‘சந்திரயான் 3’ வெற்றியின் நம் கொண்டாட்டமே திகட்டத் திகட்ட தீராத நிலையில், பி.எஸ்.எல்.வி. சி&57 ராக்கெட் செப்டம்பர் 2 அன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது, சுமந்துசென்ற ‘ஆதித்யா எல்&1’ விண்கலம் சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வுசெய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்தது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.நெருப்புக்கோளமாக உள்ள சூரியனில் விண்கலம் எப்படி தரையிறங்கும் என்பது பலரது கேள்வி. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... நிலவில்.‘சந்திரயான் 3’ தரையிறங்கியது போன்று, சூரியனில் இந்த விண்கலம் தரையிறங்காது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ‘லக்ராஞ்சியன் புள்ளி எல் 1’ என்னும் இடத்தில்தான் இந்த விண்கலம், சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இதில் பொருத்தப்பட்ட கருவிகள் சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.இதில், தமிழர்களாகிய நமக்கு இரட்டைப் பெருமை. ‘சந்திரயான்&3’ திட்ட இயக்குநராக இருந்தவர் வீரமுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதேபோல் ‘ஆதித்யா எல்&1’ விண்கலத்தின் திட்ட இயக்குநராகத் திகழ்ந்த பெண்மணி நிஹார் சாஜியும் தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவரே. இவர்கள் இருவரும் அரசுப் பள்ளியில் பயின்றுதான் இன்றைக்கு வானளந்துகொண்டிருக்கின்றனர்.இந்த விண்வெளி ஆய்வைப் போன்ற வெற்றியைத் தொடர்ந்து, அனைத்துத் துறைகளிலும் இந்தியா இன்னும் இன்னும் கூடுதலாக வெற்றிவாகை சூடவேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் பேராவல்!