- லியோ சிவகுமார்பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வரக்கூடியவர் திண்டுக்கல் ஐ லியோனி. கரகரத்த குரலில் காமெடி, பாட்டு என பட்டிமன்றத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர். அவருடைய மகன் லியோ சிவகுமார், ‘அழகிய கண்ணே’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அவரிடம் பேசினோம்....அப்பா பட்டிமன்றப் பேச்சாளர். அவர் வழியில போகாம, சினிமாவைத் தேர்ந்தெடுத்தது ஏன்? “ஸ்கூல், காலேஜ்ல பேச்சுப் போட்டிகள்ல பேசிருக்கேன். அப்பா ஒரு லெஜண்ட். அப்பாவோட இடத்தை நான் பிடிக்க முடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, கலைத்துறைக்குப் போகணும்கிறதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா ஆர்வம் இருக்கு. நிறைய படங்களுக்கு ஆடிஷன் போயிருக்கேன். கரெக்ட்டா சொல்லணும்னா, ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு ஆடிஷன் அட்டண்ட் பண்ணிருக்கேன். ஆனாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் தயார் ஆகாம இருந்தேன்.தொடர்ந்து வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தப்ப ‘அநீதி’னு ஒரு குறும்படத்துல நடிச்சேன். அதை இயக்குநர் சீனு ராமசாமிதான் ரிலீஸ் பண்ணார். அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு, ‘மாமனிதன்’ படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். விஜய் சேதுபதி கூடவே அம்பாசிடர் கார்ல வர்ற கேரக்டர்ல நடிச்சேன். அதுதான் என்னோட முதல் படம். தொடர்ந்து மு.மாறன் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் நடிச்ச ‘கண்ணை நம்பாதே’ படத்துல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அப்புறம்தான் இந்த ‘அழகிய கண்ணே’ படத்துல கதையின் நாயகனா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. ஹீரோவா நடிக்கணும்னு நான் சினிமாவுக்குள்ள வரலை. ஆனா, அதை நோக்கி சூழ்நிலை அமைஞ்சுது. சீனு ராமசாமி சாரோட தம்பிதான் ‘அழகிய கண்ணே’ படத்தோட இயக்குநர் விஜயகுமார். ‘இந்தக் கதைக்கு லியோ பொருத்தமா இருப்பான்’னு அவர் நினைச்சு என்கிட்ட கதை சொன்னார். எனக்கும் கதை பிடிச்சிருந்தது. ரெண்டு பேரும் சேர்ந்துதான் தயாரிப்பாளர் தேடிக்கிட்டு இருந்தோம்..அந்த சமயத்துல ‘மாஸ்டர்’ படத்தோட இசை வெளியீட்டு விழா நடந்துச்சு. நான், அப்பா எல்லாரும் வீட்ல உட்கார்ந்து டிவில அதைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ‘தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என்னோட ஸ்கூல் நண்பர்’னு அப்பா சொன்னார். ‘நாங்களும் புரொடியூஸர் தேடிக்கிட்டு இருக்கோம். அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா?’னு அப்பாகிட்ட கேட்டேன். ஆனாலும், ‘மாஸ்டர்’ மாதிரியான பெரிய படம் பண்றவங்க, சின்ன படம்லாம் பண்ணுவாங்களானு ஒரு தயக்கம் இருந்துச்சு. கேட்டுப்பார்ப்போம்னு துணிஞ்சு இறங்கி, தயாரிப்பாளரை அப்ரோச் பண்ணோம். கதை கேட்டதும் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ‘எங்களோட இன்னொரு பேனர்ல பண்றோம்’னு உறுதி தந்தாங்க. அதேமாதிரி கேட்டது எல்லாத்தையும் தந்து படத்தை பிளான் பண்ணது மாதிரி முடிச்சுக் கொடுத்தாங்க. ‘இராவணக் கோட்டம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணா ரவி சார் இந்தப் படத்தை ரிலீஸ் பண்றார்..