-அய்யப்பன்நிலவின் மேற்பரப்பினை ‘சந்திரயான் 3’ ஆக்ரமித்து தனது ஒற்றன் ப்ரக்யான் வாயிலாக நோட்டமிடத் தொடங்கியிருந்தது.அதே தருணத்தில் தனது நகர்வுகளால் சதுரங்கக்காய்களை உரச விட்டு ப்ரக்ஞானந்தா தீப்பொறியைக்கிளப்பிக் கொண்டிருந்தார்..`Tiger of Madras' என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்னதாகவே இந்தியர்களுக்கு செஸ் பரிச்சயமான ஒன்று தான். இருப்பினும்,ஐந்து முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்ற அவரால் பலர் ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பினால் பலரும் சதுரங்கக் கட்டங்களுக்குள் சிறைபிடிக்கப்பட்டனர்.உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் வரையிலும் அவரது தாக்கம் நீண்டிருக்கிறது. மேக்னஸும் ஆனந்தைப் போலவே ஐந்துமுறை சாம்பியன் ஷிப்டைட்டிலைக் கைப்பற்றியிருப்பவர். அது மட்டுமின்றி செஸ்ஸின் மூன்று ஃபார்மட்களான Classical, Blitz, Rapid ஆகிய மூன்றிலுமே வல்லவராக வலம் வருபவர். அப்படிப்பட்ட 32 வயது நிரம்பிய ஜாம்பவான் ஆன மேக்னஸ் கார்ல்சனைதான், 18 வயதே ஆன ப்ரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பையில் அசைத்துப் பார்த்திருக்கிறார்..தலைப்புச் செய்திகளில் உலாவருவது ப்ரக்ஞானந்தாவுக்கு ஒன்றும் புதிதல்ல. எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகயூத் செஸ்சாம்பியன் ஷிப்பினை கையகப்படுத்தி வெள்ளை-கருப்புகாய்கள் உலவும் செஸ் உலகில், தனது அறிமுகத்தை அரங்கேற்றினார். அதன்பிறகு, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்ற போதும் அவரது வயது வெறும் 10 மட்டுமே. 13 வயதில் அடி எடுத்து வைக்கும் முன்பாகவே ‘கிராண்ட்மாஸ்டர்’ என்னும் இன்னொரு மைல்கல்லும் அவரது செஸ் பயணத்தை ஒளிரவைத்தது!குறைந்த வயதில் ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டம் பெற்ற இரண்டாவது வீரராகவும் (அப்போதையநிலையில்) பிரக்ஞானந்தா கொண்டாடப்பட்டார். 2019-ல் ELO ரேட்டிங்கில் ‘சூப்பர் கிராண்ட் மாஸ்டர்’ ஆவதற்கான 2600 வரையறையையும் எட்டிவிட்டார்..ப்ரக்ஞானந்தாவின் கரியர்கிராஃப் ஏறுமுகத்தில் எகிறத் தொடங்கியது.அவரது ஆட்ட நுணுக்கங்களும் திறன்களும் பன்மடங்காக பல்கிப் பெருகின. அந்த சமயத்தில் தான் கொரோனாவும் குறுக்கிட்டது.இருப்பினும் ‘Blessing in disguise’ எனக் குறிப்பிடுவதைப் போலவே எண்ணற்ற ஆன்லைன் தொடர்களில் பங்கேற்க அதுவே வாய்ப்பானது. அவர் ஏற்கெனவே மிளிர்ந்த ஒன்றை அந்தக் காலகட்டம் தான் மேலும் பட்டை தீட்டியது. ஆக, உண்மை என்னவெனில் அவரது வளர்ச்சியை கொரோனா வால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகத்தடையாக இல்லாமல் ராக்கெட்டேக் ஆஃப் ஆகும் ஏவுதளமாக அதுவே உருவெடுத்தது..அதற்கு முன்பாக அரசல் புரசலாக காற்று வாக்கில்காதில் விழுந்த அவரது பெயர் ஒளிரத் தொடங்கியதும் ஆன்லைன்ஆட்டங்களின் வாயிலாக இந்த சமயத்தில் தான்.2021-ல் மேக்னஸுக்கு எதிராக ஆட்டத்தை டிரா செய்த ப்ரக்ஞானந்தா, 2022-ல்‘Airthings Masters Rapid’ தொடரில் மேக்னஸை வீழ்த்திய போது தான் ஒரு நட்சத்திரம் சத்தமே இன்றிஉருவாகிக் கொண்டிருப்பது பலருக்கும் புரிந்தது. .தற்சமயம் தனது முதல் செஸ் உலகக்கோப்பையைக் கையிலெடுக்க ஆவலாக இருந்த மேக்னஸுக்கும் டிராபிக்கும் நடுவில் ப்ரக்ஞானந்தா விஸ்வரூபம் எடுத்து நின்ற போது தான் அவரது ஆட்ட வியூகங்கள் செறிவுற்று இருப்பது இன்னமும் தெளிவானது. பிரக்ஞானந்தா பிறப்பதற்கு முன்பாக வேகிராண்ட் மாஸ்டர் ஆக ஆனவர் மேக்னஸ் என்பது…ப்ரக்ஞானந்தா சந்தித்தது எப்படிப்பட்ட ஒரு போர் முனை என்பதை நமக்கு தெளிவுபடுத்தும்..