- மதுரை சத்யா ஓவியம்: ஸ்யாம்பையனுக்கு எப்ப சார் கல்யாணம்…” என யதேச்சையாக தெரிந்த நண்பரிடம் விசாரித்ததுதான் தாமதம்… அவரது முகம் இருண்டுபோனது. “அந்தக் காட்சியைப் பார்க்க எங்களுக்கு கொடுப்பினை இல்லைங்க. காலம் ரொம்பவே கெட்டுப்போச்சு, வெளிநாட்டு கலாசாரம் நம்ம பசங்களை கெடுத்துடுருச்சு” என்று அழாதக் குறையாக பேச்சைத் தொடங்கினார் அவர்."என் பையனும் அவன் கூட வேலைப் பார்க்குற பொண்ணும் ஏதோ லிவிங் டு கெதர்ல வாழ்றாங்களாம். ’மனசுக்கு தோணுச்சுனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதைப் பத்தி யோசிச்சு சொல்றேன்’னுட்டாங்க . இந்த பசங்களுக்கு வாழ்க்கையோட சீரியஸ்னஸ் கொஞ்சம்கூட தெரியமாட்டேங்குது” என்று வருத்தத்தை பகிர்ந்தபடி நகர்ந்தார்..படிப்பதற்காகவும் வேலைப் பார்ப்பதற்காகவும் குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் இளைஞர்களும் இளைஞிகளும் காதலில் மூழ்கியதும் உடனே குடும்பம் நடத்த தொடங்கி விடுகிறார்கள். திருமணம் எனும் சடங்கு எதுவும் அவர்களுக்கு தேவையாக இருப்பதில்லை. உண்மையில் இந்த தலைமுறையினர் திருமணமற்று கூடி வாழும் இந்த வாழ்வு முறையை சரியாக புரிந்து வைத்துள்ளார்களா அல்லது வயதின் ஆசையால் அவசரமாக ஒரு வாழ்வை வாழ விரும்புகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் முளைக்கின்றன.. “இது வயதுக்கான ஆசையில் மட்டுமே நிகழ்பவை, லிவிங் டு கெதர் நம் ஊருக்கெல்லாம் சரிப்பட்டு வராது” என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. காதல் திருமணத்துக்கே ஏற இறங்க பார்க்கும் பெற்றோர் லிவிங் டுகெதர் என்றால் பதறிவிடுகிறார்கள். எவ்வளவு முன்னேறிய, முற்போக்கு குடும்பத்தினருக்கும்கூட இந்த பதற்றம் தொற்றிக்கொள்கிறது. உறவுகளிடம் முறைத்துகொண்டோ அல்லது மறைத்துக்கொண்டோதான் பெரும்பாலான லிவிங் டு கெதர் உறவுகள் அமைகின்றன.கும்பகோணத்தைச் சேர்ந்த ஆதிரா அழகான, திறமையான பெண். அவள் படிப்புக்கேற்ற வேலை, நல்ல சம்பளம் பெங்களூருவில் கிடைத்தது. யாரையும் சார்ந்து வாழ விரும்பாத அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. காரணம், இனி தனது சுய சம்பாதித்தியத்தில் வாழப் போகிறோம் என்கிற கர்வம், பெருமை. உற்சாகமாக பெங்களூருவுக்குப் புறப்பட்டாள்.அவளது உற்சாகமும் மகிழ்ச்சியும் அவள் கண்ட பெங்களூருவை இன்னமும் அழகாக்கியது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததாலோ என்னவோ அவளது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பலரும் அவளையே சுற்றி சுற்றி வந்தார்கள். ஆனாலும், அவளது கண்களுக்கு பளிச்சென தெரிந்தவன், கெளதம். இளம் வயது நட்பு காதலாக மலர்வது இயல்புதானே. காதல் வயப்பட்டனர். இருவருக்குள்ளும் நல்ல புரிதல்,ஒரே மாதிரியான சிந்தனை, கொள்கை மட்டுமல்ல… ஈகோவும் ஒன்றுபோலவே இருந்தது..‘நம் வாழ்வை தொடங்க யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. எந்த சம்பிரதாயமும், அடையாளமும் நம்மை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம் மனதிற்கு எது சரியோ அதை செய்வோம்’ என பரஸ்பரம் முடிவெடுத்து தங்களுக்கென ஒரு வீடு எடுத்துக்கொண்டு காதலோடு அத்தனையையும் பகிர்ந்துக்கொண்டார்கள். அழகான நீரோடையாக ஓடத் தொடங்கியது அவர்களது வாழ்க்கை.