-மதுரை சத்யாஉலகத்தில் குணப்படுத்த முடியாத வியாதி எதுவெனக் கேட்டால், ஒவ்வொருவரிடமும் ஏதேனும் பதில் இருக்கும். இதே கேள்வியை அருணிடம் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு, “மனிதனின் சந்தேகப் புத்தி” என்பான்..அருணும் கவிதாவும் காதல் மணம் புரிந்தவர்கள். கவிதாவை விரட்டி விரட்டி முதலில் காதலித்தது அருண் தான். அழகின் மொத்த உருவமும் கவிதா மட்டுமே என்பது அவன் எண்ணம். ஒருவழியாக கவிதா தன்னை காதலிக்க தொடங்கியதும், அருண் வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்தான். அழகானப் பெண்ணை அடைந்துவிட்ட கர்வம் என்பதைவிட கவிதாவின் முழு உரிமைக்கு பாத்தியப்பட்டவனாக, தான் மட்டுமே இருக்கும் பெருமையும் அருணை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “நான் உன் அடிமை. உனக்கெனவே பிறந்தவன். நீ சொன்னால் இறப்பவன்” என்றெல்லாம் சத்தியப்பிரமாணத்தை கவிதாவிடம் அரங்கேற்றினான். “நான் உன்னைத்தாண்டி சென்றால், என்னைக் கொன்றுவிடு" என்று வசனமெல்லாம் பேசி கவிதாவை தனது ராஜாங்கத்தின் மகாராணியாக அமர வைத்தான்..அருணின்இத்தனை அன்பு கண்டு வியந்தவள், பதிலுக்கு அவளும் அருணிடம் அதீத பிரியத்தை செலுத்தத் தொடங்கினாள். இத்தனை அன்பானவனை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் முளைக்க, பின்னாளில் அதுவே பொசசிவ் குணமாகவும் மாறத் தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் கவிதாவின் பொசசிவ் குணத்தை நிறையவே ரசித்தான். “நான் உனக்கு மட்டுமே இருக்கணும்னு நீ சொல்றப்ப அந்த வார்த்தை எவ்வளவு பரவசமா இருக்கு தெரியுமா? ” என்று பேசிப் பேசி கவிதாவின் பொறாமைக் குணத்தை ஏற்றிவிட்டது அருண் தான்.அதன்பிறகு அருணின் நடவடிக்கைகளை கவனிப்பது மட்டுமே தன் வாழ்வெனக் கொண்டாள் கவிதா. ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் நடந்ததை விசாரித்தாள், யாரிடமெல்லாம் பேசினாய் என்றாள், அவர்கள் ஆண்களா, பெண்களா என கேள்விகளால் துளைத்தாள். ஒருகட்டத்தில் அவளையே அறியாமல் அருணை வேவு பார்க்கத் தொடங்கியிருந்தாள். காலப்போக்கில் கவிதாவின் இந்த செயல் அருணுக்கு சலிப்பைக் கூட்டியது. சலிப்பு வெறுப்பாக மாறத் தொடங்கியது."யாரைக்கேட்டு போனை லாக் பண்ணீங்க? டெலிடட் மெசஜ்ல என்ன எழுதியிருந்தீங்க? இன்னைக்கி ஏன் இவ்வளவு லேட்? அந்த பொண்ணுட்ட உங்களுக்கு என்ன பேச்சு?" என கேள்விகளாகவே உருமாறி அருணைச் சுற்றி வளையமிட்டாள் கவிதா..சமாதானம் செய்து சலித்துப்போனவனிடம், “இப்போதெல்லாம் என்மீது காதல் இல்லை. என்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டீர்கள்” என்று குறை கூறி அழத் தொடங்கிவிடுகிறாள். ஒருவழியாக காலில் விழுந்து சமாதானம் செய்து முடித்தாலும், அடுத்த ஓரிரு நாளில் இதேபோல சண்டையை வலியத் தொடங்குகிறாள்.“எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சண்டையைத் தொடங்கும் நோக்கத்தில், இந்த பெண்கள் எந்த பிரச்னைக்கும் பாஸ் பட்டனை மட்டுமே அழுத்துகிறார்கள், டெலிட் பட்டனை அழுத்துவதில்லை” என்று புலம்பிய அருண், தன்னைக் காதலால் கட்டிப்போட்டு பழிவாங்கும் கவிதாவை மாற்ற வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான். காதல் போதையில் பெண்களை உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், பின்னாளில் அதையே குற்றவுணர்வாகக் கருதிக்கொள்வதும் ஆண்களுக்கு வாடிக்கையாகிவிட்டது..