-அய்யப்பன்அதிகார மையங்கள் திருத்தி அமைக்கப்படுவது தினந்தோறும் அரங்கேறும் செய்திதான். டென்னிஸும் தற்சமயம் அப்படியொரு புதிய இளவரசனின் எழுச்சியைக் கண்டுள்ளது..கார்லோஸ் அல்காரஸ் … 20 வயதில் டென்னிஸின் ஆட்சி பீடத்தைத் தன்னுடையதாக்க சிறகடிக்கும் சூறாவளி. 2022-ல் அமெரிக்க ஓப்பனை வென்று `நம்பர் 1' இடத்தையும் ஆக்ரமித்து, தனது திறனின் எல்லைகளை விரியச் செய்தவர். தற்சமயம் விம்பிள்டனையும் விட்டு வைக்கவில்லை. சென்ட்ரல் கோர்ட்டில் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை இவர் முத்தமிட்டுள்ளார். அதுவும் எப்படி? தொடர்ந்து நான்கு முறை விம்பிள்டன் சாம்பியனாகி `தோல்வி' என்ற வார்த்தையை வழக்கொழிந்து போக வைத்த ஜோகோவிச்சினையே வீழ்த்தியுள்ளார். புல்தரையிலும் தனது புதிய சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளார், கார்லோஸ்..கடந்த 81 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் 65 பட்டங்கள் ‘BIG 3’ எனக் கொண்டாடப்பட்ட மூவேந்தர்கள் ஃபெடரர், நடால் மற்றும் ஜோகோவிச்சின் வசம்தான். டென்னிஸ் புலத்தை 20 ஆண்டுகளாகவே இவர்களது அசைவுகள்தான் கட்டுப்படுத்தி வந்தன. மூவரில் ஃபெடரர் ஓய்வு பெற, நடால் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்க, 36 வயதிலும் ப்ரைம் ஃபார்மில் ஜோகோவிச் மட்டும் தனிக்காட்டு ராஜாவாக மிளிர்ந்து வருகிறார். இந்த ஆண்டில் அவர் வென்றிருந்த ஆஸ்திரேலிய மற்றும் ஃப்ரெஞ்ச் ஓப்பன் இரண்டுமே அதனையே பறைசாற்றி வந்தன. இந்தக் காரணங்களினாலேயே விம்பிள்டன் களமும் அவரது கோட்டையாகவே கருதப்பட்டது. அதுவும் புல்தரையில் நிபுணத்துவம் பெற்றிராத கார்லோஸை எதிர்கொள்வது ஜோகோவிச்சின் கணக்கில் இன்னொரு விம்பிள்டன் டைட்டில் என்றே கட்டியம் கூறியது..உலகின் முதல் நிலை ஆட்டக்காரர்தான் என்றாலும் கார்லோஸ் ஜோகோவிச்சினை வீழ்த்துவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல, எட்டாவது விம்பிள்டன் டைட்டிலை வென்று ஃபெடரரின் சாதனையை சமன் செய்யக் காத்திருந்த ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியைத் தருவார் என்றும் யாருமே நினைக்கவில்லை. ஆனால், அத்தனையையும் கார்லோஸ் கம்பீரமாக செய்து காட்டியிருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவரது ஆற்றல் குறித்த கருத்துகள் அலையாக எல்லா திசைகளிலும் பரவியிருந்தன. இருப்பினும் யாருமே எதிர்பாராத ஒரு மாபெரும் வெற்றி இது. சிங்கத்தை அதன் குகையிலேயே கைது செய்து கையறு நிலைக்குத் தள்ளுவதற்கு ஒப்பானது!. ஃப்ரெஞ்ச் ஓப்பனின் அரையிறுதியில் இதே ஜோகோவிச்சிற்கு எதிராக, பதற்றத்தால் ஏற்பட்ட தசைப்பிடிப்பு கார்லோஸின் வெற்றி வாய்ப்பையே தட்டிப் பறித்தது. அதன்பிறகு லண்டன் Queen's Club-ல் புல்தரையில் நடைபெற்ற போட்டிகளில்கூட தோல்வியின் விளிம்புகளையே தொட்டிருந்தார். புல்தரை அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லை. ஆனால், ஒருசில வாரங்களிலேயே யாருமே எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவு தன்னையும் தனது ஆட்டத்தையும் அவர் மேம்படுத்தி இருக்கிறார். எல்லாத் தருணங்களிலும் இயலாதவைகளையும் நிகழ்த்திக் காட்டும் மாயத்தை சுழற்சி முறையில் செய்து வருகிறார்.. நடந்து முடிந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் முதல் செட்டினை ஜோகோவிச்சே வென்றிருந்தார். அதுவும் 1 - 6 என்ற கணக்கில். இதற்கு முன்புவரை முதல் செட்டினை வென்ற பின்பு ஜோகோவிச்சின் ஆதிக்கம் எப்போதும் தளர்ந்ததே இல்லை. அது நீளும் பாதை டைட்டிலை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. ஆனால், அந்தப் புள்ளியிலிருந்து கூட ஜோகோவிச்சிடமிருந்து வெற்றியை கார்லோஸால் அபகரிக்க முடிந்திருக்கிறது. 