அறம் வளர்த்த அதியமான்- இரவீந்திர பாரதிசங்கஇலக்கியங்களைதரவாகக்கொண்டு, கடைஏழுவள்ளல்களில்ஒருவரானஅதியமானின்வாழ்வையும் வளத்தையும்பேசும்படைப்புஇது.நெடுங்கதைவடிவத்தில்இந்நூல்எழுதப்பட்டுள்ளது.மண்ணாசையும்பெண்ணாசையும்கொண்டுபோர்நடத்திய மன்னர்களிடையேஅறம்வளர்ப்பதற்காககளம்கண்டமாமன்னன்அதியமான்என்கிறசெய்தியைஎல்லா பக்கங்களிலும்நிறுவப்பட்டுள்ளது.வரலாற்றைஉள்ளதுஉள்ளபடியேமொழிவழிகொடுப்பதுமிகச்சிறந்தஆவணமாகஅமைந்தாலும்கூட,அதில்தரவுகளும்புள்ளிவிவரங்களும்தகவல்களுமேநிறைந்திருப்பதால்ஆய்வுஉள்ளம்கொண்டவர்களுக்குமட்டுமேஅதுபெருந்தீனியாகும்.அதேசமயத்தில்வரலாற்றைஅடிப்படையாகவைத்துக்கொண்டுபுனைவுஇலக்கியமாக்கினால்அதுபெருவாரியானவாசகர்களின்நெஞ்சத்தில்கூடுகட்டிகுந்திக்கொள்ளும். அதையேதான்இரவீந்திரபாரதிஇந்நூலில்பெரும்முயற்சியெடுத்துபடைப்பாக்கியுள்ளார்.காட்டாளி, கருக்கலில்முறிபடும்சிறகுகள், சூரியநாற்றுகள்உள்ளிட்டபலஉயர்தரபடைப்புகள்மூலம்தமிழ்வாசகர்களுக்குநன்குஅறிமுகமானஇரவீந்திரபாரதியின்இப்படைப்பில்அதியமான்கம்பீரமாகஉலவருகிறார்.வெளியீடு: பரிதிபதிப்பகம், 56 சி/ 128. பாரதகோயில்அருகில், ஜோலார்ப்பேட்டை, 635 851. போன்:7200693200. பக்கம்:304. விலை: ரூ.350..அடையாற்றுக்கரை-மு.து.பிரபாகரன்‘செனை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குநர் மு.து.பிரபாகரன், தென்னை சென்னையின் வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவரோவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டியிருக்கிறார்’ என்று கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் இந்நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.நூலிலிருந்து: சென்னப்பட்டினத்தை பசுமைச் செழிப்போடு வனம்போல் சோலையாக மாற்றியது., வளம்பெற்ற அழகு நகரமாக ஜொலிக்க வைத்தது எல்லாம் அடையாறு, , கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயும் இணைந்ததுதான். எழில்மிகு சென்னப்பட்டினத்தின் வாழ்வாதாரத்தை ச் சுமந்துகொண்டிருப்பது இந்த மூன்று நீர்வழித் தடங்கள்தான். இவை அனைத்தும் காலச் சுழற்சியின் சதியில் தற்போது காணாமல் மறைந்து போயின’ என்றெழுதும் மு.து.பிரபாகரனின் மொழி நடை வசீகரமாக உள்ளது.பொதுவாக ‘ஆற்றங்கரையில்தான் நாகரிகம் பிறந்தது…’ என்பார்கள். சென்னப்பட்டினத்தில் அடையாறு ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய வாழ்வியல் சித்திரத்தை நாவலாக எழுதி பார்த்திருக்கிறார் பிரபாகரன்.‘’யோவ்… சோக்கா கதவுடுறே! இந்த ஐய்சா அலுக்கு அல்லாம் நம்மகிட்ட வேணாம். பொரண்டு புடிக்கிற மாட்டையே கொம்ப மிறிக்கிறவங்க நாங்க… எங்க கிட்டையே கதையா? டகுல் உடாதே… மெய்யலாமா சொல்லு நீ யார்ய்யா?’’ இந்த ஒற்றை பேச்சுமொழி போதும், சென்னையின் அன்பு நிறை மக்களின் வாழ்வை சொல்லிவிடுகிறது.வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 9. ரோஹினி பிளாட்ஸ்,முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078போன்: 99404 46650. பக்கம்: 340.விலை: ரூ.400.