சரி, இவர்களின் கதை இப்படியெனில், அதற்கு நேர்மாறாக இருந்தது தோழி பானுவின் நிலை. சேகருக்கும் பானுவிற்கும் வீட்டில் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு முன்பு வண்டி வண்டியாக வாக்குறுதிகளை வழங்கினான் சேகர். “நீ மேற்கொண்டு படிக்கணும்னா படிக்க வைக்கிறேன், வேலைக்கு போக விரும்பினா போகலாம். உனக்கு எல்லா சுதந்திரமும் கல்யாணத்துக்கு அப்புறமும் தர்றேன்” என வரம் கொடுக்கும் சாமியாகி சேகர் நிற்க, அவனது அருளில் மயங்கி திருமண வலையில் தன்னை ஒப்புக்கொடுத்தாள் பானு. சுதந்திரம் என்பது யாரும் கொடுத்து வருவதில்லை என்பதை அப்போது அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.திருமணமான மூன்றே மாதங்களில் சேகரின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. பானுவின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் தன் ஆசைவார்த்தைக்கொண்டு நிராகரிக்கும் வித்தையில் அவன் தேறியிருந்தான். “படிக்கிறதெல்லாம் கஷ்டமான வேலை கவிதா. நீ நிம்மதியா, ஜாலியா வீட்லயே இரு” என்றான். “சரி, வேலைக்கு போகவா?” எனக் கேட்டால், “பானு, நீ எவ்ளோ அழகா இருக்க… வெளியே வேலைக்கு போனா அங்க பலதரப்பட்ட ஆண்கள் இருப்பாங்க. என் செல்லத்தைக் கண்ணு வைப்பாங்க. அதெல்லாம் வேணாம், வீட்லயே சந்தோஷமா இரு” என்றான்..எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பானு, தயக்கத்துடன் சேகரிடம் “சரிங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்ச பிறகு கொஞ்ச நேரம் ஃபேஸ்புக், இன்ஸ்டால வீடியோ பார்க்குறேன்” என்று சொல்ல அதற்குள்ளும் மூக்கை நுழைத்தான் சேகர். “சரி, பானு நீயும் நானும் ஒரே அக்கவுன்ட் யூஸ் பண்ணிக்கலாம். அப்பதான் பொறுக்கி பசங்க இன்பாக்ஸ்ல வரமாட்டாங்க” எனக்கூற வேறுவழியின்றி அதற்கும் தலையாட்டினாள் பானு.ஒருமுறை சேகர் தன் அலுவலகத்திலிருந்து பானுவிற்கு அழைக்கையில், போன் பிசியென வந்தது. உடனே அலுவலகத்திற்கு பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கே வந்துவிட்டான். “யார்கிட்டஇவ்ளோ நேரம் பேசிட்டிருந்த?” எனக் கேட்டு அவளிடமிருந்து போனை பிடுங்கி அலசினான். பானுவிற்கு முதல் முறையாக சேகரைக் கண்டு பயம் வரத் தொடங்கியது.சேகர் தன்னிடம் காட்டுவது அக்கறை அல்ல, சந்தேகம் என புரிந்துக்கொள்ள சேகரின் இத்தனை செயல்கள் அவளுக்கு தேவைப்பட்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம்சேகர் தன் இஷ்டப்படி யூகித்து பானுவை வார்த்தைகளால் காயப்படுத்த தொடங்கினான். கல்யாணத்திற்கு முன்பு “சுதந்திரம் நான் தர்றேன்” என்ற வார்த்தையை சேகர் பயன்படுத்தியபோதே பானு சுதாரித்திருக்க வேண்டும். அன்று தவறவிட்டவள், இப்போது தினம் தினம் அவதிப்படுகிறாள்..