-ஹரிஹரசுதன் தங்கவேலு, சைபர் பாதுகாப்பு வல்லுநர்செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு தொழில்நுட்பத் தொடரில் எதற்கு இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தாக்குதல்கள், இழப்புகள் விவரிக்கப்படுகிறது என நீங்கள் நினைக்கலாம். இன்று சாட்ஜிபிடியிடம் கேட்டால் நொடிகளில் ஒரு கட்டுரை எழுதித் தருகிறது. பாடல் வேண்டுமா, ‘அலெக்சா’ என கத்தினால் போதும் , நொடியில் தேடிப் பிடித்து பாடுகிறது. மதிய உணவுக்கு புடலங்காய் பொரியல் செய்ய வேண்டுமா, கூகுளின் பார்டிடம் கேட்டால் நாடு வாரியாக ரெசிப்பி ரெடி. அட காய்கறியை விடுங்கள் ! ஒரு காதலி வேண்டுமா ! அதற்கும் நாம் ஏற்கனேவே பார்த்த ரிப்ளிகா இருக்கிறது. இது போல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நொடியும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொற்காலத்தில் வாழ்வது வரம் தான் ! .ஆனால் இவைகளின் மூலம் தான் என்ன ? எந்த சூழ்நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்வதே AI உருவாக்கம் குறித்த ஒரு முழுமையான புரிதலை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி , இத்தொழில்நுட்பம் இன்று சாத்தியமாகக் காரணமானவர்களையும் நினைவு கூறுவது நமது கடமையாகும். காரணம் , இரண்டாம் உலகப் போரின் ஒவ்வொரு நாளும் 27,000 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆறு வருடம் போர் தொடர்ந்திருக்கிறது. அப்போது எத்தனை பேர் மரணித்திருப்பார்கள் என எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறதல்லவா ? ‘எனிக்மா’ மட்டும் உடைக்கப்படவில்லை என்றால் இந்த உயிரிழப்புகள் மூன்று மடங்காகியிருக்கும் என்பதுவே அச்சமூட்டும் உண்மை. ஆகவே நண்பர்களே ! கண்டுபிடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற பெரும் உயிரச்சத்தில் தான் செயற்கை நுண்ணறிவுக்கான தேடலைத் துவங்கி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறான் மனிதன். கண்டுபிடிக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற இக்கட்டான சூழலில் தான் செயற்கை நுண்ணறிவு எனும் பெரும் பாய்ச்சலின் முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ரத்தமும் சதையுமான அந்த வரலாறு நிச்சயம் சொல்லப்பட வேண்டும். கணினி அறிவியலின் நாயகன் ஆலன் மாத்திசன் டூரிங் பிறந்தது லண்டனில். ஆலனின் அப்பா ஜூலியஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியக் குடியியல் அதிகாரியாக (ICS) சென்னை மாகாணத்தில் பணியாற்றினார். .ஆலனின் அம்மா இதெல் சாரா, பிறந்தது போத்தனூரில், சாராவின் அப்பா எட்வர்ட் மெட்ராஸ் ரயில்வேஸில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். கர்னாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா பாலம் இவரது மேற்பார்வையில் தான் கட்டப்பட்டது. அதிகாரி ஜூலியஸை சந்தித்ததும் சாராவிற்கு பிடித்துப் போகிறது. இருவரும் டப்ளின் நகரில் திருமணம் செய்து கொண்டாலும் பணிச் சூழ்நிலைகளால் உடனே இந்தியா திரும்பினர். ஜூலியஸ்-சாரா தம்பதியின் முதல் குழந்தை ஜான் பிறந்தது குன்னூரில். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தவர் ஆலன் டூரிங்.பெற்றோர் இருவரும் இந்தியாவில் இருந்ததால் அம்மா வழி உறவினர்களிடம் லண்டனில் வளர்ந்தார்கள் ஜானும், ஆலனும். இயல்பிலேயே கணிதமும் அறிவியலும் கைவரப் பெற்றாலும், அவர் படித்த பள்ளியோ, மொழி மற்றும் இலக்கியம் பயிற்றுவிக்கும் க்ளாஸிக் பள்ளி. அங்கு படிக்கப் பயங்கர போர் அடிக்கிறது, சுவாரசியமே இல்லை என ஆலன் மறுக்க, இலக்கியம் கற்றுக் கொள்ளாமல் உங்கள் மகன் இந்த உலகில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என தலைமையாசிரியர் ஆலனின் அம்மாவிற்கு புகார்க் கடிதம் எழுதியிருக்கிறார்..