-முத்துராமலிங்கன்இயக்குநர் அட்லீயைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள்... அவற்றில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஜவான் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்களுடன் சேர்ந்து FDFS பார்க்க ரோகிணி தியேட்டருக்கு பரபரப்பாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தவரை வழிமறித்து ஒரு அவசரப் பேட்டி கண்டோம்....இன்னும் சில நிமிடங்களில் உங்கள் ‘ஜவான்’ படத்தை உலகமே பார்க்கப் போகிறது. இந்த நிமிடத்தில் எப்படி உணர்கிறீர்கள்? “நெஞ்சு படபடக்கவே செய்கிறது. இது எனக்கு என்று இல்லை. இதற்கு முன் எத்தனை ஹிட் கொடுத்திருந்தாலும், அடுத்த பட ரிலீஸ் என்று வரும்போது, உலகம் முழுக்க உள்ள அத்தனை இயக்குநர்களின் மனநிலையும் அதுதான்.ஆனால் ஜவானைப் பொருத்தவரை நாங்கள் ரிலீஸுக்கு முன்பே வென்று விட்டோம் என்பதுதான் நிஜம். ஏனென்றால் இந்திய சினிமா சரித்திரத்தில், இதற்கு முன் ரிலீஸாகி சரித்திரம் படைத்த, இதே ஷாருக்கின் பதான் ரிலீஸான தியேட்டர்களை விட அதிகமாக சில ஆயிரம் தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸாகி சாதனை படைத்திருக்கிறது. அதே போல் மூச்சுமுட்ட வைக்கும் எண்ணிக்கையில் முன்பதிவுகள் நடந்திருக்கிறது. என் கணிப்பு சரியானது என்றால், இப்பட வசூல் நிச்சயம் ஆயிரம் கோடியைத் தாண்டும்.”.படம் தயாரிப்பு நிலையில் இருந்தபோது, பட்ஜெட் பலமடங்கு அதிகரித்தது தொடர்பாக , தயாரிப்பாளர் ஷாருக் கானுக்கும் உங்களுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவியதாக செய்திகள் வெளியானதே? “இப்படிப்பட்ட செய்திகள் நமது தமிழ் மீடியாக்களில் மட்டுமே வந்தன. இதற்கு முன்பே பாக்யராஜ், என் குருநாதர் ஷங்கர், போன்ற பல தமிழ்க் கலைஞர்கள் இந்தியில் எவ்வளவோ சாதித்து விட்டார்கள். என்றாலும், ஒரு தமிழனாக ஷாருக்கை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்ததில் எனக்குப் பெருமைதான். ஆனால் இதைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு எனக்கும் ஷாருக்குக்கும் நடக்காத சண்டையைப் பற்றி எழுதுவதால் என்ன பிரயோஜனம்.ஒரு ஆண்டில் முடிய வேண்டிய படம் மூன்று ஆண்டுகளாக இழுபறி ஆனதற்குக் காரணம் கொரோனா என்பதை உலகம் முழுக்கவே அறியும். அப்புறம் படம் துவங்கும் போது இருக்கும் பட்ஜெட், நடைமுறை என்று வரும்போது கொஞ்சம் எகிறவே செய்யும். அதற்கெல்லாம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஷாருக் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டார்.ஷாருக்கை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்றவுடன் செட் ஆகுமா என்கிற பயத்துடன் தான் படத்தைத் தொடங்கினேன். ஆனால் அவர் அவ்வளவு சுதந்தரம் கொடுத்தார். நல்ல புரிதலுடன் தான் படத்தை முடித்தோம். அதற்கு ஒரு உதாரணம் , மும்பையிலேயே எடுத்து முடித்துவிட சாத்தியமிருந்த சில காட்சிகளை, தமிழ் சினிமா கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்பதற்காக சென்னையில் எடுக்க சம்மதித்தார், ஷாருக். இப்படிச் சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது நம்மூர்க் கலைஞர்கள் 3000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு தர முடிந்தது.இதே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியிருந்தால் ஷாருக் நிறுவனத்துக்கு சுமார் 20 முதல் 25 கோடி வரை மிச்சமாகியிருக்கும். