தனிமனித ஒழுக்கம் இல்லாத சமூகத்தில் குற்றங்களை தடுப்பதும் குறைப்பதும் கடினம். இதுதான் ‘இன்ஃபினிடி’ யின் மெஸேஜ்..இதை சொல்வதற்கு ராஜேஷ்குமார் நாவல் பாணியில், காணாமல் போகும் அரசாங்கத்தின் 40 கிலோ தங்கம், மாயமான இளம்பெண், அதுபற்றி போலீஸ் புகார் கொடுக்க வந்து பின் தலைமறைவாகும் பெற்றோர், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நிகழும் கொலைகள், கொலை செய்யப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர், இவை அனைத்தையும் துப்பறியும் சி.பி.ஐ.அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரியை கொல்லத் துடிக்கும் மர்ம நபர்கள், சி.பி.ஐ. அதிகாரிக்கு உதவி செய்யும் இளம் லேடி டாக்டர், மனித திசுக்களை வைத்து அவர் செய்யும் அதி நவீன ஆராய்ச்சி, எங்கோ ஒரு அனாதை இல்லத்தில் திடீர் திடீரென மரணமடையும் குழந்தைகள்... என ஏகப்பட்ட திருப்பங்கள், முடிச்சுகளுடன் ஒரு கதையை நன்றாகவே கற்பனை செய்திருக்கிறார் இயக்குநர் சாய் கார்த்திக். சி.பி.ஐ. அதிகாரியாக வரும் நட்டி மிக இயல்பாக நடித்திருக்கிறார். டாக்டராக வரும் வித்யா பிரதீப் அழகு. அவர் உண்மையிலேயே திசுக்களை ஆராய்ச்சி செய்து பி.ஹெச்டி. பட்டம் வாங்கியவர் என்பதால் அது தொடர்பான காட்சிகளை தெளிவாக விளக்குகிறார். முனீஸ்காந்த் தன் தொப்பைக் தடவும் காமெடியை இதிலும் தொடர்கிறார். ஒளிப்பதிவு இசை ஓ.கே. எடிட்டிங் ஷார்ப். கோட்டை விட்டது திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் தான். படத்தில் ஏகப்பட்ட முடிச்சுகளையும் திருப்பங்களையும் வைத்த இயக்குநர் அதை ரசிகர்களுக்கு புரியும்படி விளக்கத் தவறியதோடு, குழப்பியும் விட்டார். காணாமல் போன பெண்ணை பற்றிய வக்கிரமான ஃபிளாஷ் பேக், குழந்தைகளை அடித்துக் கொல்லும் கொடூரமெல்லாம் தேவையே இல்லாதது; நம்பும்படியும் இல்லை. புலனாய்வு என்ற பெயரில் பல காட்சிகளில் நட்டி சும்மா புகைவிட்டுக் கொண்டிருக்கிறார். இன்ஃபினிடி - நோ ரியாலிடி 2 ஸ்டார்