‘உன்னை என் பொண்ணு மாதிரி பாத்துக்குவேன், பூ மாதிரி வச்சுக்குவேன்னு பொண்ணு பார்க்க வரும் பொழுது மாமியார்கள் அள்ளிவிடும் சென்டிமென்ட் டயலாக்குகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க... லவ், டேட்டிங்னு பையனை சலிச்சு எடுத்து புருஷனாக்குவது போல் மாமியாரையும் பழகிப் பார்த்து, வீட்ல விளக்கேத்துங்க... ஏன்னா சரக்கடிக்கிற மருமகளும், சாம்பிராணி போடுற மாமியாரும் ஒரே வீட்ல குப்பை கொட்ட முடியாது!’ என்பதுதான் எல்.ஜி.எம்.மின் தத்துவம். ஹரீஷ் கல்யாண் - இவானா ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் காதல் ஜோடிகள். ‘இரண்டு வருடம் டேட்டிங் பண்ணுவது, அதற்கு பின்பும் காதல் தொடர்ந்தால், கல்யாணம் பண்ணிக் கொள்வது; இல்லை என்றால் பிரிந்து செல்வது’ என இருவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்... இரண்டு வருடம் கழித்து அந்த ஒப்பந்தம் காலாவதியாகும் நாளில் இவானாவுக்கு மோதிரம் போட்டு கல்யாணத்தை உறுதிப்படுத்த நினைக்கிறார் ஹரீஷ். நினைத்தபடி மோதிரத்தையும் போட்டு விடுகிறார். சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது... அந்த சமயத்தில் ஒரு புதிய நிபந்தனையை பொடுகிறார் இவானா... அதைக் கேட்டு ஆடிப்போன ஹரீஷ் தெரித்து ஓடுகிறார்... அந்த நிபந்தனை என்ன? பின் நடந்தது என்ன? என்பதுதான் ‘லெட்ஸ் கெட் மேரேஜ்...’.குமுதத்தில் மட்டும் இதுபோல் ஒரு லட்சம் ஒருபக்கக் கதைகள் வந்திருக்கும். அதில் இருக்கும் ஸ்வாரஸ்யம்கூட இந்த இரண்டரை மணி நேர படத்தில் இல்லை. இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி குறைந்தபட்சம் விசு, பாக்கியராஜ் படங்களையாவது பார்த்திருக்கலாம். நடிப்பில் இவானாவும் நதியாவும் ஓ.கே. யோகிபாபு வேஸ்ட்… கூர்க் ட்ரிப்பில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் சகிக்க முடியவில்லை. உலகக்கோப்பையையே அசால்டாக ஜெயித்த தோனி, சினிமாவில் முதல் பந்திலேயே ஸ்டம்பிங் ஆகி, பெவிலியன் திரும்பியிருக்கிரார்..LGM - OMG2 Star