‘புருஷன் வேண்டாம் புள்ள வேணும்... அதுக்காக தத்து எடுத்துக்க மாட்டேன், பெத்துதான் எடுப்பேன்!’ - இது அனுஷ்கா பாலிஸி. அதுக்கு என்ன காரணம்? எப்படி அந்தப் புள்ளய பெத்துக்கறார்? என்பது தான் ‘மிஸ்.ஷெட்டி மிஸ்டர். பாலி ஷெட்டி’. படம் முழுக்க புள்ள பெத்துக்க எத செய்யணுமோ அதைத் தவிர எல்லாத்தையும் செய்கிறார் அனுஷ்கா. ரொம்ப நாளைக்கப்புறம் அவரை திரையில் பார்ப்பதே அழகான அனுபவம். கொஞ்சம் மெலிந்து ரொம்ப அழகாக இருக்கிறார். ஒரு சிக்கலான கேரக்டரை அவர் சிம்பிளா, எலிகண்டா கேரி பண்ணி போற விதம் செம ஸ்மார்ட். சச் ய கிரேட் ஆர்டிஸ்ட். படத்துல ஹீரோவுக்கு அந்த ஒண்ணைத் தவிர வேறு எந்த வேலையும் இல்ல. அளந்து சொல்லணும்னா அதிகபட்சம் 5 மில்லி அளவுக்கு நடித்தால் போதும். ஆனால் நவீன் பாலி ஷெட்டி நடிப்பை டிரம் டிரம்மா கொட்றார். அவரோட ஸ்டாண்டப் காமெடியில் சிரிப்பைத் தவிர எல்லாம் வருகிறது. மகன் ஸ்பெர்ம் டோனர் ஆனதை நினைத்து சந்தோஷப்படும் ஒரே அப்பா அம்மா அவரோட பெற்றோர்களாகத்தான் இருக்கும். அப்பா சொல்லி அனுஷ்காவை தேடி அவர் லண்டன் போறதெல்லாம் காமெடியில் தான் சேர்க்கலாம். புள்ள பெத்துக்க புருஷன் தேவை இல்ல தான், ஆனால் புள்ளைக்கு அப்பா தேவையா இல்லையா என்பதைப் பற்றி இயக்குநர் மகேஷ் பாபு ஒரு .5 எம்.எல்.கூட கவலைப்படாதது, கையில வந்த கேட்சை கோட்டை விட்ட கதைதான். அஞ்சு நிமிஷத்துல முடியிற கதையை இரண்டு மணி நேரத்துக்கு இழுத்தது சரி; கிளைமேக்ஸில் பாட்டி வடை சுட்ட கதையாய் பழைய செண்டிமெண்ட்டை திணித்ததுதான் புளிச்ச ஏப்பம் வருது. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி - காரியமில்லாத வீரியம்2.5 ஸ்டார்