நல்ல சினிமா என்பது ஒரு சின்ன சம்பவம், குழப்பமில்லாத திரைக்கதை, யதார்த்தமான காட்சிகள், பொருத்தமான மனிதர்கள், இயல்பான உரையாடல்கள், உண்மையான நிகழ்விடம், உறுத்தாத தொழில் நுட்பம், அவ்வளவுதான் என்பதை அழகாக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. பிரேம்ஜி, பேராசிரியர் ஞானசம்பந்தன் தவிர பெருசா தெரிந்த முகங்கள் யாருமில்லை. ஆனால் படத்தில் வரும் வில்லங்கமான பாட்டி, கிரிமினல் போலீஸ்காரர்கள், அப்பாவி கைதிகள், ஐந்து கொலைகாரர்கள், அன்பான அக்கா, பொறுப்பான மாமா, வழக்கமான காதலி என ஒவ்வொருத்தரும் நம் மனதில் நிற்கின்றனர். அந்த போலீஸ் ஸ்டேஷனும், பொட்டல் காடும்கூட நாம் தினமும் போய் வந்த இடம் மாதிரி பழகிவிட்டது. வெட்டுபட்டவன் யாரு என்னன்னு தெரியாது, வெயில்ல கிடந்தால் பொணம் என்னத்துக்காகும்னு அதை இழுத்து நிழலில் போட்டுவிட்டு, அதன் அருகில் கிடந்த செல்போன், கையில் இருந்த மோதிரம், கழுத்தில் கிடந்த சின்ன செயின் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போலீஸிடம் ஒப்படைக்க வரும் அப்பாவி பிரேம்ஜி, அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்னைகளும், அந்த போலீஸ் ஸ்டேஷனிலும், கோர்ட்டிலும் நடக்கும் கூத்துக்கள் தான் படம்..போலீஸ் ஸ்டேஷனையும், கோர்ட் நடைமுறைகளையும் நக்கல் நையாண்டியுடன் இதைவிட யதார்த்தமாக காட்டவே முடியாது.படம் முழுக்க பிரேம்ஜி பட்டய கிளப்புகிறார். அவரின் காதலி, அக்கா, மாமா என அனைவரும் அசத்தல். ஏட்டு குபேரனாக வரும் சித்தன் மோகன் செம. ஜட்ஜ் ஞானசம்பந்தன் நிஜமான மாஜிஸ்ட்ரேட், ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, கலை என எல்லாம் சிறப்பு. படத்தின் டைட்டில்தான் பெரிய மைனஸ். கொலை செய்ய பயன்படுத்திய அறுவாளை எடுத்துக் கொண்டு ஏன் பிரேம்ஜி ஓடினார்? களவுபோன நகை எங்கிருந்தது? சொல்லியிருக்கலாம்… சத்திய சோதனை - எளிய சாதனை3.5 ஸ்டார்