வாழ்க்கையில் பணம் இருந்தா எப்படி இருக்கும்; இல்லன்னா எப்படியிருக்கும்? அதான் டக்கர். ஏழையா பிறந்து ஏழையாவே சாக விரும்பாத சித்தார்த் பணக்காரனாகும் வெறியில் சென்னைக்கு வருகிறார்...பெரிய கோடீஸ்வரனுக்கு மகளா பிறந்து, பணத்துக்கும், பணக்கார ஆம்பிளைகளுக்கும் அடிமையாக வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்கிற விரக்தியில் சிகரெட், கஞ்சா, தண்ணி என மனம் போல் வாழ்கிறார் திவ்யன்ஸா கவுஸிக்...இந்த இரு துருவங்களும் எங்கே, எப்படி, சந்திக்கின்றன, அதற்குப் பின் என்ன நடக்கிறது? என்பதுதான் கதை..கோர்ட் ஷூட் போட்ட பென்ஸ் கார் டிரைவராக சித்தார்த் செம ஸ்மார்ட். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார், ரொமான்ஸில் கூல் அண்ட் சில். ஏழை சித்தார்த்தோட பயமும், கோபமும் வாவ்...திவ்யன்ஸா கவுஸிக் அப்படியே கஜினி அஸின். கோடீஸ்வர பெண்ணாக அவர் பேசும் கெட்ட வார்த்தை கூட அவ்வளவு அழகு. “கடத்துறவன் கும்பலா போடுவான், கட்றவன் காலத்துக்கும் போடுவான்”னு, டார்க்கான டயலாக்கை எல்லாம் போல்டா பேசி கிறங்கடிக்கிறார். சித்தார்த்துடன் ஹோட்டல் ரொமான்ஸ் சீனில் இளசுகளின் இதயத் துடிப்பை எகிறவைக்கிறார்.ஹீரோவுக்கு ஒரு வீணாபோன ஃப்ரண்ட்னா ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் தான். அவரோட எலி எஃப். எம். கலாட்டா கலகல... யோகிபாபு காமெடி சுமார். .முதல் கார் சேஸிங் செம த்ரில், ரியலிஸ்டிக். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எல்லாரும் கடுமையாக உழைத்திருக்கிப்றனர்.வில்லன்கள்தான் பெரிய மைனஸ். காமெடியும் இல்லாமல் சீரியஸும் இல்லாமல் ரெண்டும் கெட்டான்கள். அதனாலயே கிளைமேக்ஸில் கிக் இல்லை. அந்த சீனாக்காரன் முதலாளியை காட்டாதவரை கெத்து, காட்டியதும் பல்பு. ஃபீல் குட் மூவி, பெட்டர் மேக்கிங், இம்பாக்ட்தான் பெருசா ஒண்ணுமில்லை. டக்கர் – டம்மி துப்பாக்கி2.5 ஸ்டார்.