கடவுளைக் கொன்றவன்-சித்ரூபன்சித்ரூபனின் கதைகளில் கதைக்களன் அழுத்தமாக இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும்… ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல… இவரது சொற் சித்திரங்களில் ஒலிகளையும் கேட்க முடியும்’ என அணிந்துரையில் மாலன் சொல்லியிருப்பதற்கு நியாயம் சேர்க்கின்றன அனைத்து கதைகளும்.கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கதைகள், குடைக் காம்பு வளைவுகளைக் கொண்ட கதைகள், மாடிப்படி வடிவமைப்பைக் கொண்ட கதைகள் என்று பலவிதமான கதை அமைப்புகள் இருக்கின்றன. எல்லா வகைமையிலும் முயற்சி செய்து பார்த்திருக்கிறார் சித்ரூபன்.இதில் சின்னராஜா என்கிற கதை மனிதர்களின் மெல்லிய மன உணர்வை அழகியலுடன் படம் பிடிக்கிற கதையாகும். வெகுஜன இதழ்களில் வெளியாகும் கதைகளுக்குரிய அனைத்து அம்சங்களுடன் எல்லா கதைகளும் மிளிர்கின்றனர். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் என்கிற கதைகள் இதயத்தை தாலாட்டுகின்றன. எல்லோரும் படிக்க வேண்டிய தொகுப்பு இது.வெளியீடு:அன்புமலர் பதிப்பகம், 34 வலர்மதி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 600034. போன்: 9879890087. பக்கம்:170. விலை:ரூ.150.பிரான்சுநிழலும் நிஜமும்-நாகரெத்தினம் கிருஷ்ணாஒவ்வொரு பயணமும் மிச்சமாக சில அனுபவக் குறிப்புகளை மனசில் பதிவு செய்யாமல் போகாது. ரயில் பயணத்தில் சேமித்த அனுபவ நாணயங்களை குமித்துத் தந்திருக்கும் நீலவேணிக்கு, கதைமொழி நன்கு வாய்த்திருக்கிறது.இந்தப் புத்தகத்தைப் பற்றி தனது அணிந்துரையில் ‘பள்ளிவிட்டு வந்த ஒரு சிறுமி தன் அன்புக்குரியவர்களிடம் பள்ளியில் நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் கூறுவது போல பயணங்களுக்கு முன்னும் பின்னுமான செய்திகளோடு படிப்பது மிக இனிமையான அனுபவம்’ என அருள்மொழி சொல்லியிருப்பதற்கு நியாயம் சேர்க்கிற எழுத்துப்பதிவு இது. மற்றவர்கள் தொலைத்த இடத்தில் இருந்து சிலவற்றை கண்டெடுக்கிற மனம் எல்லாருக்கும் கிடைத்துவிடுவது இல்லை. தன்னைப் பற்றியே எப்போதும் நினைந்து தனக்குள் திளைக்கும் சுயநலமிகளால் புறக்காட்சிகளை கருணையோடு கண்டறியவே முடியாது. ரயிலில் ஏதோ ஒரு பெட்டியில் இருந்து மிதந்து வரும் புல்லாங்குழல் ஒலி… நாம் இறங்குவதற்குள் நாமிருக்கும் பெட்டிக்கு வந்துவிடாதா என்றேங்கும் மனம் நீலவேணியின் மனமெனும் பெருவெளியில் மிதப்பதையே இப்புத்தகம் வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறது. ’’சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பித்தளையால் ஆன ’ரயில் கூஜா’ என்று ஒன்றிருந்தது. இதற்கு ’திருகு சொம்பு’ என்றும் பெயருண்டு. பயணங்களில் பெரிதும் பயன்பட்ட இந்தப் பாத்திரம் இருந்த இடத்தைதான் இன்றைக்கு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பிடித்துக்கொண்டுவிட்டன’ என்றெழுதி, தனது நாஸ்டால்ஜியாவை பதிவு செய்துள்ளார் நீலவேணி.வெளியீடு: தமிழ் அலை, 3.சொக்கலிங்கம் காலனி, தேனாம்பேட்டை, சென்னை – 86. போன்: 7708597419. பக்கம்: 192. விலை: ரூ.200.