மதுரை சத்யாஓவியம்: ஸ்யாயம்ஆண்,பெண் வாழ்வில் வயது கடந்தும் இந்தக் காதல் ஏன் இவ்வளவு அத்தியாவசியமாகிறது என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் அவ்வப்போது கிளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. அடுத்து என்ன என்பதை அறியாமல், சவால்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும் சலிக்காமல் கொண்டுச் செல்ல துளியேனும் காதல் தேவை என்பதே இதற்கான பதில்!.அதுவும் இன்றைய ஸ்டேட்டஸ் காலத்தில் காதல் கொள்வதென்பது ஒரு கெளரவப் பிரச்னையாகிவிட்டது. அதென்ன ஸ்டேட்டஸ் காலம்? செல்போன் என்பது மனித வாழ்வில் ஓர் உறவான பிறகு, நம் உணர்வுகளைப் பதிவுகளாக்கி வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் வந்துவிட்டோம். மனதின் ஒவ்வோர் உணர்வையும் வெளிக்காட்ட இப்போதெல்லாம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஒன்று மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அவரவரின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்தி சக மனிதர்களிடமிருந்து ஆறுதல் பெற வடிகாலாக அமைந்துவிட்டன இந்த ஸ்டேட்டஸ்கள்.பாடல்கள் பதிந்து மனவோட்டத்தை உணர்த்துவது, மனதில் பட்டதை எழுதுவது என மன அழுத்தத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், அவரவர் மனநிலை சார்ந்த பாடலை ஸ்டேட்டஸ் வைப்பது பலருக்கும் ஒரு போதையாகவே மாறிவிட்டது. இன்னும் சிலருக்கு தங்கள் காதலை பிடித்தமானவர்களுக்கு தெரியப்படுத்தும் கருவியாகவும் இது அமைகிறது. குறைந்த வினாடிகளில் தேவையான வார்த்தைகளை கோத்து குறும் பாடல் ஸ்டேட்டஸ்களை வைப்பதுதான் இன்றைய இணையக் காதல்களுக்கு ஆகப் பெரும் தூதுவன்.இளம் வயதினர் மட்டுமின்றி திருமணம் ஆனவர்களே இந்தக் காதலை வெளிப்படுத்துவதில் முதல் வரிசையில் இருக்கிறார்கள். அதிலும் முப்பதையும் நாற்பதையும் கடந்த ஆண் பெண் இடையே உருவாகும் நட்பு பெரும்பாலும் சிறு மெல்லியக் காதலோடுதான் தொடங்குகிறது. அந்தக் கிளர்ச்சியில் அந்த நட்பைத் தொடர்வது என்பது அவர்களுக்கு இந்த வாழ்வை இலகுவாக நகர்த்திக்கொள்ள உதவுகிறது.திருமணத்திற்குப் பிறகும்கூட இத்தகைய காதல் ஆசைகள் தேவையா, இத்தனை வயதிற்கு பிறகும் காதல் வருமா, இணையர் இருக்க பிறிதொருவர் மீது காதல் வரலாமா, அது கலாசாரம், பண்பாடற்ற விஷயம் அல்லவா? என்கிற கேள்விகளெல்லாம் வாயளவில்தான் பேச முடிகிறது. ஆனால், மனித மனமானது தன் விருப்பத்தை விரித்துக்கொண்டேதான் போகிறது என்பதுதான் உண்மை. தனக்குக் கிடைக்காத மனிதர்கள் மீதும், அமையாத வாழ்க்கை மீதும் இன்னும் இன்னும் அதிகமாக ஆர்வம் கொள்கிறது..அத்தகையத் தேடலின் பொருட்டு ஆண் - பெண் தங்களுக்குள் நட்பு பாராட்டத் தொடங்கி அதனைக் காதலாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது சரியா, தவறா என்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு - தங்களின் சொந்த வாழ்க்கைக்கு பாதகம் வந்துவிடாத வண்ணம் - அதேநேரம், அந்தந்த நிமிட மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்க விரும்புகிறார்கள். இவர்கள் யாதும் அறிந்தே அத்தனையும் செய்கிறார்கள். சுடும் என்றே தெரிந்தே தீக்குள் உள்ளம் குளிக்கிறார்கள். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதை அறியாதவர்கள் அல்ல இவர்கள்.