காலநிலைகளில் மாற்றம் வருவதுபோல் காதல் நிலையிலும் மாற்றம் வருவது சகஜம்தானே. கூடல் காலம் முடிந்து ஊடல் காலம் தொடங்கியது. தெளிந்த நீரோடையில் முதல் கல்லை வீசினான் கெளதம். “அந்த விஸ்வாகூட இன்னைக்கி ரொம்ப நேரம் ஏதோ பேசிட்டே இருந்த, அவ்ளோ நேரம் ரெண்டு பேரும் அப்படி என்ன பேசுனீங்க?” நீரோடையில் சுள்ளென்று விழுந்த கல், அதிராவின் கண்களில் துளிகளைத் தெறித்தன. நிச்சயம் அவள் எதிர்பார்த்திராத தாக்குதல் இது. அதுவும் அவனிடம் இருந்து வருமென அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு கணம் மூர்ச்சையாகி நின்றாள். ஒரு பெண்,‘உனக்குதான் நான்’ என்று அத்தனையையும் தூக்கிக் கொடுத்த பிறகும், ‘அவனோட என்ன பேசின?’ என்பது அவளது இதயத்தை ரத்தமும் சதையுமாக கொத்தி கிளறும் வன்மம் அல்லாமல் வேறென்ன? .ஆதிரா பதிலேதும் கூறாமல் மெளனித்து நின்றாள். தொடர்ந்து கற்களை வேகமாக வீசினான் கெளதம். நீரோடையின் மீன் குஞ்சுகள் காயம்பட்டு சிதறி ஓடின. ரெளத்திரமானாள் ஆதிரா. பதிலுக்கு கைநிறைய கற்களை அள்ளினாள். “ஆபீஸ் விஷயமாதான் பேசினேன். ஏன் இன்னும்கூட பேசுவேன், நாளைக்கு இன்னொருத்தன் கூடவும் பேசுவேன். நாளைன்னைக்கு இன்னும் ரெண்டு பேர்கூடவும் பேசுவேன். என்ன வேணும்னாலும் பேசுவேன், பர்சனாலாவும் பேசுவேன், அதெல்லாம் உனக்கெதுக்கு? எனக்கு கேள்வி கேட்குறவங்களைப் பிடிக்காது, மைண்ட் இட்!" அவள் வீசிய கற்களால் மொத்த நீரோடையும் கலங்கிப்போனது!அன்றிலிருந்து தொடங்கியது அடுத்தடுத்த பிரச்னைகள். என்ன செய்வது? இந்தக் காதல் என்பது எப்போதும் விசித்திரமானதாகவே இருக்கிறது. முன்பொரு நாளில் பிடித்ததை எல்லாம் கெஞ்சிக் குழாவி கேட்டறிந்து குறிப்பெடுத்தவர்கள், காதல் உடைந்த பின்னொரு நாளில் அதையே ஆயுதமாக மாற்றி போர் புரிகிறார்கள்..ஆதிராவிற்கு கேள்விகளே பிடிக்காது என்பதையறிந்த பிறகுதான் கெளதம் இன்னும் இன்னும் கேள்விகளை சுமந்துகொண்டு வீட்டுக்கு வரத் தொடங்கினான். இருவரில் ஒருவரேனும் நிதானித்திருக்கலாம். விட்டுக்கொடுத்திருக்கலாம். வயதோ சம்பாத்தியமோ ஈகோவோ எதுவோ அவர்களைத் தின்றது. அன்பை அனாதையாக்கிவிட்டார்கள். நம்பி வந்த அன்பு நடுத்தெருவில் நின்றது. பரஸ்பரம் கசந்துப்போனார்கள். வீடுகளும் அலுவலகங்களும் மாறிப்போயின.இதயத்தில் சுமந்த கெளதமின் நினைவுகளோடு கருவில் சுமந்த காதலையும் கலைத்துபோட்டாள் ஆதிரா. அதுவே அவளுக்கு பெரும் குற்றவுணர்வைக் கொடுத்தது. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமானாலும் சரி… லிவிங் டு கெதரானாலும் சரி… பிரச்னை என்று வரும்போது உடல்ரீதியாக முதல் பாதிப்பு பெண்ணுக்குதான். முற்போக்கோ பிற்போக்கோ ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் மட்டும் பிறப்பொக்கும் எல்லா உயிருக்குமானதாக இருப்பதில்லை. எந்த வாக்குறுதியும் சாட்சியமும் அளிக்கப்படாத இந்த உறவுமுறையில் ஆணிற்குப் பெரிதாக எந்த நட்டமும் இல்லை. ஆனால், பெண்ணிற்கு உடலளவில் அவ்வளவு பிரச்னைகள்!கலாசாரம் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் லிவிங் டு கெதரில் ஆண், பெண் இடையே பூரண நம்பிக்கை நிரப்பப்படுகிறதா என்பதுதான் முதன்மைக் கேள்வியாக இருக்கிறது. குடும்ப மானத்தைக் காப்பாற்றவே இங்கே சேர்ந்து வாழும் தம்பதிகள் அதிகம். அவ்வாறு இருக்க லிவிங் டு கெதர் வாழ்வில் என்ன கேரண்டி இருந்துவிடப் போகிறது ?.இத்தகைய திருமணமற்ற கூட்டு வாழ்வுமுறை அடித்தட்ட மக்களை இன்னும் வந்து சேரவில்லை என்பதுதான் இப்போதைக்கான ஆறுதல். வசதியான, படித்த, கைநிறைய சம்பளம் வாங்கும் பெற்றோர்களின் கண்காணிப்பற்ற வளர்ப்பில் வாழும் பிள்ளைகளே அதிகளவு லிவிங் டு கெதரில் இருக்கிறார்கள். திருமணம் என்கிற தேவை ஏற்படும்போது பார்த்துக்கொள்ளலாம். உள்ளம் கேட்கும் உடனடி தேவைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதே இவர்களின் ஆரம்பக்கட்ட ஒப்பந்தமாக இருக்கிறது. ஒப்பந்தத்தை உற்று நோக்கினால், ’பிரச்னை வரும்போது பிரிந்துவிடலாம்’ என்று ஒப்பந்தத்தில் இவர்கள் ஒளித்து வைத்திருக்கும் நிபந்தனைக்குட்பட்ட ஷரத்தையும் காண முடியும்.