-மதுரை சத்யாஓவியம்: ஸ்யாம்பலூனைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைக்கு தெரிவதில்லை, அது எளிதில் உடைந்துப்போகக் கூடியதுயென. அப்படி உடையாமல் போனாலும் நாளடைவில் காற்று மெல்லமெல்ல இறங்கி, வற்றி வாடிப்போகும். அந்த யோசனை துளியும் அறியாத குழந்தைகள், பலூனை வாங்கியதுபோலவே கடைசிவரை இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்கிறார்கள். அப்படியான அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட வளர்ந்த குழந்தைகளே பெரும்பாலும் நம் அத்தியாயங்களின் கதை மாந்தர்கள்..அந்த நாள் அப்படி வெறுமையாக விடியும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சிப் பேசும் வார்த்தைகளால் தினம் தினம் குளிப்பாட்டியவன், இப்போது வெறுமனே வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி போட்டுவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டான்."நான் வெளியில் சாப்பிட்டுக்கொள்கிறேன், நீ சமைத்து சாப்பிடவும். நான் ஆபிஸ் கிளம்புறேன்"மிகச் சாதாரணமாக எழுதிவிட்டான், ஒரு லவ் யூ கூட இல்லை. நான் லேட்டாக எழுந்ததால் கோபப்பட்டிருப்பானோ? நான் எதுவும் சமைக்கவில்லை என்ற வருத்தமாக இருக்குமோ? குழம்பித் தவித்தாள்.நிலா இப்படித்தான்… இந்த உலகமும் மனிதர்களும் தனக்கேற்றவாறு இருக்கவேண்டும் என்று நினைப்பவள். அவள் உலகம் எதுவென, யாரெனக் கேட்டாள் சட்டென்று ஒற்றை வார்த்தையில் சொல்வாள் சங்கர் என..நிலா - சங்கர் தம்பதியர் பெரியவர்களால் இணைக்கப்பட்டவர்கள் என்றாலும், இருவருக்குள் காதல் ததும்பி வழிந்தது. திருமணம் நிச்சயமான அடுத்த நாளே நிலா எனும் நிஜப்பெயரை மறந்து அம்முக் குட்டி என்றழைக்கத் தொடங்கினான். அன்றிலிருந்து நிலா சங்கரின் அம்முக்குட்டியானாள்.நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் கடத்திய நாட்கள் சொர்க்கத்தில் எழுதப்பட்டவை. விடியலில் தொடங்கிய வாட்ஸ்அப் பரிமாற்றம் இரவு வந்தபிறகும் முடியாமல் நீளும். திருமணமும் அரங்கேறியது. ஒருவர் மீது ஒருவர் பித்தேறியபடி தேனிலவின் தித்திப்பை அள்ளி சுவைத்தனர்.மனித மனம் இப்படித்தான்… வாழ்வதற்கு யாரோ ஒருவரின் பையத்தியக்காரத்தனமான அன்பை எதிர்பார்த்துக்கொண்டே நாட்களைக் கடத்திவிட விரும்புகிறது. அது அமையாதபோது வாழ்வையே சபிக்கத் தொடங்குகிறது..அந்த பைத்தியக்காரத்தனம் ஒருகட்டத்தில்மெல்ல புத்தியைத் தேடத் தொடங்கும். காதலென்றாலும் நட்பென்றாலும் தாய்மையென்றாலும் அதில் சிறு புள்ளியேனும் சலிப்பு எட்டிப் பார்க்கும். அப்படி எட்டிப் பார்க்கத்தான் வேண்டும். ஆனால், அதன் பெயர் சலிப்பு அல்ல. விழிப்பு. அதுதான் உண்மையான உலகை உணர்த்தும். அன்பு மட்டுமே சோறு போடாது அல்லவா… ஆனால், இதையும் இயல்பென்று பக்குவத்துடன் கடக்கத் தெரிந்த மனங்களே மாச்சர்யங்கள் மறந்து ஆச்சர்ய வாழ்வை வளர்க்கின்றன.