எல்லாவற்றிலும் நன்மைகள், தீமைகள் இருந்தபோதிலும் தனக்குப் பிடித்த மனிதர்கள் யாரையேனும் ரசிக்கக் கற்றுக்கொள்வது என்பது வாழும் நாட்களை அழகாக்குகிறது. வேலைப் பார்க்கும் அலுவலகமோ, வசிக்கும் பகுதியோ, இணையத்திலோ யாரையாவது ரசிக்கத் தொடங்குகையில் இந்த வாழ்வு மீது பிடித்தம் ஏற்படுகிறது.சிறு வயதில் பள்ளிக்கு செல்கையில் நமக்கு பிடித்தமான நண்பனோ, நண்பியோ இருந்தால் மட்டுமே அந்த வகுப்பு பிடித்துப்போகும். அதுபோலவே நமது ரசிப்புக்கென ஒருவரை தீர்மானிக்கையில் அவரைக் காணும்போதெல்லாம் நம் மனம் குதூகலித்து முகம் புன்னகையை சிந்தும். அப்படித்தான் இன்றைய ஃபேஸ்புக், வாட்ஸ் அப் காதல்கள் நதிபோல பெருகியோடுகின்றன.இணையத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து பிடித்துவிட்டால், அவரின் பதிவுகளில் பின்தொடர்கிறாரகள். சமயோசிதமாகப் பேசி நட்புப் பாராட்டி, வாட்ஸ் அப் எண்ணும் வாங்கிவிடுகிறார்கள். அந்த பெண் வாட்ஸ் அப்பில் பதிவிடும் படங்களுக்கும், பாடல்களுக்கும் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து அவர்களின் மனதில் இடம்பிடித்துவிடவேண்டும் என்கிற முனைப்பில் செயல்படுவதை சில ஆண்கள் ஒரு பொழுதுபோக்குக் கலையாகவே நிகழ்த்துகிறார்கள்..இவர்களின் நோக்கம் அந்தப் பெண்ணிடம் காமம் சார்ந்தா, காதல் சார்ந்தா என்பதைக் கடந்து அவரோடு பேசிவிட்டால் போதும் என்பதே அதிகமாக இருக்கிறது. அதே நேரம் காதலைப் பேசி இருக்கும் நட்பை இழந்துவிடக் கூடாது என்ற பயமும் சேர்ந்தே தொடர்கிறது.பெண்ணின் மனமும் தனக்கு பிடித்த ஆண் நட்புகளோடு பேசுவதை அதிகம் விரும்புகிறது. சக நண்பர்கள் தங்களைப் புகழ்வதை பெரிதும் ரசிக்கிறது. அந்தப் பாராட்டு வார்த்தைகளில் கிடைக்கும் மகிழ்ச்சி பெண்களின் அடுத்தக்கட்ட சாதனைகளுக்கு உத்வேகம் தருகிறது."நீங்க எப்ப முகப்பு படத்தை மாத்துவீங்கன்னு காத்திட்டு இருந்தேன், உங்க பதிவு எதுவும் வராம தவிச்சுப்போயிட்டேன். உங்க குட்மார்னிங்கில்தான் இந்த விடியல் அழகாகிறது” போன்ற அதீத அன்பின் வசனங்களையும் கவிதைகளையும் பயன்படுத்திப் பெண்களின் நட்பை அடைய புதுப்புது நுட்பங்களை, வார்த்தை ஜாலங்களை ஆண்கள் கையாள்கிறார்கள். இதுபோன்ற செயல்களால் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள முனைகிறார்கள்.ஃபேஸ்புக்கில் ஒரு கவிதைப் பதிவுக் காண நேர்ந்தது. முன்னதாக பதிவிட்டவரை ஒரு பெண் வாட்ஸ் அப்பில் பிளாக் பண்ணியதை இப்படிக் கவிதையாக வடித்திருந்தார். “ஏழு கடல் ஏழு மலை தாண்ட அவசியம் ஏதுமில்லை, உன் ஒற்றை வாட்சப் பிளாக்கில் பதுங்கியுள்ளது என் மொத்த வாழ்வும்" என்று!இப்படியான இணையக் காதலுக்கு எல்லைகளென எதுவுமில்லை. ஒருவன் - ஒருத்தி என்ற கொள்கையும் இருப்பதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று காதல்களைத் தொடரவும் இங்கே வசதி இருக்கிறது. ஒருவரோடு வாட்ஸ்அப்பில் பேசிக்கொண்டிருக்கையில், ஓரிடத்தில் டைப்பிங் என வரும் அந்த இடைவெளியில் வேறொருவரோடு பேசிவிட முடிகிறது. இப்போது இன்னும் வசதியாகப் புளு டிக் ஆப்ஷனும் நிறுத்தி வைத்துக்கொள்ள முடிகிறது. Last seen மறைக்கவும் முடிகிறது. இதைவிட ஒருவரிடம் கொண்டக் காதலை இன்னொருவரிடம் எளிதாகவும் மறைக்க முடிகிறது.