‘அழகிய கண்ணே’வின் கதை என்ன? “கதைப்படி நான் மதுரைல இருக்குற பையன். சினிமா மீது எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால, ஊர்லயே ட்ராமா போடுவேன். அதுல புரட்சிகரமான கருத்துகளையும் சொல்வேன். என் ஊர்லயே ஒரு பொண்ணுக்கு என் மேல காதல் ஏற்படுது. ‘இங்க பண்றதை, சென்னைக்குப் போய் சினிமாவுல பண்ணா 100 பேருக்குத் தெரியுறது லட்சம் பேருக்குத் தெரியவரும்’னு அட்வைஸ் பண்ணுவாங்க. நானும் கெளம்பி சென்னைக்கு வருவேன். இங்க வந்ததும் சினிமாவுல வாய்ப்பு கிடைக்காம நான் கஷ்டப்படுவேன். அதேசமயம், என் காதலிக்கு சென்னையில வேலை கெடைச்சிடும். அவங்களும் நானும் தனித்தனியா இருக்க முடியாத சூழல்ல, கல்யாணம் பண்ண வேண்டியது கட்டாயமாயிடும். அப்படியே குழந்தையும் பிறந்திடும். ஐடில வேலை பார்க்குற மனைவிக்கும், சினிமாவுல வாய்ப்பு தேடிப் போராடுற கணவனுக்கும் இடையில நடக்குற பிரச்னைகள்தான் ‘அழகிய கண்ணே’ படத்தோட மீதிக்கதை.”.சினிமாவுல நடிக்கிறதுக்கு அப்பா எதுவும் சொல்லலையா? “காலேஜ் படிச்சு முடிச்சதுமே சினிமாவுக்கு வர்றதுதான் என் கனவா இருந்துச்சு. ஆனா, ‘இந்த வயசுல சினிமாவுக்குப் போனா, உனக்கு பக்குவம் பத்தாது. கொஞ்ச நாளைக்கு படிச்ச படிப்புக்கேத்த வேலை பாரு. அதுக்கு அப்புறமும் உனக்கு சினிமாவுல ஆர்வம் இருந்தா, நானே உன்னைச் சேர்த்துவிடுறேன்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே முதல்ல ஒரு வருஷம் வெளிநாட்டுல வேலை பார்த்தேன். அப்புறம் ஜார்கண்ட்ல ஒரு வருஷம், சென்னைல 4 வருஷம் வேலை பார்த்தேன். அப்படியே எம்.பி.ஏ.வும் முடிச்சேன். ஆனாலும், சினிமா ஆசை என்னைவிட்டுப் போகலை. அப்பா முன்னாடி போய் நின்னேன். அவரும் என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, சினிமாவுக்குப் போறதுக்குப் பச்சைக்கொடி காட்டிட்டார்.”.புதுமுக நடிகருக்கு அவ்வளவு ஈஸியா ஹீரோயின் கிடைச்சிருக்காதே... “உண்மைதான் ப்ரோ. நிறைய ஹீரோயின்கள் கதையைக் கேட்டுகூட நடிக்க ஒத்துக்கல. ஏன்னா, காலேஜ் கேர்ள், ஐடில வேலை பார்க்குற பொண்ணு, மனைவி, தாய்னு நான்கு விதமான பருவங்கள்ல ஹீரோயினோட கேரக்டர் வடிவமைக்கப்பட்டுருக்கு. இது எல்லாத்தையும் சமாளிக்கிற மாதிரி ஒரு ஹீரோயின் அமையவே இல்ல. ஆனா, சஞ்சிதா ஷெட்டி கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டாங்க. அவங்க கேரக்டர் டிஸைன் பண்ணது மாதிரியே நடிச்சும் அசத்திட்டாங்க.”.இயக்குநர் பிரபு சாலமன் இந்தப் படத்துல நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டோமே..? “இந்தப் படத்துலயே எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியமா அதை நினைக்குறேன். படம் முழுவதும் வர்ற மாதிரியான கேரக்டர் அவருக்கு. அப்புறம், விஜய் சேதுபதி அண்ணா இந்தப் படத்துல கேமியோ பண்ணிருக்கார். க்ளைமாக்ஸ்ல விஜய் சேதுபதியாவே அவர் வருவார். சிங்கம்புலி, அமுதவாணன், ஆண்ட்ரூஸ்னு காமெடி நடிகர்களும் படத்துல நடிச்சிருக்காங்க.”படத்தோட டெக்னீஷியன்ஸ் பற்றிச் சொல்லுங்க... “இந்தப் படத்துல நானும் இயக்குநரும் மட்டும்தான் புதுசு. மத்தபடி எல்லாருமே ஏற்கெனவே நிறைய படங்கள் பண்ணவங்க. இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன், நிறைய ஹிட் படங்களுக்கு இசையமைச்சவர். ஒளிப்பதிவாளர் அசோக் குமார், ‘காடன்’, ‘கும்கி 2’, ‘இடி முழக்கம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசினு எல்லாரும் கொண்டாடக்கூடியவங்க பாடல்கள் எழுதிருக்காங்க. சில்வா மாஸ்டர் ஸ்டண்ட் வடிவமைச்சிருக்கார். படத்துல தரமான ரெண்டு ஃபைட் இருக்கு.”- சி.காவேரி மாணிக்கம்