-மதுரை சத்யா தனது கூந்தலை ஒருபக்கமாக முன்னெடுத்து போட்டுக்கொண்டு நிமிடத்திற்கொருமுறை அதை கைகளால் நீவியபடி என்னெதிரில் அழகாய் ஒரு சிற்பம் வந்து நின்றது. அப்பூவையின் வாசம் நாசிக்குள் நுழைந்த அதேவேளையில் அவள் வாய் முழுவதும் சிரிப்பு. என்னைப் பார்த்ததும் பற்களையும் கடன் வாங்கியபடி இன்னும் அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள்..இத்தனை அழகாக இதற்கு முன் அவளை நான் பார்த்ததில்லை. நான் அவளை கடைசியாக சந்தித்து ஐந்தாண்டுகள் இருக்கும். அப்போது பக்கியாக திரிந்துக்கொண்டிருந்தாள். எண்ணெய் பூசியத் தலையைப் பட்டையாக வழித்து சீவியபடி தன் அழகை மறைத்துக்கொண்டுத் திரிவாள். “உன் வயசுக்கும் அழகுக்கும் சம்மந்தமில்லாத அப்பியரன்ஸை வெச்சிட்டு திரியாத, நல்லாவே இல்ல” என்று நானே பலமுறை திட்டியிருக்கிறேன். “ஆமா, அடுப்புல வெந்து சமைக்கிற எனக்கு இது போதும்” என்று விரக்தியாக சலித்துக்கொள்வாள். இப்போது ஆச்சர்யம், அப்படியே மாறிவிட்டிருக்கிறாள். அவளுடைய ஹேர் ஸ்டைல், மேக்அப்… எல்லாவற்றையும்விட அவளின் சிரிப்பில் எப்படி வந்தது இத்தனை தன்னம்பிக்கை, தைரியம்!.நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு அவளை நெருங்க… அவளும் ஆவலாக என் அருகே அமர்ந்து, “இதைக் கொஞ்சம் பார்க்குறீயா?” என்றபடி அவளது அலைபேசியில் அவளது ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களைத் திறந்துக் காட்டினாள். ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன். அங்கு அவள் இன்னுமின்னும் தேவதையாக ஜொலித்துக்கொண்டிருந்தாள். விதவிதமான அலங்காரங்களில், முக பாவனைகளில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சுதந்திர பறவையாக வானில் பறந்துக்கொண்டிருந்தாள்.அவள் படத்துடன் பாடல்களை இணைத்த வீடியோக்கள் பரவசத்தைக் கூட்டின. யூ டியூப் மற்றும் இன்ஸ்டாவிலும் பிரபலமாகியிருந்தாள். அவளது சமையல் டிப்ஸ், ரீல்ஸ், வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள். அவள் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ஆயிரங்களில் லைக்குகளை அள்ளியிருந்தாள். நூற்றுக்கணக்கான கமென்ட்டுகள் வேறு. அவற்றில் பெரும்பாலும் ஆண்கள் அவளது அழகை வர்ணித்து எழுதியிருந்தார்கள். சிலர் நாகரீகமாக, சிலர் வெளிப்படையாக, இன்னும் சிலர் அநாகரீகமாக. ஆனால், அநாகரீகமான கமென்ட்டுகள் எதையும் அவள் மனதில் ஏற்றிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டபோது, “அவங்க அப்படிதான். நல்லதை மட்டும் நாம ஏத்துக்கணும்…” என்றாள்.. "கொஞ்ச நாளாவே லைஃப் சந்தோஷமா போகுது. இத்தனை நாள் வெளியுலகம் தெரியாம இருந்தேன். இப்போ என்னைச் சுற்றி பெரியக் கூட்டமே இருப்பதா உணர்றேன். வீட்ல எவ்வளவுதான் வேலை பார்த்தாலும், என்னதான் நல்லா சமைச்சாலும் யாரும் ஒரு வார்த்தை பாராட்ட மாட்டாங்க. கொஞ்சமாவது பாராட்டுனாதான நமக்கும் வேலைப் பார்க்கத் தோணும். அஞ்சு மாசத்துக்கு முன்னாடிதான் எதிர் வீட்டு அக்கா யதேச்சையா என்னோட சமையலைப் பார்த்து ரொம்பவே பாராட்டிட்டு, ’ யூடியுப் ரீல்ஸ்ல வீடியோ எடுத்துப் போடு, நல்ல வரவேற்பு கிடைக்கும்’னு சொன்னாங்க. முதல்ல சமையல் வீடியோக்களைதான் அப்லோடு செஞ்சேன். அடுத்தடுத்து நான் பேசுறது, பாடுறதுன்னு நிறைய வீடியோக்களைப் போடுறேன். இப்ப நல்லா டெவலப் ஆயிட்டேன். ஃப்ரண்ட்ஸ் அவ்வளவோ பேர் குவிஞ்சிட்டாங்க. எவ்ளோ லைக்ஸ் தெரியுமா?" என்று குதூகலித்தாள். .