உலகப்போரையே உடைத்து நிறுத்திய ஒருவன், எப்படி உருப்படப்போகிறான் என ஆசிரியரால் சந்தேகிக்க வைத்தது காலத்தின் விநோதங்களில் ஒன்று. ஆனால் இவையெல்லாம் ஆலனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை ! தனக்குப் பிடித்த அறிவியலையும் கணிதத்தையும் தொடர்ந்து பயின்றார். தனது 15 வயதில் கணிதத்தின் மிக சிக்கலான கோட்பாடுகளுக்கு அவர் விடை கண்டார்.இந்த மேதைத்தனம் பள்ளியில் அவருக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியது. சக மாணவர்கள் ஆலனை அடிப்பது , மிரட்டுவது, இருட்டு அறையில் வைத்து பூட்டி விடுவது என தொடர்ந்து துன்புறுத்தினர். அப்போதெல்லாம் ஆலனை காப்பற்றியது அவரது உற்ற தோழன் கிறிஸ்டோபர் மோர்கம். ஆலனின் திறமையை உணர்ந்த க்ரிஷ், அவரது கணித ஆர்வத்திற்கு துணையாக இருந்தார். பெற்றோர் உடன் இல்லாத நிலையில் க்ரிஷுடன் இருக்கும் நிமிடங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார் ஆலன்.ஆனால் அம்மகிழ்ச்சி நிலைக்கவில்லை. நோய்தொற்று கொண்ட பசுவின் பாலை அருந்தியதால் காச நோய் வந்து உயிரிழக்கிறார் மார்கம். செய்தியறிந்து உடைந்து போகிறார் ஆலன். நண்பனாகவும் பாதுகாவலானாகவும் இருந்தவனின் மரணம் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் அறிவியலும் கணிதமும். தொடர்ந்து படிக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் கணிதத்தில் புலமை பெறுகிறார். டூரிங்கின் கணிதத் தீர்வுகள் பேராசிரியர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது. படிப்பிற்கு பிறகும் ஆய்வுகளைத் தொடரும் "Fellowship" எனும் கௌரவ அந்தஸ்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆலனுக்குத் தருகிறது. 1936ல் ஆலன் எழுதி வெளியிட்ட 'On Computable Numbers' எனும் ஆய்வுக்கட்டுரை தான் இன்றைய கணினி மற்றும் அல்காரிதம் உருவாக்கத்திற்கு ஆதாரப்புள்ளி. ஒரு கணித இயந்திரம் எப்படி இயங்க வேண்டும் என அல்காரிதம் கொண்டு வரையறுத்தால், தீர்க்கமுடியா பல கணித சமன்பாடுகளுக்கு தீர்வுகளை அது தரும் என முதலில் சொன்னது ஆலன் தான். இதை அவர் டூரிங் இயந்திரம் (Turing Machines) என உலகிற்கு அறிமுகம் செய்தார். அது தான் பின்னாளில் கணினியாக அறியப்பட்டது. சரி ! போருக்கு வருவோம்..மேற்குறிப்பிட்ட ஆலனின் ஆய்வுக்கட்டுரை 'அல்ட்ரா' நிர்வாகத்தின் பார்வைக்கு வர, அதன் பிறகே எனிக்மாவை உடைக்கும் பணிக்கு அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அல்ட்ரா வின் தலைமை இயக்குனர் கமாண்டர் டெனிஸ்டன் அதிரடியான ஆள். அவர் நம்புவதெல்லாம் துப்பாக்கி, கை வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள். அவரிடம் இந்தக் கணினி, அல்காரிதம், பல்கலைக்கழக கௌரவ பட்டம் இதையெல்லாம் பேசிப் புரிய வைக்க முடியவில்லை. இருந்தும் வேண்டா வெறுப்பாக ஆலனை பணிக்கு சேர்த்துக் கொண்டார். இரண்டாம் உலகப்போர் அதிதீவிரம் பெற்றது.07-செப்டம்பர்-1940, லண்டன் மீதான விமானத் தாக்குதலைத் துவக்கினார் ஹிட்லர். முதல்கட்டத் தாக்குதலில் லண்டன் விமான நிலையம், துறைமுகங்கள், அரசு அலுவலகங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன, லண்டன் பற்றி எரிந்தது, ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். மக்கள் முகாம்களை நோக்கி ஓடினர், லண்டன் விமானப்படையும் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினைத் தாக்கியது, அதற்கெல்லாம் அசரவில்லை ஹிட்லர்.