சங்கருக்கும் இந்த பிரச்சனைத் தொடங்கியது. கடிவாளம் கட்டப்பட்ட காதல் பார்வை வெளியுலகைக் காணத் தொடங்கியது. அதனூடே சிறுசிறு மறதியும் முளைக்கத் தொடங்கியது.தவறே செய்யாத மனிதர்கள் உலகில் யாருமில்லை என்பது மனதிற்கு புலப்படுவதே இல்லை. எல்லோரும் எப்போதும் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு மட்டுமே எல்லாரையும் அணுகுகிறோம். நிலாவும் அப்படியே அளவுக்கதிமான எதிர்பார்ப்பை சங்கர் மீது வளர்த்திருத்தாள்..அன்றைய தினம் சங்கர் ஏதோ அவசர அலுவல் காரணமாக வாட்சப்பில் எதையோ எழுதி அழித்துவிட்டான். அது ‘டெலிட் எவரிஒன்’ காட்ட நிலாவிற்கு கோபம் துளிர்த்தது. ஒன்றுமில்லாத அந்த விஷயத்திற்கு வாதத்தை தொடங்கினாள். அடுத்து நடக்கப்போகும் பிரளயங்களுக்கும் அந்த நிகழ்வே தொடக்கமாக இருக்கப்போகிறது என்பதை சங்கர் அறியவில்லை.எப்போதும் அம்முக்குட்டி என அழைத்துப் பழகிய சங்கரின் மனம் நாளாடைவில் நிலா எனும் பெயரை மறந்து தொலைக்க, யாரோ ஒரு நண்பர் யதார்த்தமாக மனைவியின் பெயரைக் கேட்கையில் தடுமாறி முழித்தான். இதுவும் நிலாவின் கோபப் பதிவேட்டில் மற்றொரு எண்ணாக உட்கார்ந்துக்கொண்டது.இந்த சுயநல மனம் அப்படித்தான்… தனக்கென வரைந்த கற்பனைக் காடு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகையில் அதில் மறைந்திருக்கும் மிருகங்கள் எல்லாம் மனதில் வந்து குடிகொண்டுவிடுகின்றன. அப்படித்தான் சங்கருக்கு எதிரான கோப மிருகம் நிலா மனதில் வளர்ந்துக்கொண்டிருந்தது.சூழல் மாறுகையில் மனிதர்களின் நடத்தையும் சற்றே மாறத் தொடங்கும். மனிதர்களிடம் காலம் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுதலிக்கும் மனங்களே காலப்போக்கில் வீட்டில் எலியும் பூனையாக வலம் வருகின்றன. சங்கரின் துளி மாற்றத்தைக்கூட சகிக்கமுடியாத நிலா சண்டைக்காரியானாள்.இருவருக்குள்ளும் நேரங்காலமின்றி வாக்குவாதங்கள் நிகழத் தொடங்கியிருந்தன..ஆயிரம் முறை சொன்ன செல்ல வார்த்தைகளுக்கு இடையில் ஒரே ஒரு வார்த்தை கோபமாக தவறிவந்துவிட்டால், தவறிய அந்த ஒரு வார்த்தைதான் ஆயிரம் முறை பழிவாங்கிக்கொண்டிருக்கும். அன்பு எப்போதுமே அகதியைப்போலத்தான். அன்பிற்கு அடைக்கலம் மட்டுமே கொடுக்கும் மனம், வேண்டா விருந்தாளியான வெறுப்புக்கு நிரந்தர சிம்மாசனமிட்டு அமர செய்கிறது. கரும்பலகையில் உறுத்தாத வெண்புள்ளி, வெண்பலகையில் ஒரு துளி கருப்புக்கும் வஞ்சத்தைக் கக்குகிறது.சங்கரின் வாழ்வில் அப்படியொரு சம்பவமும் நடந்தேறியது. ஏதோ வாக்குவாதத்தின்போது வார்த்தைகள் எல்லை மீற, பொறுமையிழந்த சங்கர் குரலை உயர்த்தி “நிலா” என்று கத்தியதுதான் தாமதம். எரிமலைக் குழம்பாக நிலாவின் முகம் கோபத்தில் கொதித்தது. எத்தனைக் கோபத்திலும் செல்லப்பெயரை எப்படி இவனால் மறக்க முடிந்தது? அம்முக்குட்டி கசந்துவிட்டாளா? அந்த நினைப்பே அவளது ஆக்ரோஷத்தை வளர்த்தது. இடையிறாத சண்டைகள் இயல்பாகி போயின..