-அய்யப்பன்பிரமிக்க வைக்கும் பாகிஸ்தானின் ஃபாஸ்ட் பௌலிங், பிரமாதப்படுத்தும் இலங்கை மற்றும் பங்களாதேஷின் ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்கள், காட்டுச்செடிகளாக வேர் பரப்பி தங்களுக்கான இடத்திற்காகப் போராடும் ஆஃப்கான் மற்றும் நேபாளம், ரியாலிட்டி செக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் இந்தியா என களை கட்டுகிறது ஆசியக்கோப்பை. நடந்து முடிந்துள்ள முதல் மூன்று போட்டிகளுக்குள் ஒரு சின்ன விசிட்......பாகிஸ்தான் க்ஷிs நேபால் :கிசிசி ப்ரீமியர் கோப்பையை வென்றதன் மூலமாக ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பினை நேபாளம் பெற்றிருந்தது. 1996-ல் இருந்து சர்வதேசக் கிரிக்கெட்டில் ஆடி வந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஃபார்மட்டிலும் அவர்கள் ஆடியதேயில்லை. 2014-ல் டி20 ஒன்றில் ஆஃப்கானை வீழ்த்தியதே அவர்களது உச்சகட்ட சாதனை. எனவேதான் இத்தொடரில் ஆடும் வாய்ப்பே அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகமளித்திருந்தது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் வலம் வரும் பாகிஸ்தானுக்கோ வெற்றி விக்கெட் கணக்கிலா, ரன் கணக்கிலா என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது..எதிர்பார்த்தபடியேதான் முடிவும் இருந்தது என்றாலும் நேபாளம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் தங்களது வெளிச்சப் பொட்டுக்களை ஒளிரவிடவும் தவறவில்லை. ஒருநாள் போட்டிகளுக்குரிய தரவரிசையில் டாப் 5-ல் இடம்பெற்றிருக்கும் ஃபாகர் ஜாமன் மற்றும் இமாம் உல் ஹக்கினை ஏழு ஓவர்களுக்குள்ளேயே பேக் செய்து அனுப்பியிருந்தனர். சில தருணங்களில் அசாத்தியமான ஃபீல்டிங்கையும் அவர்களிடமிருந்து பார்க்க முடிந்தது. ரிஸ்வானை ரன்அவுட் செய்ததெல்லாம் இந்த கேட்டகிரியில் சேரும். அதேசமயம் பாபரின் கேட்சினை 55 ரன்கள் இருக்கும்போது தவறவிட்டது போல சமயத்தில் படுமோசமாகவும் களத்தடுப்பில் சொதப்பினர்.பாபர் அசாம் சதம் அடித்து பின்னர் 150 ரன்களைக் கடந்ததெல்லாம் திரைக்கதையின்படியே நகர இஃப்திகாரின் சதம் மட்டும் `ளிut ஷீயீ tலீமீ தீறீuமீ’ என்பதைப் போல் அக்ரஷனும் அதிவேகமும் கலந்து வந்து கடைசி 10 ஓவரில் 129 ரன்கள் வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் சேர்த்து 342 ரன்களை எட்ட வைத்து விட்டது. நேபாளத்தின் அனுபவமின்மை பேட்டிங்கில் தெளிவாகவே வெளிப்பட, 104 ரன்களுக்குள்ளேயே நேபாளத்தினை வாரி சுருட்டிப் போட்டன பாகிஸ்தானின் வேகச் சூறாவளிகளும், ஷதாப்பின் சுழல் மாயமும். 238 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றி என்பது பாகிஸ்தானின் ரன்ரேட்டினை கணிசமாக உயர வைத்துவிட்டது..இலங்கை க்ஷிs பங்களாதேஷ் :பேட்ஸ்மேன்களின் பேரடைஸாக மாறிய முல்தானில் நடந்த முதல் போட்டி போலன்றி பௌலர்களுக்கு நேசக்கரம் நீட்டியது பல்லேகெலே. களத்தை முன்கூட்டியே கணித்திருப்பினும் அதற்கு ஏற்றபடி தங்களது ரன்சேர்ப்பினை பங்களாதேஷ் கட்டமைக்கவில்லை, இலங்கையும் அதற்கு அனுமதிக்கவில்லை. நெருக்கடியான லைன் மற்றும் லெந்த்களில் பௌலிங் செய்து அத்தனை பந்துகளையும் டாட் பால் ஆகவைத்தது. விளைவு அது தந்த அழுத்தத்தால் தவறான ஷாட்களை ஆடுமாறு தூண்டப்பட்டு பேட்ஸ்மேன்கள் வெளியேறினர். முக்கியமாக தீக்ஷனா மற்றும் பதிரானா நிரம்பவே கலங்கடித்தனர். தன்ஷித் ஹாசனை திணறடித்த தீக்ஷனாவின் கேரம் பாலும், தடுமாற்றமே இன்றி ஆடிக்கொண்டிருந்த ஷாண்டோவினை அவர் வீழ்த்திய தருணமும் திருப்புமுனைகள். ஷாண்டோ அடித்த 89 ரன்களைக் கழித்துப் பார்த்தால் மற்றவர்கள் இணைந்து எடுத்திருந்த ரன்களே 67 மட்டும்தான்.பேட்டிங்கில் சோபிக்கா விட்டாலும் அவர்களது ஸ்பெஷாலிட்டியான பௌலிங்கில் பங்களாதேஷ் கோட்டை விடவில்லை, இலங்கையை சுலபமாக வெல்லவும் விடவில்லை. சமரவிக்ரமா & அசலங்கா கூட்டணி இணைந்து தூக்கி நிறுத்தாவிட்டிருந்தால், இலங்கையால் டாப் 3 பேட்ஸ்மேன்களால் விளைந்த பாதிப்பிலிருந்து மீளவே முடியாமல் போயிருக்கும். ஆங்காங்கே இலக்கைக்கு கொஞ்சம் மரணபயம் காட்டவே செய்திருந்தது பங்களாதேஷும்..