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், ‘தமிழர்கள் எனக்குத் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நான் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?’ என்று சொல்லிவிட்டே சென்னையில் படப்பிடிப்பை நடத்தச் சொன்னார், ஷாருக்”.நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி யார் தேர்வு? “இந்தியில் அதுவும் ஷாருக் கான் என்கிற டாப் ஸ்டாருடன் படம் செய்யப் போகிறோமே அதைத் தனியாக எப்படிக் கையாளப் போகிறோம் என்கிற பயம் வந்தபோது, நமக்கு வேண்டப்பட்ட சிலரை முக்கிய கேரக்டர்களாகப் போட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில்தான் நயன் மேடத்தையும் விஜய் சேதுபதி அண்ணாவையும் படத்துக்குள் கொண்டு வந்தேன். அதை ஷாருக்கிடம் தெரிவிக்க முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.ஆரம்பகட்ட சந்திப்பில், அந்த இரு கேரக்டர்களுக்கு இந்தி நட்சத்திரங்கள் யாரையாவது ஷாருக் மனதில் வைத்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்வதற்காக, என் தரப்பில் மவுனம் காத்தேன். அடுத்த இரண்டாவது சந்திப்பில் ‘அட்லீ ஸாகேப், முக்கிய நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வெல்லாம் உங்க சாய்ஸாகவே இருக்கட்டும்’ என்று அவர் சொன்னவுடன் இந்த இருவரைச் சொன்னேன். மறுப்பு சொல்லாமல் உடனே ஓ.கே. சொன்னார்.படப்பிடிப்பு சமயங்களில் விஜய் சேதுபதி அண்ணாவையும் நயன் மேடத்தையும் அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக்கொண்டார், ஷாருக்.”.உங்களது மற்ற படங்களுக்கு வந்தது போலவே இந்தப் படத்தின் கதை குறித்தும் ஏகப்பட்ட ஹேஷ்யங்கள். விஜயகாந்தின் ‘பேரரசு’ தொடங்கி பாரதி, பாக்யராஜாக்களின் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் காப்பி என்று..? “எனது துவக்க காலத்தில் இதுபோன்ற இஷ்யூக்கள் வந்த போது கொஞ்சம் துவண்டு போயிருக்கிறேன். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு செய்கிறவர்களை கண்டுகொள்ளக்கூட நேரம் இல்லை. ஏனென்றால் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு அவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது. இன்னும் ஒருவகையில் சொல்லப் போனால் இப்படி இஷ்டத்துக்குச் சொல்லிக் கொண்டிருப்பவர்களை ஏறி மிதித்து, இன்னும் உயரத்துக்குப் போக வேண்டும் என்ற தூண்டுதலை இவர்களே எனக்குக் கொடுக்கிறார்கள்.”.அடுத்த படம் ரஜினியுடன், விஜயுடன், மீண்டும் ஷாருக்குடன் என்று முக்கோணச் செய்திகள்…? “மூன்று வருடங்களாக ஜவானுக்காக மூச்சு விடக்கூட நேரமில்லாத வகையில் உழைத்ததால், உண்மையில் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். அடுத்த நான்கு மாத கால்ஷீட் நிச்சயமாக என் மனைவி, மகனுக்குத்தான். எனவே, என் அடுத்த படம் யாருடன் என்பது குறித்து சரியான முடிவெடுக்க இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ரஜினி அழைத்தால் தட்ட முடியுமா? ஷாருக் என்னை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தவர். அவரை மறக்க முடியுமா ? விஜய் அண்ணா எனக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை...” நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கிவிட்டு, ‘ஜவான்’ FDFS க்கு ரோகிணி நோக்கிப் பறந்தார் அட்லீ.