வற்றாத காதலெனும் ஜீவநதியை கண்ணாடி புட்டியில் அடைக்கிறார்கள். புட்டியில் இருப்பதாலேயே அந்த நதியும் தீர்ந்து போகும் என்று நம்புகிறார்கள். அவர்களின் எண்ணங்களாலேயே அந்த புட்டி தீர்ந்துபோகிறது. காமத்தில் இணையும் ஆண் - பெண் பின்னாளில் பிரிகையில் தீர்ந்த கண்ணாடி புட்டியாக தரையில் வீசப்பட்டு சில்லு சில்லுகாக சிதறிப்போவது பெண் மட்டுமே. இதனால் மற்றுமொரு ஆண் அவளை தன் உறவாக ஏற்க அதிகளவில் யோசிக்கவும் செய்கிறான்..சரி, இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. எதை ஒன்றையும் மொத்தமாக தவறென்று ஒதுக்க தேவையில்லை. உடலை பகிர்ந்துகொண்டாலே இறுதிவரை ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை எனும் கருத்தும் இளைய தலைமுறையினரிடமும் பெண்ணியவாதிகளிடமும் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் சிலர் இதனை ஆரோக்கியமான மாற்றமாகவும் கருதுகிறார்கள். ஆண் - பெண் கூடுவது என்பது கைகுலுக்கிக்கொள்வது போலாகிவிட்ட காலத்தில், லிவிங் டு கெதரை இவர்கள் ஆதரிக்கும் நோக்கம் யாதெனில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது முட்டாள்தனம் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பதால்தான்.பொதுவாக கேள்வி கேட்பது, உரிமை எடுத்துக்கொள்வது, அதிகாரம் செய்வது எல்லாம் கல்யாணப் பந்தத்திற்கு உண்டான விதிமுறை. லிவிங் டு கெதர் என்பதில் அப்படி ஏதுமில்லை. தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, கேட்கக் கூடாது, எப்போதும் சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டும். அதே நேரம் உடல் மற்றும் உணர்வு தேவைகளுக்கு ஓர் இணையர் வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமாக இருக்கிறது..சமீபத்திய சினிமா படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களும்கூட இம்மாதிரியான வாழ்வியல் முறையை சகஜம் எனும் நோக்கில் கையாள்கின்றன. அதேசமயம், இதை முற்றிலுமாக சரி என்றோ தவறோன்றோ தீர்ப்பு கூற எவருக்கும் உரிமை இல்லை. அவரவர் வாழ்வும் தாழ்வும் அவரவர் சுதந்திரத்துக்கு உட்பட்டது. இந்த வாழ்வுமுறை சிலருக்கு சரியாக அமைந்து சுதந்திரமான, பரஸ்பர நம்பிக்கையான வாழ்வை அளிப்பதையும் ஆங்காங்கே காணமுடிகிறது.இந்த நவீன வாழ்வுமுறை சமூகத்தில் பரவத் தொடங்கிவிட்டால் நிலையான பந்தம் வளர்க்கும் குடும்ப உறவுமுறை அழிந்துப் போகும் அபாயம் இருப்பதாக ஒரு சாரார் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால், எத்தனை குடும்பங்களில் உண்மையான அன்பும் காதலும் இருக்கிறது என்பதை சேர்த்தும் இந்த கேள்விக்கு விடை தேடலாம். ஒருவர் நல்லவரோ கெட்டவரோ விதியென நினைத்து அவரோடு வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களைக் கரையேற்றி முடிவில் தனக்கென வாழாமல் செத்துப்போகும் தியாக வாழ்க்கை தேவைதானா? என்று அவர்கள் கேட்பதும்கூட நியாயமான கேள்விதானே!.இந்த நேசத்தை இப்படித்தான் கொண்டுசெல்ல வேண்டும் என்ற திட்டமிடலில் உருவாகும் உறவு எப்போதும் நீடிப்பதில்லை. நிபந்தனையற்ற அன்பு என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டு இருத்தல் மட்டுமல்ல, நிர்பந்தம் கொடுக்காததும்கூட. பரஸ்பரம் நீடித்து தரும் நம்பிக்கைக்கொண்ட உறவுக்கு பெயர் எதுவானால், அன்பு ஒன்றை மட்டுமே பிரதானமாக கருதும் மனங்கள்தான் எந்த உறவுக்கும் தேவை!(அறம் பேசுவோம்)