2001-ல் பீட் சாம்ப்ராஸினை ஃபெடரர் வீழ்த்தியதோடு இது ஒரு தரப்பினரால் ஒப்பிடப்படப்படுகிறது. என்றாலும் தனது கரியரின் இறுதியில் இருந்த பீட் சாம்ப்ராஸினை ஃபெடரர் வீழ்த்தியதை விடவும் நல்ல ஃபார்மில் உள்ள ஜோகோவிச்சினை கார்லோஸ் தோற்கடித்திருப்பது ஒரு படி மேலானதே..`நம்பர் 1' இடத்தை குறைந்த வயதில் அடைந்த வீரராக கார்லோஸ் பரிமளித்ததைப் பற்றி ஃபெடரரின் முன்னாள் பயிற்சியாளர் இவானிடம் சில வாரங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் "பிக் 3-ன் கலவை கார்லோஸ்" என புகழாரம் சூட்டியிருந்தார். இதைப் பற்றி ஃபெடரரிடம் கேட்டதற்கு "நிஜமாகவே அவர் அப்படியா சொன்னார்?" என ஆச்சரியத்துடன் பதிலளித்து "நான் அப்படி நினைக்கவில்லை" என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஆனால் தற்சமயம் அதே கருத்தினையே அவருக்கு எதிராக போராடி தோற்றிருந்த ஜோகோவிச்சே முன்வைத்திருக்கிறார். அதில் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இல்லை, உண்மையும் வியப்புமே தொனித்தது. மூவரது சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவராக கார்லோஸ் திகழ்வதை மனதார ஜோகோவிச் ஒப்புக் கொண்டிருந்தார். உண்மையில் கார்லோஸின் ஆட்டமுறையில் மூவருமே ஆங்காங்கே தோன்றி மறைந்தனர் என்பதே உண்மை..பொதுவாக டென்னிஸில் Forehand வாளாகவும், Backhand கேடயமாகவும் ஒப்பிடப்படுவது உண்டு. இவை இரண்டையுமே மிகவும் சிறப்பாக கார்லோஸ் பயன்படுத்துகிறார். ஃபெடரின் Backhand Slice, நடாலின் Forehand Stroke, ஜோகோவிச்சின் மனத்திண்மை எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டிய பரிசுப் பெட்டகமே கார்லோஸ். அவரது ஃபுட் வொர்க்கும் மொத்த கோர்ட்டையும் நடால் போலவே ஆக்ரமிப்பதுவும், அதிவேகமாக நகர்ந்து எதிராளியை திக்குமுக்காடச் செய்வதும், ஒவ்வொரு ஸ்ட்ரோக்கின் மீதும் அவர் உட்செலுத்தும் தீவிர கவனமும் அவரை முன்னிலைப்படுத்துகிறது. Inside out forehand-ஐ அவர் பயன்படுத்தும் விதம் அவரது கூடுதல் பலம். ரிஸ்க் எடுத்து ஆடுவதுதான் அவரது ஆட்டமுறை. அதிலும் கண்மூடித்தனம் இல்லை பங்குச் சந்தையில் கவனத்துடன் முதலீடு செய்பவர்களிடம் உள்ள மிகத்தெளிவான கணக்கீடே இருக்கிறது.. எதிராளிக்கான அவரது வலை பல ஆண்டு அனுபவமுள்ளவரிடம் காணப்படுவதைப் போல இயல்பாகவே அமைந்துள்ளது. எங்கே அடிக்க இருக்கிறார் என்பதை கணிக்கவே முடியாது. ராக்கெட்டினை பின்புறமிருந்து கொண்டு வந்து, மணிக்கட்டின் உதவியால் கடைசி நொடியில் பந்தினை நினைத்த திசையில் அனுப்புவார். இதனால் எதிராளிக்கு யோசிப்பதற்கான அவகாசமே இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஸ்லோ பால்களை வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்துவதைப் போலவே ஜோகோவிச்சிற்கு எதிராக கார்லோஸ் Drop Shot-ஐ பயன்படுத்தியதும் இருந்தது. ஒவ்வொரு Serve-ஐயும் Volley-ஐயும் அவர் தனக்கு சாதகமாகத் திருப்பிய விதமே ஜோகோவிச்சினை கலங்கடித்தது. அதிலிருந்து மீண்டு வரவும் கார்லோஸின் ரிதத்தை உடைக்கவும் ஜோகோவிச் இடைவேளைகளை எடுத்தார். ஆனால் திரும்பி வரும் போதும் அதே அதிர்ச்சியினை தரமுயர்த்தி திரும்பத் தந்தார் கார்லோஸ். காலத்திற்கும் பேசப்படும் விம்பிள்டன் இறுதிப் போட்டியாக கார்லோஸ் அதனை மாற்றிக் காட்டியுள்ளார்..பரவளையப் பாதையில் இருபுறமும் மாறி மாறிப் பயணித்தாலும் ஆதிக்க முனைகளை ராக்கெட்டினைக் கொண்டு கோலோச்ச வைப்பது டென்னிஸ் பந்தின் வழக்கமே! அந்த வகையில் இப்பொழுது செங்கோலுக்கான மோதல் சூடு பிடித்துள்ளது. குறைந்தபட்சம் 30 மேஜர் டைட்டில்களை கார்லோஸ் வென்று காட்டுவார் என்பது அவரது பயிற்சியாளர் ஃபெர்ரேரோவின் கருத்து. அது நிகழுமா? இதே ஆதிக்கம் நீடிக்குமா என்பதற்கு காலத்திடமே பதில் உள்ளது.