பாண்டியர்கள் முனி -வினோத் மலைச்சாமிமதுரையில் உள்ள அவனியாபுரம் எனும் ஊரை மையப்படுத்தி அகலமான ஆய்வைச் செய்திருக்கிறார் வினோத் மலைச்சாமி. இந்த ஆய்வின் கிளைப் பரப்புகளாக பொதிகை மலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் என பரவலான இடங்களை தனது ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். தமிழியல், சமூகவியல், வரலாறு, தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் என பலதரப்பட்ட தளங்களிலும் இந்த ஆய்வு பயணிக்கிறது.வினோத் மலைச்சாமியின் சித்தாந்த பலம், கடும் முயற்சி, அயராத உழைப்பு ஆகியவற்றின் விளைச்சலாகவே இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.இந்நூல் ஆக்கத்திற்காக பல இடங்களுக்கு தான் நேரில் சென்று கள ஆய்வு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலாக்கம், நாட்டார் வழக்காற்றியலில் மிக குறிப்பிடத்தக்க வரவாகும். இந்த ஆய்வில் இவர் எடுத்தாண்டுள்ள தொன்மங்கள், குறியீடுகள், மொழிகள் யாவும் தமிழ் பண்பாட்டுச் சூழலை இன்னும் இன்னும் பெருமைப்படுத்துகின்றன.இதில் பார்வைக்குச் சாதரணமாகத் தெரியும் சிலைகள், கோயில்கள், தடங்கள் ஆகியவற்றை நிலவியல் அமைப்புடனும் ஊருடனும் இனைத்துப் பார்த்து, அதை ஒரு பவுத்த வாசிப்பு முறையில் அணுகுகிற விதம் தனித்துவமானது!வெளியீடு: ஜித்தன் பதிப்பகம்,2/242 அம்பெத்கர் நகர், சோத்திரியம், எடையூர் 614 702.போன்: 9444988404. பக்கம்:112. விலை: ரூ.200.அவர்கள் அவர்களே-ப.திருமாவேலன் தனது இதழியல் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுத்தாக்கியிருக்கிறார் திருமாவேலன். அதன் பின்னரும் அவர்களுடைய மேன்மையை, சிந்தனையை உற்றறிந்து அவர்களைப் பற்றி தமிழ்ச் சமூகம் அறிய நல்லதொரு ஆவணமாக்கியிருக்கிறார். ‘மனிதப் பிறப்பு என்பது இருவரால் (தாய் – தந்தை) மட்டுமே ஆனது அல்ல; பலரால் ஆனது என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு’ என்று தன்னைப் பற்றி சொல்லும் திருமாவேலன், வாழ்வு என்பது ஒரு சமூக நிகழ்வு என்பதை அடையாளப்படுத்துகிறார்.சின்னக்குத்தூசி, இன்குலாப், பிரபஞ்சன், விகடன் எம்.டி எஸ்.பாலச்சுப்பிரமணியன், வாலி, செளபா, மணவை முஸ்தபா உள்ளிட்ட பல உன்னதமானவர்களுடன் பழகக் கிடைத்த நாட்களின் உரையாடல்கள் இந்நூலில் எதிரொலிக்கின்றன.’யாரைத்தான் எதிர்க்கவில்லை’, ‘ஊழலுக்கு ஒன்பது வாசல்’, ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியார்’, ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’… உள்ளிட்ட திருமாவேலனின் மற்ற நூல்களுக்கு இணையான புத்தகம் இந்நூலாகும்!வெளியீடு: அந்திமழை, 17.முதல் தளம், விஜயா நகர் முதல் தெரு, ஸ்ரீதேவிக்குப்பம் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை – 87.போன்:9443224834. பக்கம்:176. விலை: ரூ.175..மென்னி-மா.காளிதாஸ் மென்னுணர்வுகளை தனது கவிதைக்குள் பதியம் போடுபவர் கவிஞர் மா. காளிதாஸ். அவரது அகமன வாசல் பெருவெளியில் மொழிவழி காட்சிப்படுத்தப்படுவதாகவே அவரது எல்லா கவிதைகளும் அமைந்திருக்கும். உள்ளங்கைகளை பரபரவென தேய்க்கும்போது எழுகிற மெல்லிய வெப்பத்தைக் கொண்ட எழுத்துகள் மா.காளிதாஸுடையது.நூலிலிருந்து:‘அழைப்பு மணி கைக்கெட்டாததேவதையின்இசைக்குறிப்பு நழுவிகாற்றில் கலக்கிறது. ‘’இந்தாங்க அங்கிள்உங்க அழிரப்பர்…’’எனக் கையில் திணித்துநகர்பவளைத் தூக்கிஒரு முத்தம் தருகிறேன். பதில் முத்தம் தந்துவிட்டுகன்னத்தைத் துடைப்பவளின்கையிலிருந்துஉதிர்கிறதுஅதுவரை காணத் தவித்தகனவின் பிசிறு’. இந்த கவிதை ஓர் உதாரணம்தான். இந்நூலுக்குள் பூத்திருக்கும் அழகின் மார்கழி பூக்கள் வாசிப்பவரை ஆழ யோசிக்க வைப்பவை!வெளியீடு:கடல் பதிப்பகம், 17.முதல் தளம், விஜயா நகர் முதல் தெரு, ஸ்ரீதேவிக்குப்பம் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை – 87.போன்:8680844408. பக்கம்:112. விலை: ரூ.160..டெர்சு உஸாலாவிளாதிமிர் கே ஆர்சென்யேவ் தமிழில்: அவை நாயகன் நகரத்தில் வசிக்கும் ஒரு மனிதனுக்கும் காட்டில் தனித்தலையும் ஒரு பழங்குடி மனிதருக்கும் இடையிலான பரிவையும் வாழ்வையும் தொட்டுச் செல்லும் எழுத்துப்பதிவே இந்தப் புத்தகமாகும். ரஷ்யா நாட்டைச் சேர்ந்த, இயற்கை ஆர்வலர் விளாதிமிர் கே ஆர்சென்யேவ் என்கிற ராணுவ அதிகாரியின் பயணக் குறிப்புகளை அவை நாயகன் மிக அழகாக தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். கிழக்கு ஆசியப் பகுதிகளில் மாபெரும் பயணங்களை மேற்கொண்டவர் ஆர்சென்யேவ் . அவ்வாறு அவர் அலைந்து திரிந்து ஆய்வு மேம்பாட்டுப் பயண வழியில் டெர்சு என்கிற வேட்டைக்காரனை சந்திக்கிறார். பழங்குடி மனிதனனான அந்த வேட்டைக்காரனுடனான் அனுபவங்களின், உரையாடலின் செரிவு தான் இந்த டெர்சு உஸாலா!உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கிலான வாசகர்களைச் சென்று சேர்ந்த படைப்பு இது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இரண்டு மொழிகளில் திரை மொழியாக்கம் கண்டு, திரைப்படமாகவும் ஆகியிருக்கிறது. புகழ்பெற்ற ஜப்பானிய டைரக்டர் அகிரா குரோசாவாவும் இப்படைப்பை இயக்கியுள்ளார்.வெளியீடு: ஓசை பதிப்பகம், 70 ஏ. இராஜூ சாலை, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர்- 12. போன்: 91- 4224372457 பக்கம்:410. விலை: ரூ.300.