உலகமே ஆச்சர்யப்படும் வகையில் பூமியிலிருந்து கிளம்பிய சந்திரயான் 3 திட்டமிட்டபடி நிலவை அடையும் போது சந்திரனை அடைந்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும் (அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை பிற மூன்று). நிலவில் முதலில் கால்பதித்த அமெரிக்கர்கள் அங்கு தங்கள் நாட்டின் கொடியை நட்டனர். சந்திராயன் - 3 மூலம் இந்தியாவின் பிரதிபலிப்புகளும் நிலவில் இடம்பெறப் போகின்றன. நமது தேசியச் சின்னமான அசோக சக்கரம் மற்றும்இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் சின்னம்ஆகியவை நிலவில் தடம் பதிக்க உள்ளன. சந்திரயான்-1 2008 ஆகஸ்ட் 28 அன்று பூமியிலிருந்து கிளம்பியது.77 நாட்களுக்குப் பிறகு நிலவை அடைந்தது. நிலவின் தரைப்பகுதியில்இருந்து 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வந்து 312 நாட்கள் ஆய்வுசெய்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர்இருப்பதை உறுதிப்படுத்தியது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு..சந்திரயான் 2, 2019 ஜூலை 22 அன்று கிளம்பியது. இதுநிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட ஒன்று.நிலவின் சுற்றுப் பாதையை சரியாகவே சென்றடைந்த போதிலும்தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த விண்வெளிக் கப்பலின்லாண்டர் என்கிற பாகம் நிலவில் தரையிறங்காமல் அதில் மோதிசெயலிழந்தது.இப்போது சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துஜூலை 15 மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் அதுவெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.ஆகஸ்ட் 23 அன்று நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.ரூ.615 கோடியில் இந்த விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள சந்திரயான் -3 நிலவைச் சென்றடைய 40 நாட்கள் ஆகும். (சந்திரயான் -2 இதற்கு 48 நாட்களும் சந்திரயான் -1 இதற்கு 77 நாட்களும் எடுத்துக் கொண்டன).ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா,1969இல் அப்போலோ 11 விண்கலத்தை 4 நாட்கள் 6 மணி நேரத்தில் நிலவுக்கு அனுப்பியது. சந்திரயான்- 3 நிலவை அடைய எதற்காக அதைப்போல 10 மடங்கு நாட்கள் ஆக வேண்டும்?காரணம் இதுதான். .இந்தியா பயன்படுத்தும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்திறமை வாய்ந்தது என்றாலும் அமெரிக்காவில் அப்போலோவிண் பயணங்களில் பயன்படுத்தப்பட்ட சாடர்ன் V ராக்கெட் அளவுக்கு அதி சக்தி வாய்ந்தது இல்லை. இதனால் தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று ஒரு பாதையை இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்.அப்போலோ 11 விண்கலத்தை கிட்டத்தட்ட நேரடியாகபூமியிலிருந்து சந்திரனுக்கு செலுத்தினார்கள். இதன் காரணமாககுறைந்த நாட்களில் நிலவை அடைய முடிந்தது. சந்திரயான் 3 விண்கலத்தின் ராக்கெட் நேராக நிலவுக்குச் செல்வதற்கு பதிலாக, நீள்வட்டப் பாதையில் பூமியை சுற்றி படிப்படியாக அதன் பயண தூரத்தை கடக்கும். சந்திரன் பூமியை நோக்கி சுற்றும்போது ராக்கெட் அதன் இயக்கத்தின் உச்சநிலையை அடையும். பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி சந்திரனை நோக்கி பயணிக்கும். பின் சந்திரனை ஒத்த நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் ராக்கெட் இறுதியில் அதன் மேற்பரப்பில் தரையிறங்கும்..சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்பட்டபோது இஸ்ரோவின்தலைவராக இருந்தவர் ஒரு தமிழர். கே.சிவன். நாகர்கோவிலைச்சேர்ந்தவர். தமிழ் மீடியத்தில் பள்ளியில் படித்தவர். இவரது தந்தைகைலாசவடிவு ஒரு விவசாயி. சந்திராயன் 2வின் லாண்டர் கருவியான விக்ரம் தனது தகவல் தொடர்பை நிறுத்திக் கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரே தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவர் அழுததும் அவரை அணைத்து பிரதமர் ஆறுதல் கூறியதும் அப்போதைய தலைப்புச் செய்திகள்.சந்திரயான் 2 விண்வெளிக் கப்பலின் லாண்டர் கருவி மோதிச்செயலிழந்த போது அதன் பாகங்கள் எங்கே விழுந்தன என்பதை இஸ்ரோ மற்றும் நாசாவால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையைச் சேர்ந்த ஷண்முக சுப்ரமணியன் என்பவர் தனது தொலைநோக்கி மூலம் அந்த ரோவரின் பாகங்களைக் கண்டறிந்தார்..சந்திரயான் 3 திட்ட இயக்குனரும் ஒரு தமிழர். அவர் இஸ்ரோவிஞ்ஞானி வீரமுத்துவேல். விழுப்புரத்தை சேர்ந்தவர். ரயில்வே பள்ளி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ, சென்னையில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு, சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி பட்டப் படிப்பு என்று கல்வி பயின்றவர்.2014ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாகச் சேர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு சந்தியரான் 3 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆக சந்திராயன் முயற்சிகள் இந்தியர்களுக்கு பெருமை என்றால் தமிழர்களுக்கு மேலும் பெருமை. - ஜி.எஸ்.எஸ்.