- ஜி.எஸ்.எஸ்.ஆரோக்யமான மனிதனைகூட அணுஅணுவாக கொல்லும் கொடிய நோய் காசநோய். அதுமட்டுமல்ல, அதிவேகமாகப் பரவக்கூடியதும் கூட. நம் உடம்பினுள் வந்ததும் தெரியாது வளர்ந்ததும் தெரியாது, ஏதோ இருமல் சளி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே நம் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருக்கும். .பெரும்பாலான காசநோய் மரணங்கள் கணக்கில் வராததாலும், இந்த மரணங்கள் செய்திகளாக மாறுவதில்லை என்பதாலும் சாதாரண மக்களுக்கு இதன் ஆபத்து அவ்வளவாகத் தெரிவதில்லை சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்உலகெங்கும் புதிதாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். உலகில் காச நோயால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில்தான் இருக்கிறார்களாம். .1882 மார்ச் 24 ஆம் தேதி டாக்டர் ராபர்ட் கோச் என்பவர்காசநோய்க்குக் காரணமான மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவைக் கண்டறிந்தார். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காசநோய் மிக மிக அதிகமாகப் பரவி, அதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழில் ஒருவரைக் காவு வாங்கிக்கொண்டிருந்தது.காசநோய் பல பிரபலங்களின் மூச்சையும் நிறுத்தியிருக்கிறது. பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகோவ், பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ், பிரபல எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஜார்ஜ் ஆர்வெல், பிரபல விஞ்ஞானியும் ஸ்டெதெஸ்கோப்பைக் கண்டுபிடித்தவருமான ரெனே லென்னக், புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் என்று பட்டியல் நீள்கிறது.நம் நாட்டைச் சேர்ந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப், பகத் சிங்,கவிக்குயில் சரோஜினி நாயுடு, பிரபல பெண் கல்வியாளர் சாவித்ரிபாய் பூலே, சமூக செயற்பாட்டாளர் பாபா அம்தே போன்ற பலரும் காச நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் பலரின் இறப்புக்கு காசநோயே காரணமாக அமைந்தது. பெரும்பாலான நோய்கள் உருவாக நம் உடலில் அதற்கான கிருமிகள் நூற்றுக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செயல்பட வேண்டும். ஆனால் காசநோயை உருவாக்க அதற்கான பத்து அல்லது இருபது கிருமிகள் போதும். தவிர காச நோயால் பாதிக்கப்பட்டவர் அதற்கானசிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே வெகு எளிதாக அதைப் பிறருக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார். .ஒரு தேசத்தின் ஆரோக்கியம் முதல் பொருளாதாரம் வரை அனைத்தையும் சிதைத்துவிடும் இந்த நோயின் ஆபத்தை உணர்ந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் விதத்தில் ஒரு அற்புதமான திட்டத்தை தன்னுடைய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். “2025ஆம் ஆண்டிற்குள் நம் நாட்டிலிருந்து காச நோய்ஒழிக்கப்பட்டு விடும்!" என்று அறிவித்தவர், அதற்கான முயற்சியை 'நிக்க்ஷய் மித்ரா'அமைப்பு முன்னெடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். 2012 ஜூன் நான்காம் தேதி அறிமுகமான இந்த திட்டத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும் ஒவ்வொரு காச நோயாளிக்கும் மாதம் 500 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. கூடவே அந்த நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அது பரவாமலும் தடுக்கப்படுகிறது..முன்பெல்லாம் ரத்தம் மற்றும் சளியை சோதனைக்கு அனுப்பினால் சில நாட்களுக்கு பிறகுதான் காசநோய் பாதிப்பு தொடர்பான உண்மை தெரிய வரும். ஆனால் சமீபத்தில் பத்தே நிமிடங்களுக்குள் இந்த நவீன சோதனையின் முடிவு தெரிய வந்துவிடுகிறது. இதன் காரணமாக விரைவிலேயே உரிய மருந்துகளை அளித்து அந்த நோய் முற்றிய கட்டத்துக்கு செல்லவிடாமல் தடுக்க முடிகிறது. என்னதான் மருத்துவ வசதிகள் இருந்தாலும் மக்களிடம் அதற்கான விழிப்புணர்ச்சி இல்லாமல் இந்த நோயை முற்றிலும் ஒழித்து விட முடியாது. அதை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் பிரதான அம்சம். ஒன்றுபட்டு போராடுவோம், காச நோயை எதிர்த்து வெற்றிபெறுவோம்.