பலநேரங்களில் சங்கரின் சமாதானத்தை எதிர்பார்த்தே நிலா சண்டையைத் தொடங்குவாள். அந்த சூழலில்கூட அருகே வந்து தன்னை அணைத்துக்கொள்ள மாட்டானா, கையைப்பிடித்து சமாதானம் பேசிவிட மாட்டானா? என்றே நிலா உள்ளுக்குள் தவிப்பாள்.தனக்கான ஒருவன் தன்னை மட்டுமே சுற்றி வரவேண்டும்… தன்னைப் பற்றிய அத்தனை விஷயங்களும் பசுமரத்தாணியாக அவன் மனதில் பதிந்திருக்க வேண்டும். அதில் சிறு சறுக்கல் வந்தாலும் தன்மீதான பிரியத்தின் அளவு குறைந்துவிட்டதாகவே பெண்கள் கருதுகிறார்கள்.இவர்கள் இப்படியென்றால் அனிதாவின் – பாஸ்கர் தம்பதியின் கதை இன்னொரு பாடம். அவர்களுக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. பாஸ்கர் இன்று மாறிவிடுவான், நாளை மாறிவிடுவான், குழந்தை பிறந்தால் சரியாகிவிடுவான் என நினைத்தபடியே இத்தனை வருடங்களைக் கடந்துவிட்டாள் அனிதா..பாஸ்கரிடம் அப்படியென்ன குறை என்று கேட்டால், வீட்டில் உள்ள குறைகள் என்னவென்று தெரியாது என்பதே பெரும் குறையாக இருந்தது. பசியென சொல்லத் தெரியும், சாப்பாடு போட்டுக்கொள்ள தெரியாது. சமையலறையில் உப்பு டப்பாவை தேடச் சொன்னால், குறைந்தது ஒருமணி நேரமாவது எடுத்துக்கொள்வான் பாஸ்கர்.காபி, சாப்பாடு எல்லாமே நேரத்திற்கு கிடைத்துவிட வேண்டும். “என் பொண்டாட்டி எனக்கு எல்லாம் செய்வாள்… நான் வேலைக்கு போய் சம்பாதிச்சா மட்டும் போதும். என்னை அப்படித் தாங்குவாள்” என்று தன் பொறுப்பின்மையை பெருமையாக நியாயப்படுத்துவான் பாஸ்கர்.ஒருமுறை அனிதாவிற்கு உடல் நலமின்றி போக ஒரு சுடுதண்ணீர் வைக்கத் தெரியாமல் தடுமாறிவிட்டான். “உடம்பு சரியில்லைன்னா உங்க அம்மாவ வரச்சொல்ல வேண்டியதுதான… இல்லைனா நீ அங்க போய்தொலைய வேண்டியது தானே… எதுக்கு என்னை வேலை சொல்லி உயிரை வாங்குற...” என சலிப்பில் கத்திவிட்டான்.வீட்டுப் பொறுப்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் துளியும் பாஸ்கரிடம் இல்லை. ‘அனிதா இன்றி இந்த வீடு இயங்காது’ என்பதை பெருமையாகவே சொல்வான். ஆனால், அது அனிதாவிற்கு எத்தனை சுமையென ஒருநாளும் அவன் உணர்ந்ததில்லை. சுருக்கமாக சொன்னால் அனிதாவின் ஒட்டுண்ணியாகவே வாழ்ந்தான் பாஸ்கர்..வலிந்து திணிக்கும் அன்பும் சுமையும் ஒருநாள் தாங்க முடியாத நிலைக்கு அழைத்து சென்று பைத்தியமாக்கிவிடும். கிட்டதட்ட அனிதாவும் பைத்தியமாகிக்கொண்டிருந்தாள்.அன்பின் பெயரால், உரிமையின் பெயரால், எதிர்பார்ப்பின் பொருட்டு பொறுப்பின் சுமைகளை இன்னும் எத்தனை நாள் அனிதா சுமப்பாள்? பாஸ்கரை காணும் போதெல்லாம் இப்போது வெறுப்பே மிஞ்சியது. அது அவ்வப்போது சண்டையாகவும் மாறியது. எதையும் பொருட்படுத்தாத பாஸ்கர், அவன் போக்கிலேயே இருந்தான்.