- வாசுகி லட்சுமணன்ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அருள்நிதி. ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ, வித்தியாசமான கதைக்களம் என்று தனி ரூட்டில் போய்க் கொண்டிருப்பவர். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படமும் டீசர் வெளியான தினத்திலிருந்து எதிர்பார்ப்பை எகிற வைக்க, ட்ரெய்லரோ ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. . ‘ராட்சசி’ என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்சை.கௌதமராஜ்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள அருள்நிதியின் வீட்டில் அவரையும், இயக்குநர் கௌதமராஜையும் சந்தித்துப்பேசினோம்….கழுவேத்தி மூர்க்கனைப் பார்க்கவே பயங்கரமா இருக்கே? இந்த கெட்டப் சேஞ்சுக்காக எவ்வளவு மெனக்கெட்டீங்க? “பொதுவா ஒருத்தர் கதை சொல்லும்போது, அந்தக் கதை நமக்குப் புடிக்குதா இல்லையான்னு தெரிஞ்சிக்க நம்மளோட ரியாக்ஷனைப் பார்ப்பாங்க. ஆனா கௌதம் அதையெல்லாம் பண்ணவேயில்ல. அவ்ளோ கான்ஃபிடன்ட்டா கதை சொல்லிகிட்டிருந்தார். இண்டர்வல் வரைக்கும் சொல்லிட்டு, ‘நீங்க யோசிச்சிகிட்டிருங்க நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்‘னு போயிட்டார். எனக்கு ‘பக்’குன்னு ஆயிடுச்சி. அவர் திரும்பி வந்ததும் அந்தக் கதையை நான் அவர்கிட்ட திருப்பிச் சொன்னேன். நான் சொல்லி முடித்ததும்,‘சரி, மீதி கதையை நாளைக்கு பேசுவோம்’னு கிளம்பிட்டார். மறுநாள் அவர் வரும்போது நான் அந்தப் படத்துக்கான மீசையை வச்சுகிட்டு உட்கார்ந்திருந்தேன். என் மீசையைப் பார்த்துட்டு, ‘அடடா இவர் இவ்ளோ டெடிகேட்டடா இருக்கறாரே?’னு சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா, ’ஐயய்யோ, ஏங்க அதுக்குள்ள மீசையெல்லாம் வச்சீங்க?‘ன்னு கேட்டார். அதுக்கப்புறம், ‘இந்தப் படத்தில் எனக்கு நீங்க வேணாம், மூர்க்கன் தான் வேணும். அதனால இந்த மீசை பத்தாது, இன்னும் பெருசா வேணும்’னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நாங்க நினைச்ச டைமுக்கு படத்தை ஸ்டார்ட் பண்ண முடியல. கஷ்டப்பட்டு வளர்த்த மீசையை எல்லாம் ஷேவ் பண்ணிட்டு நான் வேற ஒரு படத்துக்குப் போயிட்டேன். அப்புறம் மறுபடி மூணு மாசம் உட்கார்ந்து மீசையை வளர்த்தேன். அது ரொம்ப ஜாலியா இருந்தது, ரசிச்சு தான் வச்சேன்.”.