-அய்யப்பன்புயலைத் தாக்குப்பிடிப்பது போன்று உறுதியானதாகக் கட்டமைக்கப்படாமல் அவசரத்திற்கான தற்காலிகக் கூடாரமாக வலுவற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது உலககோப்பை இந்திய அணி. `Left - Right combination is always right' என்ற வார்த்தைகளுக்கேற்ப எதிரணி பௌலிங்கின் ரிதத்தை செட் ஆகவிடாமல் செய்ய ஓப்பனிங்கிலும் மிடில் ஆர்டரிலும் ஊடுருவி இருக்கும் இடக்கை பேட்ஸ்மேன்கள் முதல் தேவை. அதன்பின் எதிரணியின் வலக்கை பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களும் அவசியம். அதோடு இடக்கை - வலக்கை இருவரையுமே திணறடிக்கும் ஆஃப் மற்றும் லெக் ஸ்பின்னர்கள் வெரைட்டி பௌலிங்கைக் கொண்டு வந்து விக்கெட்களை வீழ்த்தவும் திருப்புமுனைகளைக் கொண்டு வரவும் உதவுவார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக எக்ஸ் ஃபேக்டராக ஓரிரு வீரர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த எல்லா இலக்குகளையும் இந்திய அணி எட்டி இருக்கிறதா?. ரிசர்வினையும் உள்ளடக்கி ஆசியகோப்பையில் இடம்பெற்றவர்களில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ப்ரஷித் க்ருஷ்ணா ஆகிய பெயர்களை மட்டும் அடித்துவிட்டு மீதமுள்ளவர்களை உலககோப்பை அணிக்காக அறிவித்திருக்கிறது இந்தியா. சமீபத்தில் கேப்டன் ரோஹித்கூட, "உலககோப்பைக்கான 15 வீரர்களினை இறுதி செய்த பின்பே இங்கே ஆட வந்திருக்கிறோம்" என்று கூறியிருந்தது இதனால்தான். ஏறக்குறைய எல்லோருமே எதிர்பார்த்த அணிதான். எனினும் அது சவாலானதாக இல்லை என்பதுதான் பெரிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது..இந்திய டாப் ஆர்டர் இடக்கை வேகப்பந்து வீச்சாளரை சமாளிக்க பெரிதாகத் திணறுகிறது. ஓப்பனராக தவான் இருந்தவரை அவர்களை அவர் டீல் செய்ய ரோஹித் செட்டிலாகி ரன்களை சேர்ப்பார். தவானும் கூடவே ரிசப் பண்டும் இல்லாததால் டாப் 3 மொத்தமும் மட்டுமல்ல மிடில் ஆர்டரும் சேர்த்து மொத்தமாகவே இடக்கை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் எதிரணி பௌலிங் யூனிட்டின் வேலை சுலபமாக விக்கெட்டுகள் வரிசையாக விழுகின்றன. இடக்கை பேட்ஸ்மேன்கள்தான் விக்கெட் விழுவதற்கான வேகத்தடை எனப் புரிந்தும் அதற்கான தீர்வினை தேர்வுக்குழு கண்டறியவில்லை, இஷான் கிஷன் மட்டுமே ஒரே ஆறுதல்..ஸ்பின் பந்துகளை சுலபமாக சமாளிக்கும் ஸ்ரேயாஸ் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பது `நம்பர் 4'-க்கான கேள்விக்குறியை மட்டுமல்ல மற்றும் பல இடங்களுக்கான குழப்பங்களையும் தீர்த்துள்ளது. ஓரளவு பேட்டிங் ஆர்டரை முடிவு செய்யவும் இது வழிவகை செய்தது. நான்காவது இடத்தில் 47. 4 ஆவரேஜோடு ரன்களைக் குவித்துள்ள ஸ்ரேயாஸ் எல்லா வகையான ஸ்பின் பௌலிங்கையும் ஒருகை பார்ப்பவர். 2019 உலக கோப்பைக்கு பின்பாக ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது ஸ்ட்ரைக்ரேட் 103. இது அதே இடத்தில் ஆடியுள்ள டாப் 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்களோடு சேர்த்து ஒப்பிடும் போதுகூட இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எய்டன் மார்க்ராம் மட்டுமே 107.5 ஸ்ட்ரைக்ரேட்டோடு ஸ்ரேயாஸுக்கு முன்பாக இருக்கிறார். எனவே "மிடில் ஆர்டர் உங்களை வரவேற்கிறது" என ஸ்பின்னர்களுக்கு ஸ்ரேயாஸ் சவால் விடுப்பார்..மே மாதத்தில் இருந்து களத்திலேயே கால் பதிக்காமல் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் கேஎல் ராகுலுக்கு அணியில் இடம் தரப்பட்டுள்ளது. 2020-ல் இருந்து ஆடியுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் அவரது ஆவரேஜ் 56.5 என்பதுவே தேர்வுக்குழுவை அவருக்கு சம்மதம் சொல்ல வைத்துள்ளது. அவருக்கு பேக்கப்பாக இஷான் கிஷனும் இடம் பெற்றிருக்கிறார். ஒருவேளை ராகுலால் ஆடமுடியாத சூழல் உருவானால் இஷானைக்கூட பயன்படுத்தலாம் என்பதனை கடைசியாக அவர் ஆடிய நான்கு போட்டிகளில் ஆடித்த நான்கு அரைசதங்களும், குறிப்பாக நடப்பு ஆசியகோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஆட்டமும் பரிந்துரைக்கின்றன. ஆசியகோப்பையிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ராகுல் சோபிக்காவிட்டால் அவருக்கு பதிலாக இஷானையே பயன்படுத்தலாம் என்ற எண்ணம்கூட அணி நிர்வாகத்திற்கு துளிர்விடலாம். .