ஒருநாள் பொறுமை இழந்த அனிதா, “இங்க பாருங்க, சாயங்காலம் ஆபிஸ் விட்டு வந்துட்டா வீட்டுப் பொறுப்புகளை கவனிங்க. எனக்கு வரவர உடம்பு ரொம்ப முடியாமப் போகுது. நீங்க கொஞ்சம் கூடமாட வேலைப் பார்த்தா எனக்கு உதவியா இருக்கும்” என்று பேசி முடித்தாள்..பாஸ்கருக்கு முகம் சுருங்கிற்று. அனிதா மீது கோபம் கோபமாக வந்தது. “இப்ப என்னாச்சு, இவ்ளோ நாள் நீதானே எல்லாத்தையும் பார்த்துகிட்ட, இப்ப புதுசா என்னை வேலை வாங்குற. உடம்பு சரியில்லைன்னா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வேலையப் பாரு, அதை விட்டுட்டு என் தலையில கட்டாத” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.கணவரிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு வேண்டி நின்ற அனிதாவின் எதிர்பார்ப்பிற்கும்,மொத்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள நினைக்கும் பாஸ்கரனின் எதிர்பார்ப்பிற்கும் அங்கே பங்கம் விளைய அடிக்கடி வீடு ரெண்டுபட்டது.ஆரம்பத்தில் இவனை ராஜாவாக இருக்கவைத்துவிட்டு எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்தததன் விளைவுதான் இத்தனையும். அனிதாவின் இந்த மாற்றத்தை பாஸ்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்மீது பிரியமே இல்லை என புலம்பத் தொடங்கினான்.மனிதமனம் அப்படித்தானே யோசிக்கும். சின்னதொரு மனக்கசப்பில் வெறுப்பை உள்வாங்கியவர்கள், அதற்கு முன் காட்டிய அன்பையெல்லாம் துச்சமெனத் தூர எறிந்துவிடுகிறார்கள். இத்தனை நாள் தனக்கு சேவகம் செய்த அனிதா இப்போது மாறிவிட்டதை பாஸ்கரால் சகித்துக்கொள்ள முடியவில்லை..சுயநலத்தின் மாற்று வடிவமே எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆண் - பெண் உறவில் சமநீதி என்பது வார்த்தையளவில்கூட இருப்பதில்லை. ஒன்று, அடிமையாக இருக்கிறேன் என உளறுவார்கள் அல்லது அடிமைப்படுத்தும் எண்ணத்தை ஒருசேர வளர்த்துக்கொள்வார்கள்.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகிக்கொண்டிருக்கும் வரையே இங்கே எப்பேற்பட்ட உறவுகளும் நிலைத்து நிற்கின்றன. இந்த வாழ்வு இப்படியே செல்லும்… இந்த மனிதர்கள் இப்படியே இருப்பார்கள் என்ற நம்பிக்கை மாறும்போது அங்கே அன்பு உடைந்து போகிறது.அன்பின் சமநிலை என்பது சக மனிதர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலையசைப்பதும், இயலாமையின்போது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வதும்,வார்த்தை தவறிடும்போது மன்னிப்பை வாரி வழங்கிக்கொள்வதுமாக இருக்கையில் புரிதலின் காற்று இருபுறமும் சமமாக வீசத்தொடங்கியிருக்கும். அந்த நிமிடம் மனித மனம் வசந்தக் காலத்தை கையிலேந்தி மகிழும்!(அறம் பேசுவோம்)0