இரு ஃபார்மட்டுகளில், மூன்று நாட்கள் நடைபெற்ற நான்கு போட்டிகளையும் அவர் எதிர்கொண்ட விதம் அவரது நிதானத்திற்கான சாட்சியாகவும் அமைந்தது. முக்கியமாக முதல் நாளில் மேக்னஸுக்கு ப்ரக்ஞானந்தா ஆட்டம் காட்டிய விதம் குறிப்பிடும் படியாகஇருந்தது .அக்ரஷிவான நகர்வுகள் இல்லை. இருபக்கமும் ஆற அமர நேரமெடுத்தே ஒவ்வொரு காயையும் நகர்த்தினர். அனுபவம் பொருந்திய மேக்னஸினையே விடாப்பிடியாக நேருக்கு நேர் நின்று மோதி ஆட்டம் காண வைத்தார் ப்ரக்ஞானந்தா. செஸ்ஜாம்பவானானகேஸ்ப்ரோவைஒருகணிப்பொறிசெஸ்ஸில்வீழ்த்தியபோதுஏற்பட்டதற்குஇணையானபிரமிப்பைப்ரக்ஞானந்தாஏற்படுத்திவிட்டார். கடந்த ஆண்டு ஒலிம்பியாட்டின் போது கூட மேக்னஸுக்கு எதிராக ஆன்லைனில் நிகழ்த்தியதை, ஆஃப்லைனில் ப்ரக்ஞானந்தாவால் நிகழ்த்த முடியுமா என்ற பேச்சு எழுந்தது. இரண்டு Blitz டைபிரேக்குகள் உள்ளிட்ட மூன்று ஸ்ட்ரெய்ட் போட்டிகளை வென்று மேக்னஸை ப்ரக்ஞானந்தா வென்றார்.அதே அச்சமின்மையை இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் அவரிடம் காண முடிந்தது..இவ்வளவுக்கும் இன்னமும் தேசிய சாம்பியன் ஷிப்பை ஒரு முறை கூட ப்ரக்ஞானந்தா வென்றதில்லை. செஸ் உலகக்கோப்பை நடைபெற்ற சமயம் தான் 18-வது பிறந்தநாளையேயே பிரக்ஞானந்தா கொண்டாடினார். இருப்பினும், கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவரது ஆட்டம் ஏற்கெனவே அவருக்காக செய்யத் தொடங்கிவிட்டது.பொதுவாகவே, இது போன்ற பெரிய தொடர்களின் சிறு சரிவு கூட தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும். தனது தோல்வி மட்டுமல்ல;அடுத்தவர்களின் தோல்விகூட ஒருவீரரை பலவீனப்படுத்தும்.மேக்னஸை எதிர்கொள்ளவே செஸ் உலகில் பலருக்கு இன்னமும் பயம்தான்.ஆனால், ப்ரக்ஞானந்தாவிடமோ அதுகுறித்த பயம் துளியளவும் இல்லை.இவை, எல்லாவற்றையும் ப்ரக்ஞானந்தாகையாளும் விதமும், அவரது ஆர்ப்பாட்ட மற்ற அமைதியும் தான் அவரது வெற்றிக்கானவிதை!பின்னடைவை தனது மனோ பாவத்தால் உடைத்து தனது 16 காய்களுக்கும் அவர் உயிர் அளித்து நகர்த்தி நடமாடவைத்து, தனது வெற்றியை உண்டாக்குகிறார். அரையிறுதியில் ஹிகாருநகமுராவுடனான ஆட்டமும் அப்படிப்பட்டது தான்.நடந்து முடிந்த செஸ் உலகக்கோப்பையின் மூன்றாவது நாளில் பலரது எதிர்பார்ப்பும் பொய்யாக்கப்பட்டு டைட்டிலை ப்ரக்ஞானந்தாவால் நெருங்க முடியாமல் போனாலும், விட்டுக்கொடுக்காமல் போராடியதும்….அவர்களுக்கு இடையிலான வயது மற்றும் அனுபவத்துக்கு இடையிலான வேறுபாடுகளும்…அவர் அடைந்த இடம் எத்தகையது என்பதை விளக்கும்.Rapid மற்றும் Blitz ஃபார்மட்களில் ஜொலிக்கும் அளவு Classical ஃபார்மட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை என்பதையும் பொய் என நிருபித்திருக்கிறார்.முதல் கிராண்ட் மாஸ்டராக 1988-ல் ஆனந்த் வெளிச்சத்திற்கு வந்தார்.அதன் பின் 2010-ல் இந்தியாவின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே.கடந்த 13 வருடங்களில் அது மொத்தமாக 82 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மேக்னஸ் ஒலிம்பியாடில் குறிப்பிட்டதைப் போலவே `செஸ்புரட்சி' ஏற்கெனவே இந்தியாவில் உருவாகிவிட்டது. ப்ரக்ஞானந்தாவின் இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் அப்புரட்சிக்கு இன்னமும் எரிபொருளாக வடிவெடுக்கும்.இந்திய செஸ் சிம்மாசனத்தில் இருந்து கொண்டு மின் அலைகளை உலகத்தின் எல்லா முனைகளுக்கும் ப்ரக்ஞானந்தா அனுப்பத் தொடங்கி இருக்கிறார்.