ஒரு நானூறு பக்கத்துக்கு எதுகை மோனையா வசனத்தை எழுதிவிட்டு, அதை பேசுறதுக்கு கிருஷ்ணா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கே.ஆர்.விஜயா, பவர் ஸ்டார் உட்பட பத்துப் பதினைந்து ஆர்டிஸ்டை புக் பண்ணிட்டு, கிடைச்ச கால்ஷீட்டை பொறுத்து அப்பப்ப காட்சிகளை ரெடிபண்ணி, ஷூட்பண்ணி, எடிட்பண்ணி, ரெண்டேகால் மணி நேர படமாக்கி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். டி. பிளாட்பார கடையில் பிரியாணி அண்டாவை ஓயாம கரண்டியால தட்டிகிட்டே இருக்கிற மாதிரி ஒவ்வொரு சீன்லயும் ஆளாளுக்கு காமெடி பண்றேன்னு கத்திக்கிட்டே இருக்காங்க… ‘கயித்த கட்டி எறுமையை இல்ல, எமனையே இழுத்துருவேன்...’ ‘யானையில் வர்றான்னு சொன்ன, குட்டி யானையில வர்றான்... ’ இப்படி படம் முழுக்க 200 எக்ஸ்க்ளூஸிவ் பன்ச்... பைட்டு, பாட்டு, சேஸிங்லாம்கூட இருக்கு. அதுக்குள்ள கதைன்னு ஒண்ணு இருந்தது கிளைமேக்ஸ்ல தான் நமக்கே தெரிஞ்சது..தங்கச்சி கஸ்தூரி காதலிச்சு, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டது ராயர் ஃபேமிலி அண்ணன் ஆனந்த்ராஜுக்கு அவமானமாகி விடுகிறது. அதனால் ஊருக்குள்ள இனி ஒரு பய காதலிக்கக் கூடாதுன்னு முடிவு பண்றார். மீறி ஃபேஸ்புக்கில் காதலிச்சால்கூட பிரித்து மேய அடியாள் கூட்டம், காதலர்கள் சேரவே கூடாதுன்னு மொட்டை ராஜேந்திரன் தலமையில் ஒரு அரசியல் கட்சியும் நடத்துகிறார். அதுக்கு பொதுச்செயலாளர் கிருஷ்ணா. ஆனால், அவரையே மூணு பொண்ணுங்க காதலிக்க, அதில் ஒருத்தியான காதலின் எமன் ஆனந்த்ராஜின் மகள் சரண்யாவை அவர் எப்படி கல்யாணம் பண்ணிக்கொள்கிறார் என்பதுதான் கிளைமேக்ஸ்... “இது ஒரு காமெடி படம், லாஜிக்லாம் பார்க்கக் கூடாது”ன்னு இயக்குநர் சொல்லி விட்டார், அதையும் மீறி விமர்சனத்துல மட்டும் என்ன மேஜிக் பண்ணிற முடியும்... ராயர் பரம்பரை - ட்ராயர் பரம்பரை 1.5 ஸ்டார்