எந்திரன் வேலையில் கரையில் வாழ்வு- ஜீயோடாமின்.ம சந்தை பொருளாதாரம் கட்டமைத்திருக்கும் எந்திரத்தனமான வேலைகளில், எந்திரங்களாக மூழ்கிக் கிடக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மை நசுக்கிப் பொழியும் வேலைகளில் இருந்து ஓய்வெடுக்க அறைகூவல் விடுக்கிறது இந்தப் புத்தகம்.நூலிலிருந்து: ‘உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால் ’சமையல், தோட்டம், ஓவியம், விளையாடுதல், வாசித்தல், எழுதுதல், இசை என்று ஏதோ ஒன்றை சொல்வீர்கள். அதையே ’உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?’ என்பதை மாற்றி ‘நீ வளர்ந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டால், ’தொழிலதிபராக, டாக்டராக, இன் ஜினீயராக, சினிமா இயக்குநராக, விளையாட்டு வீரராக, கவிஞனாக விரும்புவதாகச் சொல்லக்கூடும்.நீங்கள் உங்களுக்கு என்ன செய்ய பிடிக்கும் என்கிற கேள்விக்கான பதிலை, வளர்ந்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக சொல்வதில்லை.விருப்பமான செயல், கனவு வேலையாகக் கைகூட வேண்டுமென்று இங்கு பெரும்பாலானோர் துடிக்கின்றனர். ஆனால், சமூக அந்தஸ்து உழைப்பின் வெகுமதி போன்றவை பெரும்பாலானோரை இறுதியில் விருப்பத்துக்கு மாறான தேர்வுகளில் தள்ளி விடுகின்றன. வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், 6/2. 12வது தெரு, வைகை காலனி, அசோக் பில்லர், சென்னை – 600 083. போன்: 90949 90900. பக்கம்: 64. விலை: ரூ.65. .இலக்கணம் இனிது- நா.முத்து நிலவன்மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவ அறிவோடு மக்களோடு கலந்து பழகிப் பெற்ற பார்வை தெளிவுடன் இந்நூலை எழுதியுள்ளார் நா.முத்துநிலவன். எழுத்துப் பிழையை சரிசெய்ய நல்லதொரு வழிகாட்டி நூல் இது.இந்நூலிலிருந்து: ரெண்டு சுழி ந என்பதும் தவறு. மூனு சுழி ண என்பதும் தவறு. ண இதன் பெயர் டண்ணகரம். ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.மண்டபம், கொண்டாட்டம் என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணkஅர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர் மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு டண்ணகரம் என்று பெயர்.தென்றல், சென்றான் என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தாம் இருக்கும். இதனால் இதற்கு, றன்னகரம் என்று பெயராகும்.க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன… எனும் 18 மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிடவில்லை. இவை, தமிழை நாம் உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கப்பட்டுள்ளன!வெளியீடு: பாரதி புத்தகாலயம். தேனாம்பேட்டை, சென்னை – 600 018. போன்: 044 -24332424. பக்கம்: 96. விலை: ரூ.90. .ஆதிப் பெண்ணின் அடி தேடி-ஓவியாஆண் – பெண் என்ற வேருபாடுகள் நீங்கி பாலின சமத்துவத்தை நோக்கி மனித சமூகம் நகர வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும். மனித குல வரலாற்றில் ஆணுக்கு நிகராக அல்லது ஆணைவிட பெண்கள் பல்வேறு விஷயத்தில் முன்னோடிகளாக இருந்ததை, வரலாற்று ஆதாரங்களின் துணையோடு எடுத்துரைக்கிறார் ஓவியா.‘ஏன் பெண்களின் வரலாறு தேடப்பட வேண்டியதாக இருக்கிறது. ஏடறிந்த வரலாறெல்லாம் ஆண்களின் வெற்றிக் கதைகளாலும் பெண்களின் கண்ணீராலும் நிரம்பி வழிகிறதே, அது ஏன்? காலத்தால் மூத்த என் முன்னோடியான ஆதிப்பெண் எப்படி இருந்தார்? அவர்களது தலைமை எப்படி ஆண்கள் கைக்கு மாறியது? அதைப் பெண்கள் எதிர்த்தார்களா, இல்லையா? அந்த எதிர்ப்பு என்னவாக முடிந்தது? பெண்களில் அரசிகளும் பேரரசிகளும் இருந்தார்களா என்ற கேள்விகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்களின் வரலாற்றில் இருந்து விடையைத் தேடுகிறார் ஓவியா’ என்று தனது அணிந்துரையில் அருள்மொழி எடுத்துரைப்பது இந்நூலுக்கான தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது.வெளியீடு: கருஞ்சட்டை பதிப்பகம். 120. என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை – 600024. போன்: 044 – 247264408. பக்கம்:110. விலை: ரூ.110..தேநீர் என்று பெயரிட்டுக்கொண்டவன்-ஆழி சத்தியன்‘தாய்ப்பாலின் வாசனையில் உயிர்ப்பித்து… பின்னொரு நாளில் மரணத்தின் வாசனையை தூவிச் சென்ற அம்மாவுக்கு’ என்கிற அர்ப்பணிப்புடன் தொடங்கும் இந்நூல் ஆலம் இலையின் நுனியாய் கூர்மை கொண்டது. நெல்லிக்காயைத் தின்றுவிட்டு தண்ணீர் அருந்தும்போது படரும் தித்திப்பு தரும் கவிதைகளின் முகாம் ஆகத் திகழ்கிறது இப்புத்தகம். நூலிலிருந்து:பட்டாம்பூச்சியைஸ்பரிசிக்கும் தருணத்தில்முத்தமிடும்வண்ணங்களைப் போலத்தான்விஷமேற்றுகின்றனஉன்னோடானஇமைகளில் சுமைகள். அதிசயமாகத்தான் நிகழ்கிறதுஎன்னுள் ஆயிரம் சிறகுகளின் பிரசவம் ஆயினும்விடுவித்த பட்டாம்பூச்சியைப் போலில்லைநீ என்னை விலகுவதில்!வெளியீடு: சித்ரகலா பதிப்பகம், அகரக்கடம்பனூர், கீழ்வேளூர் – 611104. போன்: 9443382614. பக்கம்:64. விலை: ரூ.100