உதிரும் வேர்கள்க.அம்சப்ரியாகவிஞர் க.அம்சப்ரியாவின் சிறுகதைத் தொகுப்பின் கதைமாந்தர்கள் எளிமையானவர்கள். அவர்களின் வலிகள், உழைப்பின் மேன்மை, பண்பாட்டு அசைவுகளை இக்கதைகளின் வழியாக நாம் உணர முடிகிறது.இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் வெளிச்சத்திற்கு வெளியே, அனாமிகா, அம்மாவின் கல்யாணம், நினைவில் காடுள்ள மிருகம் கதைகள் யதார்த்த உணர்வின் உச்சம் தொடுகின்றன.உதாரணத்துக்கு: ‘நினைவில் காடுள்ள மிருகம்’ சிறுகதையில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் வேணு. கொரோனா பெருந்தொற்று, வேணுவின் வாழ்வில் நுழைந்து புரட்டிப் போடுகிறது. அன்றாட வாழ்வில் பொருளாதார உதிரல். இட்லி &- தோசை மாவு விற்கத் தொடங்கு கிறார். இதுதான் கதைக்களம். இதை வைத்துக்கொண்டு, வாழ்வின் யதார்த்தத்தை தம் மொழியில் பதிவு செய்துள்ளார், அம்சப்ரியா. எல்லாக் கதைகளும் நெகிழ்வூட்டுகின்றன.வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை&11. போன்: 9444640986. பக்கம்: 136. விலை: ரூ.150..பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவைப்ரணாஇது கவிஞர் ஜின்னா அஸ்மியின் தலைமையின் கீழ் இயங்கும் படைப்புக் குழும வெளியீடாக வந்து கவனம் பெற்ற தொகுப்பாகும்.உதாரண கவிதை: ‘ஆதியில் / பூமி மீது விழுந்த மழைத்துளி ஒன்று/ மீண்டும் மேகமாகி / மீண்டும் மழைத்துளியாகி / யுக யுகமாய் தேடுகிறது / ஆதி மனிதனையும் / அவன் விட்டுவைத்தி ருந்த வனங்களையும்’ எனும் கவிதையில் வனங்களைஅரவ ணைத்த மனிதக் குலத்தைப் போற்று வதுடன்& இன்றைய அவலத்தையும் ஒருசேரப் பேசுகிறது.‘பார்வையற்றரயில் பிச்சைக்காரரின்உயிருருக்கும் பாடலைஎல்லோரும் கேட்டு ரசிக்கிறார்கள்அவரது பிச்சைப்பாத்திரம்அவர்களை நோக்கி நீளாத வரை’எனும் கவிதையில் மிகக் கவனத்துடன் எழுதப்பட்ட ‘அவரது’ என்கிற வார்த்தை ப்ரணாவின் கருணையைக் காட்டுகிறது.வெளியீடு: படைப்பு பதிப்பகம், 8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர். போன்: 7338847788. பக்கம்: 96. விலை: ரூ.120..நாமும் நம் உறவினர்களும்ம.ஜியோடாமின்மனித உடல் செல்களால் ஆனது என்பது நாம் அறிந்தது. இது தொடர்பான அறிவியல் செய்தி நமக்குத் தெரியாது. இந்நிலையில் செல்கள், உயிரினப் பரிணாம வளர்ச்சி, மரபுக்கூறுகள், குணநலன்களின் பதிவு போன்றவற்றை அறிவியல் பார்வையோடு பதிவுசெய்யும் புத்தகம். -நம் பிறப்பைப் பற்றி, உடலைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். நம்மைச் சுற்றிவாழும்உயிரினங் கள்தான் நம் உறவினர்கள் என்பதை நெருக்கப்படுத்தும் பதிவாகவும் இருக்கிறது இப்புத்தகம்.புத்தகத்தில் இருந்து: ‘குரங்குக்கும் நமக்குமான பொது மூதாதையரில் இருந்து நாம் ஒரேயடியாகக் குதித்து வந்துவிடவில்லை. சிறிது சிறிதான உடல் மாற்றங்களில் பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்திலேயே இந்த மாற்றங்களை நமது உடல் பெற்றிருக்கிறது. இதற்கு ஆதாரமாக நம்மிடம் நமது மூதாதை விலங்குக்கும் நமக்கும் இடையேயான அழிந்துபோன விலங்குகளின் தொல்லெச் சங்கள் இருக்கின்றன.’வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், 6/2, 12வது தெரு, வைகை காலனி, அசோக் பில்லர், சென்னை&83. போன்: 9094990900. பக்கம்: 80. விலை: ரூ.150..கனவு விடியும்சீனிவாசன் நடராஜன்‘சீனிவாசனின் பேச்சில் ஒரு விமர்சன இழை ஊடாடிக்கொண்டிருப்பதை பழகியவர்கள் அவதானிக்க முடியும். அந்த விமர்சனை இழை திரண்டு இங்கே ‘கனவு விடியும்’ நூலாகியுள்ளது, என்று பழ.அதியமான் குறிப்பிட்டுள்ளது உண்மையாகும்.இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனுபவ செழுமைக்கொண்ட வையாக இருக்கின்றன. நுட்பமாக விமர்சனம் இந்நூலில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகள் அனைத்தும் ஆழமும் அகலமும் கொண்டவையாக இருக்கின்றன.புத்தகத்திலிருந்து: ‘கதைகளுக்கு கரு மிகவும் தேவை என்று ஓ ஹென்றியும், சிறுகதைகளுக்கு தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டியதில்லை என்று ஆண்டன் செக்காவும் பேசிக்கொண்டிருந்த காலத்தில்தான் பத்திரிகைக் கதைகள் என்றும், தீவிரக் கதைகள் என்றும் பாகுபட்டன. இதைத் தொடர்ந்தே நாமும் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்றும் வெகுஜன எழுத்தாளர்கள் என்றும் இரண்டு பிரிவுகளை உருவாக்கினோம்.’வெளியீடு: தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை. போன்: 9080909600. பக்கம்: 128. விலை: ரூ.100.