கூலிக்கு கொலை செய்வதை பரம்பரைத் தொழிலாக செய்து வந்த கணவன் ஒரு ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட, அப்பனை கொன்றவனை பழிவாங்க தன் பிள்ளைகளும் அறுவாளை தூக்கிவிடக் கூடாதே என்று கலைப்படும் அம்மா... அவள் நினைத்தது போலவே மூன்று மகன்களில் ஒருவன் மட்டும் கத்தியை கையில் எடுக்க, அதனால் ஏற்படும் பிரச்னைகள் வன்முறையிலிருந்து ஒதுங்கி நிற்கும் மற்ற சகோதரர்களையும் எப்படி அதற்குள் இழுத்து வருகிறது? அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? என்கிற சாதாரண பழிவாங்கும் கதைதான். ஆனால் அதற்குள் உலக தத்துவத்தை, அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயும் இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. இன்றைய குற்ற சமூகம் தனிமனித ஒழுக்க கேட்டால் மட்டும் உருவானதல்ல, கடந்த 50 ஆண்டுகால அரசியலால் உருவாக்கப்பட்டது என பழத்தில் ஊசியை பதமாக சொருகியிருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். அதுமட்டுமில்லாமல், படம் முழுக்க மனித நேயத்தை தூக்கிப் பிடிக்கும் அழுத்தமான வசனங்கள்... ‘பூசணிக்காயில் கத்தியை சொருகும் எவனும் கொலைகாரன் ஆகலாம்...’ ‘ கத்திவாங்க காசில்லாத நீ எல்லாம் ரவுடி.. ’என சாதாரண வசனங்கள் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டு, கூர்மையாக மனதில் பதிகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக வடசென்னை மக்கள் எப்படி வன்முறைக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கலை என எல்லாமே கச்சிதம். ரிஷி, உதய், ஸ்ரீநி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அம்மாவக வரும் பெண் அசத்தியிருக்கிறார். ஹீரோவின் காதலி எவனோடோ போவது, ஹீரோ வம்படியாக வந்து வில்லன் வண்டியில் ஏறுவது லாஜிக்கலாக இருந்தாலும் செயற்கை. துரை கொலை செய்யப்படும் காட்சியும், அந்த சாவு வீட்டில் நடக்கு சம்பவங்களும் கொஞ்சம் நீளம். டைனோசர்ஸ் – பலம் குறைவு; பற்கள் கூர்மை3 ஸ்டார்