எனிக்மா உதவியுடன் ரகசியத் தாக்குதலைத் தொடர்ந்தார். ஜெர்மனியின் விமானத் தாக்குதல் அடுத்த நாள் சற்றே ஓய்வு பெரும் என நம்பியிருந்த மக்களுக்கு அதிர்ச்சி தந்தது நாஜி ராணுவம். கால அட்டவணை போட்டு, ஒரு இரவுக்கு இவ்வளவு குண்டுகள் என்ற எண்ணிக்கையில் லண்டனைக் குறி வைத்துத் தாக்கியது. பிரிட்டிஷ் ராணுவம் சுதாரிக்க துளியளவு கூட இடைவெளி தரவில்லை. இப்படியான கட்டுக்கோப்பான தாக்குதல் 57 நாட்கள் தொடர்ந்தது. நொடிந்து போனது பிரிட்டன். நகரம் முழுவதும் எரிந்து உடைந்திருக்க, பசி பஞ்சம் மக்களை வாட்டியது. உணவுப் பஞ்சத்தை தீர்க்க ரேஷன் முறை அமலுக்கு வந்தது. மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்க தடை விதிக்கப்பட்டது. செல்வந்தர்கள் தவிர பிற மக்கள் உணவகங்களில் உணவருந்தக்கூடாது. அரசே அவர்களுக்கான உணவை வழங்கும். உணவகங்கள் எளிய உணவுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும், அதிக பணத்துக்கு விற்கக்கூடாது என புதிய சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன..57 நாட்கள் தொடர்ந்த தாக்குதலுக்கு பிறகு, லண்டன் சரணைடையும் என்ற எண்ணத்தில் தாக்குதலுக்கு சற்றே ஓய்வு தந்திருந்தார் ஹிட்லர். ஆனால் பிரதமர் சர்ச்சிலோ, என்ன நிகழ்ந்தாலும் நாங்கள் எதிர்த்துப் போரிடுவது நிற்காது என வீரமாக முழங்கினார். பிரிட்டன் மக்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. மக்களே போரில் தன்னார்வலர்களாக துப்பாக்கி ஏந்தினார்கள். தேசக் காவலர் படை, தந்தையர் படை (Dad's army )என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பிரிவில் சுமார் 15 லட்சம் மக்கள் வீரர்களாக களமிறங்கினார்கள். நாஜி ராணுவத்தை எதிர்க்கும் பிரிட்டனின் கடைசிக்கட்ட பாதுகாப்பு (Last Line of Defence) இந்த தந்தையர் படை தான்.சரணடைவார்கள் என எதிர்பார்த்திருந்த ஹிட்லருக்கு இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத முறையில் ஒரு பெரும் தாக்குதல் நிகழ வேண்டும், லண்டனின் அத்தனை அடையாளங்களும் அழித்தொழிக்கப் படவேண்டும் எனக் கொதித்தெழுந்தார். முதல் கட்டம் போல 59 நாட்கள் எல்லாம் இல்லை. இரண்டே நாட்களில் அதில் வீசப்பட்டதை விட அதிக குண்டுகள் வீசப்பட்ட வேண்டும் என ராணுவத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. லண்டன் தன் வரலாற்றில் மறக்க முடியா இரவுகள் என 1940ம் ஆண்டின் டிசம்பர் 29 மற்றும் 30 இரவுகளைத் தேர்ந்தெடுத்தார். .136 பாம்பர் வகை குண்டு வீசும் விமானங்கள் லண்டனைத் தாக்கின. சுமார் ஒரு லட்சம் சிறிய அளவிலான குண்டுகள் இந்த இரு இரவுகளில் வீசப்பட்டது. தேவாலயங்கள், ரயில் நிலையம், மருத்துவமனை, தலைமை மையங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டன. மக்கள் நிலவறைகளில், சுரங்கப் பாதைகளில் பதுங்கினார்கள். 1500க்கும் மேற்பட்ட இடங்கள் பற்றி எரிந்தது. தாக்குதலில் தண்ணீர் தேக்கங்கள் உடைபட்டதால், நெருப்பை அணைக்க நீரின்றித் திணறியது தீயணைப்பு படை. ஜெர்மனியில் இடைவிடாத இந்த அசுரத்தாக்குதலில் இரு இரவுகளாய் லண்டன் கொழுந்து விட்டு எரிந்தது. 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தீ விபத்து தான் லண்டனின் பெருந்தீ (The Great Fire of London ) என அதுவரை அழைக்கப்பட்டது, அது நிகழ்ந்த 280 ஆண்டுகளுக்கு பிறகான இந்த இரு இரவுகள் லண்டனின் இரண்டாவது பெருந்தீ என விவரிக்கப்படுகிறது. இத்தனை நிகழ்ந்தும் லண்டன் சரணடையவில்லை. எதிர்த்து நின்றது. ஆயுதங்கள் கொண்டு வீழ்த்த முடியா மனதீரத்தை பசியும் வறுமையும் வீழ்த்தும் எனக் கணித்தார் ஹிட்லர். தனது அடுத்த கட்ட அதிரடிக்கான காய்களை நகர்த்தினார். அதே நேரம், இப்போரின் உயிரான எனிக்மா ரகசியத்தை உடைக்கப்போகும் இயந்திரத்தை ப்ளட்ச்லே பார்க் பள்ளியில் உருவாக்கத் துவங்கியிருந்தார் ஆலன் டூரிங்.உலகம் விரியும்.