ட்ரெய்லரைப் பார்த்தாலே உங்க கடின உழைப்பு தெரியுது. ’கழுவேத்தி மூர்க்கன்’ படத்துக்காக இயக்குநர் உங்களை எப்படியெல்லாம் வேலை வாங்கினார்? “ஐயோ அதை ஏன் கேட்கறீங்க? அந்தப் படத்தை எடுக்கும்போது, ‘இந்த சீன்ல நீங்க இந்தப் படத்துல இருந்த மாதிரி இருக்கீங்க... அந்த சீன்ல நீங்க அந்தப் படத்துல வந்ததுபோல இருக்கீங்க’ன்னு நான் இதுவரைக்கும் நடிச்சிருக்குற 16 படத்தோட பேரையும் சொல்லிட்டாருங்க இவரு. ‘எந்த இடத்துலயும் நீங்க அருள்நிதியா தெரியவே கூடாது, மூர்க்கனாதான் தெரியணும்’னு சொல்லிகிட்டே இருந்தாரு. அதனால கௌதம் மேல எனக்கு ஒரு பயமே இருந்துச்சி. அவர் கேட்டதை நாம பண்றோமா-ன்னு நினைச்சுகிட்டே, இருந்தேன். ஸோ அவர் எதிர் பார்த்ததுல 80% பண்ணியிருக்கேன். மீதி 20% நிறைய டேக் போன டயர்ட்னெஸா இருக்கும், இல்ல ஷூட் பண்ண இடங்களோட சூழலா இருக்கும். மத்தபடி இந்தப் படத்துல எனக்கே நான் புதுசா தெரிஞ்சேன். அதுக்கு முழு காரணம் கௌதம் தான்.”’கழுவேத்தி மூர்க்கன்’ கதையைப் பத்தி சொல்லுங்க? “இந்தப் படத்துல கழுமரம் ஒரு முக்கியமான அங்கமா இருக்கும். அதை வச்சு என்ன.மாதிரியான தண்டனை கொடுத்திருக்காங்கன்றதை காட்டுவோம். இந்தப் படத்துல சாதி ரீதியான விஷயங்கள் நிறையா இருந்தாலும், சந்தோஷ் பிரதாப்கும் எனக்குமான நட்புதான் பெருசா இருக்கும். அதனால என்னைக் கேட்டா இது நல்ல நண்பர்களுக்கான படம்னு சொல்லுவேன். மத்தபடி படத்தோட கதையைப் பத்தி டைரக்டர் பேசினாதான் பொருத்தமா இருக்கும். நீங்க அவர்கிட்ட கேளுங்க…” என கௌதம ராஜ் பக்கம் கை காட்ட நாம் அவரிடம் பேசினோம்…‘ராட்சசி’யில நல்ல சோஷியல் மெசேஜை சொன்ன நீங்க, இப்ப ஏன் வன்முறையை கையில எடுத்திருக்கீங்க? “ ‘ராட்சசி’ சோஷியல் டிராமா படம். அந்தப் படத்துக்கு என்ன நியாயம் செய்யணுமோ அதைச் செஞ்சிருந்தேன். இது ஆக்ஷன் படம் இந்தப் படத்துக்கு என்ன நியாயமோ அதை செஞ்சிருக்கேன். முத்தையா அண்ணன் இதே படத்தை எடுத்திருந்தா உறவுகளுக்குள்ள இருக்குற உணர்வுகளைப் பேசுவார், ரஞ்சித் சார், மாரி செல்வராஜ் எல்லாம் அவங்களோட வலியைப் பேசறாங்க, நான் எடுத்திருக்கறது ‘பொது உணர்வு’. தேவர் மகன்’, ‘பருத்தி வீரன்’, ‘அசுரன்’ எல்லாமே பொது உணர்வை வெளிப்படுத்துற படங்கள் தான். அந்த மாதிரி பொது உணர்வைதான் நான் எடுத்திருக்கேன். அதுக்குதான், ‘உன் நியாயம் என் நியாயம்னு ஒண்ணுமே இல்ல, நியாயம் ஒரே மாதிரி தான் இருக்கும்’னு ஒரு டயலாக் வச்சிருக்கேன்.”.‘சாதிங்கிறது சாமி மாதிரி’ன்னு வசனம் வருதே? இது சாதியை தூக்கிப் பிடிக்கற படமா?“மல்டி கல்சர் சூழல் இருக்குற சென்னை போன்ற நகரங்கள்ல உள்ளவங்கதான் சாதி ஒழிஞ்சிட்டதா நினைக்கறாங்க. ஆனா பொதுவான சிந்தனையில அப்படி இல்ல... இங்க மட்டுமில்ல இந்தியா முழுக்கவே அப்படிதான் இருக்கு. இன்னைக்கு வரைக்கும் கிராமங்கள் சாதிய கட்டமைப்புலதான் செயல்படுது. ஏன்னா வெறும் கல்வியால மட்டுமே சாதி ஒழிஞ்சிடாது. இப்போ பேருக்குப் பின்னால இருந்து சாதிய நீக்கற அளவுக்கு பொதுப்புத்தி மாறிடிச்சி இல்ல, அந்த மாதிரி பொதுப் புத்திய மாத்தறதுக்கான கட்டமைப்பு