க்ரைம் நாவல் உச்சத்துல இருந்த நைண்டீஸ்ல ஒரே புத்தகத்துல ரெண்டு மூணு நாவல்லாம் வரும். அதே மாதிரி நாலு க்ரைம் நாவல் வந்த ஒரு புத்தகத்துல பைண்டிங் கிழிந்து, பக்கம் எண்கள் இல்லாமல் கலைந்து போக, அதையெல்லாம் குத்து மதிப்பா அடுக்கி, படிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்.’ காக்டெயில் ஆஃப் ஸ்டோரீஸ்... வேலை போன அப்பா, விளையாட்டுப் பையன், அவனுக்கு ரெண்டு வெவரமான அக்கா, அக்காவோட போலீஸ் லவ்வர், அவர் தேடும் சைக்கோ கொலைகாரன்னு முக்கியமான நாலு, ஐந்து கேரக்டர்களுக்கும் நாலு விதமான கதை... அதில் ஆன்லைன் மோசடி, ஆர்கன் கடத்தல், சீட்டிங், சீரியல் கில்லிங், பழிவாங்கும் சைக்கோ, என படம் பல திசைகளில் போகிறது. ஆனாலும் முடியும் பொழுது நம்மை முட்டு சந்தில் நிறுத்தாமல் முக்கால் வாசி குழப்பத்தை தீர்த்து விடுகிறது. மீதி, செகண்ட் பார்ட் வந்தால்தான் தெரியுமாம்.. படத்தில் ஹீரோன்னு யாரையும் சொல்ல முடியாது. முக்கியமான கேரக்டர்ல ரியோ ராஜ், மூன் நிலா, குணாளன் மோர்கன் நடித்திருக்கிறார்கள். சிங்கப்பூர் ரஜினி மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் அற்புதம். சிங்கப்பூர் காட்சிகள் ஜிலீர். பின்னணி இசை ஓ.கே. காலை வாரியது காஸ்டிங்தான். அத்தனையும் அறிமுகமில்லாத முகங்கள். பலருக்கு எக்ஸ்பிரஷனே வரவில்லை. .இயக்குநர்கள் ஜோ, சர்ஜீத் சிங் இருவருக்கும் தமிழை விட ஆங்கிலம் தான் சரளம் என்பது, வசனங்களிலும் காட்சி அமைப்பிலும் தெரிகிறது. பல இடங்களில் லிப் ஸின்க் மிஸ்ஸிங். கொலை நடப்பதெல்லாம் கூத்துப்பட்டறை டிராமா மாதிரி இருக்கிறது. அதிலும் அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்ட் ரொம்ப ஓவர்… ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் – பிரேக் இல்லாத ஃபெராரி2 ஸ்டார்