இந்தக் காதல் கலையை அதிகம் கையிலெடுப்பது திருமணமானவர்களாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும்? தத்தமது இணையர்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடியாத மனத்தாங்கலை சக தோழமைகளிடம் பகிர்ந்துக்கொள்ளவே பலரும் விரும்புவதுண்டு. அந்தத் தோழமை எதிர் பாலினமாக இருந்துவிட்டால் அவர்களின் மகிழ்ச்சி இரண்டு மடங்காக கூடுகிறது."என் மனைவி கொடுமைக்காரி, நீங்க அப்படி இல்லை, உங்களோடு பேசினாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கு” எனும் வார்த்தையை காப்பி பேஸ்ட் செய்ததுபோல் பல பெண் நட்புகளிடமும் ஒரே மாதிரியாக சில ஆண்கள் பேசுவதை அவ்வப்போது வெளிவரும் ஸ்கீரின் சாட்கள் சாட்சியம் சொல்கின்றன.சமீபத்தில்கூட யாரோ ஒரு கவிஞர் பாராபட்சமின்றி தன் ஃபேஸ்புக் நட்பில் இருந்த பெரும்பாலானப் பெண்களிடம் ஒரே மாதிரியாக காதலைச் சொன்ன ஸ்கிரீன் சாட் இணையத்தில் வைரலாகிப் பரவியதும் இப்படித்தான்.பெண்ணிடம் ‘நீயும்தான்’ என்ற வார்த்தையை தப்பித் தவறியும் இந்த ஆண்களோ பயன்படுத்துவதில்லை. ‘நீ மட்டுமே’ என்ற லாவகமான வார்த்தையில் அவர்கள் மனதை அடைய முடியும் என்பதை ஆண்கள் இனம் சரியாக தெரிந்துவைத்துள்ளது..திருமணமானப் பின்னும் மற்றவர்களிடம் காதலை வெளிப்படுத்தக் காரணம், சரியான வயதில் கிடைக்காத வாழ்வுமுறையாக இருக்கலாம். அல்லது இணையரின் மீதான ஈர்ப்பு சலித்துப் போயிருக்கலாம். தூரத்து விண்மின் எப்போதும் அழகுதான். அருகிலுள்ள மனிதர்களிடம் கிடைக்காத ஆறுதல் வார்த்தைகள், யாரிடமோ தூரமாக கிடைக்கையில் அவ்வார்த்தைகள் தருபவரின் மீது காதல் வயப்படுவது மனிதர்களுக்கு இயற்கையானதாகவே இருக்கிறது.முன்பெல்லாம் மனிதர்களிடம் ஒரே ஒரு காதல் இருந்தது. நிறைய பொய்களை வைத்து அக்காதலை காப்பாற்றினார்கள். இப்போது ஒரேயொரு பொய்யை வைத்துக்கொண்டு நிறைய காதலை அடைகிறார்கள்!ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களிடம் காதல் கொள்வது சங்கக் காலத்திலிருந்தே ஆண்களுக்கு வழக்கமான ஒன்றுதான். இந்த இணையக்காலத்தில் அது இன்னும் பல்கிப் பெருகிவிட்டது. அப்படி இணையக் காதல் கொள்பவர்கள் பெரும்பாலும் சொந்த வாழ்க்கைக்குள் அதனைக் கொண்டுசெல்லாத வண்ணம் எச்சரிக்கையாக இருப்பதையும் கண்கூடாகக் காண முடிகிறது. ‘இதற்கு முன்பும் பிழைத்திருந்தேன் என்பதில் பொய்யில்லை… ஆனால், நீ வந்தபின்பே வாழத் தொடங்கினேன்’ என்கிற கவிதை ரீதியில் சக தோழமையோடு தத்தம் உணர்வை பரிமாறிக்கொள்வதுதான் இந்த காதலுக்கு மனிதர்கள் தரும் சன்மானம் ஆகும்.இத்தகைய நிகழ் கால மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக கருதி, பிரச்னை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் அல்லது பிரச்னை வராதபடி பார்த்துக்கொள்ளலாம் என்கிற சாதுர்யத்துடன் பலரும் சாகசம் செய்வதை இணையத்தில் நிறையவே காண முடிகிறது. இதயங்களைத் தேடிப் பயணப்படுவது, சக மனிதர்களோடு சிநேகம் வளர்ப்பது என்பதெல்லாம் உணர்வு சார்ந்த விஷயம் மட்டுமின்றி, சரியான மனிதர்களோடு நட்பு வளர்ப்பதால் வாழ்வை துயரமாக்கிக்கொள்ளாமலும் இருக்க உதவுகிறது.எல்லாம் சரிதான்… ஆனால், இங்கே அன்பின் தேடலானது அறிவு சார்ந்தும் விரிந்திருக்க வேண்டும். எதன் பொருட்டும் எவர் பொருட்டும் யாருக்கும் துளியும் துயரம் விளைவித்துவிடக் கூடாது என்பதையும் இணையக் காதலர்களுக்கு உணர்த்த வேண்டியதாக இருக்கிறது. அவ்வப்போது தேவை, ஸ்பீட் பிரேக்!அறம் பேசுவோம்