வரும்போது தான் சாதி பேதம் முழுசா மாறும். பொதுவா, சாதிய சிக்கல்கள் போன்ற ஒரு பிரச்னையை ஊதிவிடவும் செய்யலாம், சரி பண்ணவும் செய்யலாம். இந்தப் படத்துல பிரச்னையை சரி பண்றதுக்கான புள்ளியிலயிருந்து வேலை செஞ்சிருக்கோம்.” ‘கழுவேத்தி மூர்க்கன்’ கதாபாத்திரத்துக்கு அருள்நிதியை எதனால தேர்வு செஞ்சீங்க? “ஒரு கதாபாத்திரத்தை நடிப்பாலயும் உடல் மொழியாலயும் கொண்டு வரலாம், ஆனா சிலபேர் உடல் அமைப்பினாலே செட் ஆகிடுவாங்க. அந்த மாதிரி இந்தக் கேரக்டருக்கு இவரோட தோற்றம் செட் ஆச்சு.முதல்ல, இந்தப் படத்தை அருண் விஜய் தான் பண்ற மாதிரி இருந்தது, அதுக்காக அவர் மீசையெல்லாம் கூட வளர்த்திருந்தார். அது எல்லாருக்குமே தெரியும், அப்புறம்தான் இவர் பண்ற மாதிரி ஆச்சு.எனக்கு இவர் வேணும்கிதைத் தாண்டி அவருக்கு இந்தஸ்கிரிப்ட் வேணும்னு நினைச்சார். இந்தப் படத்துக்கு அப்புறம் அருள்நிதி சார் வேறயா தான் இருப்பார்.”துஷாரா விஜயனை நாயகியாக்க என்ன காரணம்?“ என்னோட கதாநாயகி துணிச்சலா இருக்கணும்னு நான் நினைப்பேன். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு ஆளைத் தேடினப்போ, சார்பட்டா பரம்பரையில போல்டா நடிச்ச துஷாராவைச் சொன்னாங்க. அதுக்கப்புறம் நான் வேற ஆப்ஷனைத் தேடவே இல்ல. நான் உண்மையிலேயே சொல்றேன், துஷாரா ஒரு எக்ஸ்ட்ராடினரி ஆக்ட்ரஸ். அவங்க நடிக்கறதைப் பார்த்து அருள்நிதியே மிரண்டு போயிட்டார்.”அப்படியா? துஷாரா உங்களை உண்மையிலேயே மிரள வச்சிட்டாங்களா? என்று கேட்டபடியே அருள்நிதியிடம் தொடர்ந்தோம்... “ஐயய்யோ, ஒரு பக்கம் இயக்குநர் சொல்ற சீனை நான் உள்வாங்கணும், இன்னொரு பக்கம் எப்பவும் நெஞ்சை நிமிர்த்திகிட்டு மூர்க்கனா இருக்கணும், ரெண்டு மூணு நாள் ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் நாம செட் ஆயிட்டோம் போலன்னு நெனச்சேன். அடுத்த நாள் துஷாரா நடிக்கறதைப் பார்த்ததும், ‘இவங்க என்ன இப்படி நடிக்கறாங்க?’ன்னு என் மைண்ட் ஃபுல்லா அவங்க மேல போயிடுச்சி.”.உங்ககூட நடிச்சிருக்குற மத்தவங்களைப் பத்தி சொல்லுங்க..? “யார் கண்ணன் சாரும், அவரோட பொண்ணு சாயாதேவியும் இந்தப் படத்துல எக்ஸ்ட்ராடினரியா பண்ணியிருக்காங்க. டெடிகேஷன் அண்டு மல்டி டேலண்டடு சந்தோஷ். அவருக்கு, எனக்கு, துஷாராவுக்கு, யார் கண்ணன் சாருக்கு எல்லாருக்குமே இந்தப் படம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.”உங்க பொழுதுபோக்கு என்ன? குடும்பத்தோட நீங்க அடிக்கடி போற இடம் எது? “சென்னையில உள்ள இடங்களுக்கு தான் அடிக்கடி போவோம். பீச் ஹவுஸுக்கும் போவோம். அப்புறம், ஊட்டிக்குப் போவோம். குடும்பத்தோட நேரம் செலவழிக்கறதும், நண்பர்களை சந்திச்சுப் பேசறதும் தான் என்னோட பொழுது போக்கு.”