காயத்திலிருந்து மீண்டு எப்படி ஆடப்போகிறாரோ என்ற சந்தேகம் சூழும் ராகுல்கூட சேர்க்கப்பட்டிருக்க எல்லா தகுதியுமுடைய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதுதான் புரியாத புதிர். இவ்வளவுக்கும் ஒருநாள் போட்டிகளில் 20-களில் மட்டுமே சூர்யக்குமார் யாதவின் பேட்டிங் ஆவரேஜ் சுற்றி வருகிறது. இருப்பினும் தயக்கமே இல்லாமல் தேவைப்பட்டால் டிரம்ப் கார்டாக மாறுவார் என்ற நம்பிக்கையில் அவர் அணிக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் `Floater' ரோலில் களமிறங்கிகூட வெவ்வேறு கட்டங்களில் தேவைக்கேற்ப கைகொடுப்பவரான சஞ்சு சாம்சனோ மீண்டும் ஓர் உலககோப்பையில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். டாப் ஆர்டர் ஜொலிக்குமா, மிடில் ஆர்டர் சமாளிக்குமா என்ற அச்சம்தான் பேட்டிங் லைன் அப்பை நீட்டும் கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவை தள்ளியிருக்கிறது. விளைவு தாக்கூர் அணிக்குள் இடம்பெற்றிருக்கிறார். பிளேயிங் லெவனிலும் இது நிகழலாம், 8 + 3 கணக்கோடு அணி களமிறங்கலாம். அச்சமயத்தில் பேட்ஸ்மேனாக மட்டுமல்ல பௌலராகவும் அவரிடம் அணியின் எதிர்பார்ப்பு அதிகம். பும்ரா முழுமுதல் பௌலராக பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் அவரோடு இணையும் சிராஜ் ஃபாஸ்ட் பௌலிங்கை தூக்கி நிறுத்துவார். எனினும் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாத சந்தர்ப்பங்களில் வேகப்பந்துவீச்சில் தாக்கூரையும், பாண்டியாவையுமே அணி பெரிதும் நம்பும். பார்ட்னர்ஷிப்களை உடைப்பது தாக்கூரின் பலம் என்றாலும் 5.8 என்ற அவரது சமீபத்திய எக்கானமி சற்றே நெருடுகிறது. பாண்டியாவாலும் அந்தளவு அச்சுறுத்த முடியுமா என்பதும் சந்தேகமே! .போதாக்குறைக்கு தாக்கூரின் வரவு அஷ்வின் மற்றும் சஹாலுக்கான இடத்தையும் இல்லாமல் செய்துவிட்டது. என்னதான் ஜடேஜா மற்றும் அக்ஸர் இருக்கிறார்கள் என்றாலும் கூடுதலாக ஒரு பிரதான ஸ்பின் பௌலர் இருப்பது இந்தியாவில் ஆடுகையில் கூடுதல் பலம்தான். குறிப்பாக "சென்னையிலே நடக்கும் போட்டியில் அஷ்வின் இல்லாமல் எப்படி? சஹால் லெக் ஸ்பின்னராக வெரைட்டியைக் கொண்டு வருவாரே?" என பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்தாலும் `பேட்டிங் நீளம்' என்ற ஒற்றைக்காரணம் அதற்குரிய கதவுகளை எல்லாம் தாழிட்டுள்ளது. இன்னொரு பக்கம், குல்தீப் வெர்ஸஸ் சஹால் விவாதங்களும் ஓய்ந்தபாடில்லை. இறுதியாக, 8 + 3 என களமிறங்க வேண்டுமா அல்லது 7 + 4 தானா என்பதனை எல்லாம் பேட்ஸ்மேன் பேரடைஸா அல்லது பௌலர்களுக்கு வரமளிப்பதா, அதிலும் ஸ்பின் பௌலிங்கிற்கு உரியதா அல்லது வேகப்பந்துவீச்சு கோலோச்சுமா என்பது போன்ற பிட்சின் இயல்புகளும் எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களே முடிவுசெய்யும். .ஒட்டுமொத்தமாக பேட்டிங் மீதான சந்தேகங்கள்தான் பௌலிங்கையும் ஆட்டங்காண வைத்து சற்றே பேலன்ஸ் இல்லாத அணியினை இறுதிசெய்ய வைத்துள்ளது. சாம்சன் மற்றும் சஹாலுக்கான மறுப்புகள் எல்லாம் பயத்தின் விளைவுகளே. ஆக அட்டாக்கிங் அணியாக களமிறங்காமல் சற்றே டிஃப்ன்சிவ் அணுகுமுறையையே இந்தியா கையிலெடுத்துள்ளது. செப்டம்பர் 28 வரை இதில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றாலும் பெரும்பாலும் இந்தியா அத்தகைய ரிஸ்க் எடுக்க தயங்கும். ரோஹித்தின் மாஸ்டர் நகர்வுகளையும், வீரர்களின் ஒருங்கிணைப்பையும் கொஞ்சமாக அதிர்ஷ்டத்தையும் நம்பியே இந்தியா களமிறங்க உள்ளது. "Fortune Favours the brave" என்பார்கள். அச்சத்தால் அமைக்கப்பட்டுள்ள அணியின் மேல் அதிர்ஷ்டத்தின் கருணை இருக்குமா? உண்மையில், வென்றால் ஆச்சரியம், தோற்றாலும் அதிர்ச்சி இல்லை என்பதே தற்போதைய இந்திய ரசிகர்களின் நிலை.