பயணங்களில் உலவும் வாழ்க்கை-நீலவேணிரயிலில் ஏதோ ஒரு பெட்டியில் இருந்து மிதந்து வரும் புல்லாங்குழல் ஒலி... நாம் இறங்குவதற்குள் நாமிருக்கும் பெட்டிக்கு வந்துவிடாதா என்றேங்கும் ரசனை, நீலவேணியின் மனமெனும் பெருவெளியில் மிதப்பதை இப்புத்தகம் வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறது. “40 ஆண்டுக்கு முன்பு பித்தளையால் ஆன ‘ரயில் கூஜா’ (திருகுச் சொம்பு) என்று ஒன்றிருந்தது. பயணங்களில் பெரிதும் பயன் பட்ட இந்தப் பாத்திரம் இருந்த இடத்தைதான், இன்றைக்கு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பிடித்துக் கொண்டுவிட்டன’ என்றெல்லாம் எழுதி, தனது பயணங்களைப் பதிவுசெய்து உள்ளார் நீலவேணி.ரயில் பயணத்தில் சேமித்த அனுபவ நாணயங்களை குமித்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் கதைமொழி சிறப்பு!வெளியீடு: தமிழ் அலை, 3, சொக்கலிங்கம் காலனி, தேனாம்பேட்டை, சென்னை&86. போன்: 7708597419. பக்கம்: 192. விலை: ரூ.200..காதலின் மீது மோதிக்கொண்டேன்-கோ.பாரதிமோகன்‘கஜல்’ கவிஞர் பாரதிமோகனின் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது மனசுக்குள் ஜரிகை மழை பொழிகிறது. புத்தகத்தில் இருந்து:‘காதல்...தாய் தந்தையற்றஅநாதைஅதைநானும் நீயும்தான்வளர்க்க வேண்டும்’ என்றெழுதும் பாரதிமோகன் இன்னொரு கவிதையில்...‘பொன் வைத்த இடத்தில்பூ வைக்கலாம்உன் இடத்தில்யாரை வைப்பது?’ என்று கேட்டு, காதலதிகாரம் படைக்கிறார். இதேபோல‘நீ பருகியமிச்சத்தைப் பருகிபிழைக்கிறது காதல்’ எனும் வரிகள் மயக்க வயலின் வாசிக்கிறது!வெளியீடு: மௌவல் பதிப்பகம், 21/9, வரதர் தெற்கு மடவிளாகம் தெரு, வலங்கைமான். போன்: 9787708687. பக்கம்: 80. விலை: ரூ.100..நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம்-அதிஷாஇப்புத்தகம் தோல்விகளை சுட்டும் பதிவல்ல; பலவீனமாகும் முயற்சிகளை போஷாக்காக்கும் சக்தி படைத்த எழுத்தாக உள்ளது. ‘நடைபயிற்சிக்குச் சென்ற 3வது நாளே தொப்பையை அளந்து பார்த்து ‘என்ன இன்னும் குறையல’ என்று ஃபீல் ஆகக் கூடாது. காத்திருக்க வேண்டும். கூடவே, நீங்கள் செய்கிற பயிற்சி எதுவாக இருந்தாலும் அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் களம் இறங்கவே கூடாது’ என்கிற வரிகள் கவனத்துக்குரியவை..‘ஓட்டமோ, தியானமோ, யோகாவோ, உடலை வறுத்தெடுக்கக் கூடிய ஒரு புதிய, நல்ல பழக்கத்தை உருவாக்குவது அத்தனை சுலபமல்ல. அதை முதலில் ஏற்றுக்கொண்டால்தான், நம்மால் எந்தப் புதிய உடற்பயிற்சிக்கும் நம்மை தயார்படுத்திக்கொள்ள முடியும்’ என்பது அதிஷாவின் டானிக் வார்த்தைகள்! வெளியீடு: தமிழ்வெளி, 1, பாரதி தாசன் தெரு, சீனிவாசா நகர், மலயம்பாக்கம், சென்னை&122. போன்: 9094005600. பக்கம்: 80. விலை: ரூ.100..கருப்பு வெள்ளை நாட்களின் மலரும் நினைவுகள்-எஃப்.வில்லியம் ஆண்ட்ரூஸ்இது ‘பகிர்தலின் காலம்’. உணர்ந்ததை, ரசித்ததை பகிர்வது ஒரு கலை. ஆனால், மென் மனதை தொலைத்தவர்களின் கூடாரமாகிவிட்டது இன்றைய பூமி. உரையாடல் என்பதே இற்று விழுந்துவிட்டது.கோகோ கோலாவின் கடைசி சொட்டுக்குக் கொடுக் கிற மதிப்பைக்கூட, ஒரு மனிதன் சக மனிதனுக்குக் கொடுப்பது இல்லை. இப்படியான காலத் தில் இந்தப் புத்தகம் அன்பின் உரையாடலாக மலர்ந்துள்ளது.ரேடியோ, பொங்கல் வாழ்த்து, சிலேட்டு, வாடகை சைக்கிள், சினிமா பாட்டுப் புத்தகங்கள், மரத்தூள் அடுப்பு, கை வைத்தியம், தாவணி, நியூஸ் பேப்பர் பொட்டலம் என... சாயம் இழந்த வாழ்வின் நிறங்களைப் பேசும் புத்தகம் இது!வெளியீடு: செல்லம் பிரான்சிஸ் பதிப்பகம், 38/103, 3&வது வீதி, திருவள்ளுவர் நகர், ராமநாதபுரம், கோயம்புத்தூர்&45. போன்:9385561680. பக்கம்: 287. விலை: ரூ.325.