறுப்பு உணர்வுதான்.ஒருவர் மீதான மற்றவரின் வெறுப்பு உணர்வே பின்னர் நடக்கும் பெரும் ஆபத்துகளுக்கு அஸ்திவாரம் என்பதை உணர்ந்தே இத்தகைய உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவால் மட்டுமே எல்லாம் மாறிவிடாது. பொதுமக்களாகிய நாமும் பொறுப்பு உணர்ந்து, சகமனிதர்களை வெறுப்பதைத் தவிர்த்து, நேசிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பை விதைத்தாலே போதும்; வெறுப்பு தானாகவே மாறும்.அதற்கு முதலில் சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் போக்கு மேம்பட வேண்டும். பேசுவதிலும் எழுதுவதிலும் ஒவ்வொருவருக்கும் சுயக்கட்டுப்பாடு வேண்டும்.