இப்படித்தான் உறவுகளுக்குள் யூகத்தின் அடிப்படையில் சந்தேகங்களும் அதனால் சண்டைகளும் முளைக்கின்றன. நடந்தது என்ன? எனக் கேட்டறியும் பொறுமையோ உண்மையை அறிந்துக்கொள்ளும் அவகாசங்களையோ அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. ’நான் நினைப்பதே சரி. என் முடிவே இறுதியானது’ என்கிற பிடிவாதத்தில் தங்களுக்குள் சந்தேகங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடக் கூடாதென கணவன்மனைவிக்குள் மறைத்துக்கொள்ளும் விஷயங்கள் எல்லாமே பின்னாளில் அவர்களுக்குள் பிரச்னையாகி நீள்வதே பெரும் வேதனை. . இந்த மனித மூளை விசித்திரமானது. முதலில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிய மனிதர்கள், தனக்கு விருப்பமான பதில்களையும் எதிர்பார்க்கத் தொடங்கினர். அதற்கு எதிர்மறையாக பதில் தரும் மனிதர்கள்மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினர்.தனக்கான மனிதர்கள், தான் நினைத்தபடிதான் நடந்துக்கொள்ள வேண்டும், தனக்குப் பிடித்தபடிதான் பேசவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.ஏன் இந்த மனிதர்களில் சிலர் சந்தேகத் தன்மையோடு இருக்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தால், சந்தேகப்படும் மனிதர்கள் பலரும் ஏதோ மன அழுத்தத்திலும், முன்னாளில் நிகழ்ந்த ஏதோ ஒரு மோசமான சம்பவத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். எங்கோ, யாரிடமோ அவர்கள் அனுபவித்த துரோகத்தையும் அந்த வலியின் இயலாமையையும் ஆற்றுப்படுத்திக்கொள்ள சக உறவுகளின் மேல் சந்தேகத்தைத் திணிக்கிறார்கள்..ஏதோ ஒன்றின் அல்லது ஒருவரோடு நிகழ்ந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த உலகமும் அவ்வாறுதான் என்ற முடிவிற்கு வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேடிப் பழகியவர்களால், கேள்விகளையும் சந்தேகங்களையும் நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. உறவுகளுக்குள் மட்டுமல்ல, சமூகத்தில் பெரும்பாலனோர் யூகத்திலேயே வாழ்வைக் கடத்துகிறார்கள். உண்மை அல்லாதவற்றை கற்பனை யூகத்தின் மூலம் உருவாக்கி பொழுதுபோக்குகிறார்கள்.சந்தேகத்தின் மற்றொரு சாரம்சம்தான் வதந்திகள். பிறரது வாழ்வின் அந்தரங்கத்தை அறிவது மனிதர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஒருவரைப் பற்றிக் கூடி நின்று பேசுவது என்பது முந்தையக் காலத்திலிருந்தே வழிவழியாக வந்துக் கொண்டிருக்கிறது.ஊர் கதை கேட்கும் பொருட்டே சிலர் காதுகளைக் கூர்தீட்டிக் கொள்கிறார்கள். அப்படி எதுவும் கேளாதபோது இந்த மனிதர்கள் தனக்குத் தானே கற்பனைக் கதைகளை உருவாக்கி, தன் குரூர குணத்திற்கு தீனி போட்டுக்கொள்கிறார்கள். இப்படி சந்தேகம் கொண்ட மனங்களை மாற்ற முயன்று தோற்றுப்போய் வேறோரு வாழ்க்கைத் தேடிய பலரது கதைகள் இருக்கின்றன. நம்பிக்கை துளியுமற்று ஒருவரோடு வாழ்தல் என்பதும்கூட துரோகத்தின் வகைமைதான்..ஒரு காட்சியைக் கண்ட பிறகு நிகழ்த்தும் செயல்பாட்டிற்கும், இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என யூகத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. ஒத்துவராத உறவெனில் பரஸ்பரம் பேசி பிரியலாம் அல்லது சந்தேகக் குணத்தை ஒரு வியாதியாக கருதி மனநல ஆலோசகர்களை அணுகலாம். அதைவிடுத்த வாழாமலும், வாழ விடாமலும் இருக்கும் மனிதர்கள் அபாயமானவர்களாக இருக்கிறார்கள்.எல்லோரிடமும் வெளிப்படுத்த முடியாத விஷயங்கள் ஒற்றிரண்டு இருக்கவேஇருக்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக இருக்குமென ஆழ்ந்த நம்பிக்கையை இணையரோடு வளர்த்துக்கொள்வதே சந்தேகத்தை களைவதற்கான நல்ல வழி. அன்பின் துணைகொண்டு எல்லாவற்றையும் வெல்ல முடியும் எனும்போது சந்தேகக் குணம்கூட மாற்ற முடிந்த ஒன்றுதான்!அறம் பேசுவோம்