- ஜி.எஸ்.எஸ்.நீட் போதாதுன்னு நெக்ஸ்டா..? அரசின் அறிவிப்பால் மருத்துவ மாணவர்கள் பதற்றத்திலும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் கலக்கத்திலும் இருக்கிறார்கள். .மருத்துவப் படிப்பை தொடங்குவதற்கு ஒரு நீட் தேர்வு இருப்பது போல, அந்த படிப்பை முடிப்பதற்கும் ஒரு பொதுத்தேர்வு அறிமுகமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதியிலேயே அரசு நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்திவிடும் என்று அனைத்திந்திய மருத்துவ கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராம். பல தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் தேர்வுகளில் தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்றும் இதன் காரணமாக போதிய தகுதி இல்லாதவர்கள் மருத்துவர்கள் ஆகிறார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் செய்துவந்த குறுக்கு வழிகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு முடிவுகட்டும். தவிர இந்த ஒற்றை தீர்வால் நாடு முழுவதும் ஒரே முறையில், ஒரே தரத்தில் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார்கள். இப்போதைய மருத்துவக் கல்வியில் நான்காம் ஆண்டு முடிவில் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை அந்தந்த பல்கலைக்கழகங்களே நடத்தும். இதைத் தொடர்ந்து ஒரு வருடம் இன்டர்ன்ஷிப், மருத்துவமனைகளில், நடைபெறும். அதாவது பிராக்டிகல்ஸ். (இந்தக் காலகட்டத்தில் அவர்களை ஹவுஸ் சர்ஜன்ஸ் என்றும் குறிப்பிடுவது வழக்கம்). இப்படி தியரி, ப்ராக்டிகல்ஸ் இரண்டையும் முடித்தவர்களுக்குமருத்துவராக இயங்கும் உரிமம் வழங்கப்படும்..இனிமேல் மருத்துவக் கல்வியின் இறுதியாண்டில் தேர்வு நடத்தப் போவது அந்தந்த பல்கலைக்கழங்கள் அல்ல. நான்காண்டுகள் முடிவில் தேசிய அளவில் அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடக்கும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்கள் பிராக்டிகல்ஸ் எனப்படும் இன்டர்ன்ஷிப் பகுதிக்கு செல்ல முடியும். அதற்குப் பிறகு ஐந்தாம் ஆண்டு முடிவில் நெக்ஸ்ட் 2 என்ற தேர்வு நடக்கும். அதை வெற்றிகரமாக முடித்தால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற உரிமம் கிடைக்கும்.மருத்துவப் படிப்பை முடிப்பதற்கான பொதுத் தேர்வைதான் நெக்ஸ்ட் என்கிறார்கள். அதாவது நேஷனல் எக்ஸிட் டெஸ்ட். (NExT).தவிர, தற்போது எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவப்பட்டங்களில் சேர்வதற்கு NEET PG என்ற தேர்வை எழுதி தேர்ச்சிபெறவேண்டும். வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் அதை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவில் மருத்துவர்களாக இயங்க முடியாது. அவர்கள் FMGE என்ற தேர்வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். ,ஆனால் இனி NEET PG, FMGE தேர்வுகள் கிடையாது. வெளிநாட்டு மருத்துவர்கள் NEXT தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும். முதுநிலை மருத்துவ பட்டங்களில் சேர்வதற்கு NEXT தேர்வில்பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..இந்த நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்துமாணவர்களுக்குப் பதற்றங்கள் இருக்கின்றன. அதிகப்படியாக ஒரு பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. தவிர மருத்துவ பாடத்திட்டத்தை, ‘கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை’, ‘அறிந்திருந்தால் நல்லது’, ‘எதற்கும் அறிந்து கொள்ளலாம்’ என்று மூன்றாகப் பிரிப்பதுண்டு. இவற்றிலிருந்து முறையே 60, 20, 20 சதவீதம் என்று கேள்விகள் கேட்கப்படுவது பரவலான நடைமுறை. கிட்டத்தட்ட அதே விகிதத்தில்தான் முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும். ஆனால் தரம் என்ற பெயரில் மூன்றாவது பகுதியிலிருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டால் மாணவர்கள் அவற்றிற்கு திருப்திகரமான விடைகளை அளிக்க முடியாமல் போகலாம். (முதன்முதலில் நீட் தேர்வு நடக்கும்போது அப்படித்தான் பயமுறுத்தும் விதத்தில் கேள்விகள்கேட்கப்பட்டன).தவிர, தற்போதைய தேர்வில் சிறிய விடைகள், நீண்ட விடைகள்கொண்ட கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. ஆனால் (நீட் தேர்வை போலவே) நெக்ஸ்ட் தேர்வில் ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் அவற்றில் ஒன்றுதான் சரியானது அதை தேர்வு செய்ய வேண்டும் எனும் வகையிலான MCQ வகையில் தான் கேள்விகள் தான் கேட்கப்படும். இது மருத்துவ அறிவை நன்றாக பெற்று மொழி அறிவு கொஞ்சம் குறைவாகஉள்ளவர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும் சில சமயம் அதிர்ஷ்டவசத்தில் சில கேள்விகளுக்கு தங்களையும் அறியாமல் மாணவர்கள் சரியான விடை அளித்துவிடக் கூடும் அபாயமும் உண்டு. .ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வு நடக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் பத்து முறை இந்த தேர்வை எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றாலும் இதன் காரணமாக சில மாணவர்கள் அதிக காலம் மருத்துவப் படிப்பை படிக்கவும் நேரிடலாம். முன்பு நான்காம் ஆண்டு முடிந்தவுடன் இறுதித் தேர்வை எழுதிவிட்டு உடனடியாக இன்டர்ன்ஷிப் செய்யலாம். தியரி தேர்வில் தோற்று விட்டாலும் இன்டர்ன்ஷிப் காலத்தில் அவர்கள் அதை மீண்டும் எழுதி தேர்ச்சிபெற வாய்ப்பு உண்டு. ஆனால் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம் ஆகும் போது அவர்கள் அதை வெற்றிகரமாக முடித்தால் மட்டுமே இன்டர்ன்ஷிப் செய்ய முடியும். இதன் விளைவாக மாணவர்களுக்குள் எழும் பதட்டம் காரணமாக, நீட் அளவுக்கு இல்லாவிட்டாலும் இனி நெக்ஸ்ட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உருவாகி அதிகரிக்கக்கூடும். இது நன்கு படிக்கும் மாணவ்ர்களிடம் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறைவான நீட் மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கு படிப்பை முடிப்பதில் பெரிய சவாலாகவும் இருக்கலாம். தனியார் மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் தங்கள் சக்திக்கு மீறி அதிக கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவும் இருக்கலாம். இதன் மூலம் மாணவர்களின், பெற்றோர்களின் சிரமங்கள் அதிகரிக்கலாமே தவிர, தரமான மருத்துவர்களை உருவாக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். மேலும் தரமான கல்விதான் தரமான மருத்துவர்களை உருவாக்குமே தவிர, கடினமான தேர்வுகளால் அதை செய்துவிட முடியுமா என்ன? மீறி செய்துவிடலாம் என நினைப்பது ஒன்று குறுக்குவழியாக இருக்க முடியும், அல்லது வேறு உள் நோக்கம் கொண்டதாகத்தான் இருக்கும். நெக்ஸ்ட் வரட்டும் பார்க்கலாம்.