இந்தியா & பாகிஸ்தான் :சனிக்கிழமை அன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுப்பு விடுவதைப் போல பாதிப் போட்டி நடைபெற மட்டுமே மழை அனுமதித்தது.ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்பது எவ்வளவு சர்வ நிச்சயமாக சொல்லப்பட்டதோ அதே அளவு அச்சுறுத்திய இன்னொரு விஷயம் இந்திய டாப் ஆர்டரைப் பற்றியது. இந்திய அணியில் டாப் ஆர்டர் தந்த கிக் ஸ்டார்ட்டை மிடில் ஆர்டர் வீணடித்தது எல்லாம் பழைய கதை. சமீபத்தில் ஒவ்வொரு போட்டியிலும் டாப் ஆர்டர் போடும் தவறான கணக்குகளைத் தான் மிடில் ஆர்டரும் மீதமிருக்கும் பின்வரிசையும் நேர்செய்து வருகின்றன. இப்போட்டியும் அதன் தொடர்ச்சியே. அதிலும் இந்திய டாப் ஆர்டருக்கும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்குமான ஏழாம் பொருத்தத்தின் இன்னொரு எபிசோடே இப்போட்டி..பொதுவாகவே பாகிஸ்தான் பந்துவீச்சின் போது “ஷாகீனிடம் தப்பினால் நசீம் நையப்புடைப்பார், அவரிடமிருந்து பிழைத்தாலும் ராஃபிடமிருந்து மீட்பில்லை, அப்படியும் மிஞ்சியவர்களை ஷதாப்பும் நவாஸும் சத்தமேயின்றி முடிப்பார்கள்” என்பதே பாகிஸ்தான் பந்துவீச்சின் ப்ளூ ப்ரிண்ட். அதிலும் அவர்களது வேகப்பந்துவீச்சு கதிர்வீச்சைப் போல ஆபத்தோடே எதிரணியைப் பயணிக்க வைக்கிறது. அதிலும் இப்போட்டியில் களமும் சூழலும் உண்டாக்கிய ஸ்விங், சீம் மூவ்மெண்ட் என வேகப்பந்து வீச்சின் ஒவ்வொரு கூறுகளும் அவர்களது கைகளில் இன்னமும் மாய வித்தைகளைக் கொண்டு வந்தன. புதுப்பந்தை உயிர்ப்பித்து இன்ஸ்விங்கிங் யார்க்கரோடு ஷாகீன் வேட்டையைத் துவங்க ரோஹித் மற்றும் கோலி என இரு தூண்களுமே சரிந்தன. அடுத்ததாக ராஃபின் ஷார்ட் பாலும் சீம் பௌலிங்கும் ஸ்ரேயாஸ் மற்றும் கில்லினை வழியனுப்பின. 66/4 அதுவும் 15 ஓவர்களுக்கு உள்ளாகவே..இஷான் கிஷன் & பாண்டியாவின் கூட்டணிதான் பள்ளத்தாக்கிலிருந்து அணியை மீட்டெடுத்தது. கேஎல் ராகுலின் காயத்தால் கிடைத்த வாய்ப்பை இஷான் மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி இருந்தார். ஏற்கனவே கேஎல் ராகுல், சாம்சனுக்கு இடையில் யார் விக்கெட் கீப்பர் கோட்டா மூலமாக அணிக்குள் இருக்க வேண்டுமென தொடரும் நாற்காலி சண்டையில் தனது பெயரையும் இஷான் கிஷன் சொருகியுள்ளார். பாண்டியாவும் துணை கேப்டன் என்ற பொறுப்பினாலோ அவசரகதியில் விழுந்த விக்கெட்டுகளாலோ நிதானமே பிரதானம் என ஆடினார். ஃபாஸ்ட் பௌலர்கள் விடைபெற்று ஸ்பின்னர்கள் வந்ததும் அதனை சரியாகவே பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தது இக்கூட்டணி. 300-ஐ எட்ட வாய்ப்பிருந்தது என்ற சமயத்தில் திரும்பி வந்த ஃபாஸ்ட் பௌலர்கள் விட்டதை பிடிப்பது போல மிச்ச விக்கெட்டுகளையும் வெட்டி சாய்த்து விட்டனர். 44 & 49 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்திருந்தது. பாதிப் பந்தியில் எழுப்பி விட்டதைப் போன்றதொரு ஏமாற்றத்தை மழை தந்து சென்றது. அந்த ஏமாற்றம் முடிவு தெரியாமல் போனதால் மட்டுமல்ல, இந்திய பௌலிங் குறித்து திறனாய்வு செய்ய முடியாமல் போனதாலும்தான். இருப்பினும் ஒருபாதி போட்டியே எந்த இடத்தில் இந்தியா இருக்கிறதென்பதனை சுயப்பரிசோதனை செய்வது போல மாறி இருக்கிறது.டாப் ஆர்டர் பெரிய மேடைகளில் காலை வாருகிறது, குவாலிட்டி ஃபாஸ்ட் பௌலிங்கை எதிர்கொள்ளுவதிலும் சிரமம் இருக்கிறது, டெய்ல் எண்ட் நம்பும்படியாக இல்லை என இந்தியப் பக்கத்தின் பலவீனங்களை பின்னூட்டமாகத் தந்து இப்போட்டி உணர்த்தி உள்ளது.உண்மை சுடும் என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கான தீர்வினை நோக்கி நகர்வது மட்டுமே உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா எடுக்க வேண்டிய அதிரடி அவசர நடவடிக்கை.