குடும்பமே உலகமென நத்தையைப்போல வீட்டுக்குள் சுருண்டுக் கிடந்தவள், இப்போது இணைய உலகில் கிடைக்கும் பாராட்டில் மிளிர்கிறாள். இத்தனைக் காலமும் உறவுகளிடமும்கூட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல், தாழிட்டிருந்த அவளது இதயக் கதவுகள் தானாக திறந்து ஆயிரம் பட்டாம்பூச்சிகளை அவளைச் சுற்றிலும் பறக்கவிட்டிருந்தன. சரி, இவள் இப்படி எனில் அதற்கு எதிர்மறையாய் இன்னொருத்தி இணையத்தில் செல்ஃபியைப் பதிவிடுபவர்களைகூட செவிட்டில் அறையாத குறையாக கரித்துக்கொண்டிருந்தாள். அவளது ஃபேஸ்புக் பக்கத்தை கண்டாலே பலரும் தெறித்து ஓடினார்கள். “இந்த பொண்ணுங்களை எல்லாம் அவங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா? முன்னபின்ன தெரியாத ஆம்பளைங்க முன்னாடி பாட்டு பாடுற மாதிரி டான்ஸ் ஆடுற மாதிரி எப்படிதான் ரீல்ஸ் போடுறாளுங்களோ… இதைவிட கொடுமை, சிலதுங்க புரட்சின்னு சொல்லிக்கிட்டு அரைகுறையா வர்றாளுங்க… கலிகாலம். அந்த போட்டோவை யாராவது மிஸ்யூஸ் பண்ணா என்ன ஆகுறது? இதனாலத்தான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சுப்போறாங்க" என்று பொங்கிக்கொண்டிருந்தார்..இரு தரப்பின் வார்த்தைகளும் எனக்கு நியாயமாகவே பட்டது. ஆனாலும், நியாயம் என்பது எப்போதும் இரு பக்கமும் இருப்பதில்லை. அது அவரவர் பக்கம் இருப்பதாக அவரவர் நம்புவதால்தானே வாதங்கள் முளைக்கின்றன. தவிர தான், என்ன செய்யவேண்டும் என்று ஒரு பெண் தன்னிச்சையாக முடிவெடுப்பதுதானே சுதந்திரம்? அதற்கெதிரான கருத்துக்களோ வாதங்களோ முன்வைக்கப்படும்போது அவர்களின் உரிமைக்குள் அத்துமீறி நுழைவதாகவேதானே அர்த்தம்? பெண்கள் விரும்பும் அத்தனை வகையான சுதந்திரத்திற்கும் இந்த சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதும் நியாயம்தானே?ஆண்களைப் பொறுத்தவரை இணையத்தில் நிகழ்த்தும் பெண்ணின் எத்தகைய செயலும் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு… அவ்வளவுதான். நாகரிகமாக பேசுபவர்களின் மனதுக்குள்கூட அழுக்குகள் அப்பியிருக்கக் கூடும். அதேநேரம் இப்படியான மனிதர்களுக்கு பயந்து பெண்கள் தங்கள் சிறகுகளை முடக்கிக்கொள்ளவும் முடியாது..ஆண்கள் தன்னை எந்த பார்வையில் அளப்பார்கள் என்பதை கொஞ்சமேனும் பெண்களால் யூகிக்க முடியும். அது அவளது மரபு வழி வந்த உணர்வு. அப்படி ஆண்கள் அவர்களாக முன் மதிப்பிடும் யூகத்தின் அளவீடுகளால்தான் பெண்களின் சிறு சிறு சந்தோஷங்களுக்கும்கூட தடை விதிக்கிறார்கள். இங்கிருந்து தோன்றியதுதான் பெண் தனக்கானவள், தன்னுடைய சொத்து என்று நினைக்கும் ஆண்களின் குணாதிசயம். கூடவே, அவர்களுடைய சொத்தாகக் கருதிக்கொள்ளும் அந்த பெண்கள், தங்களால் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தவிர, ஆண்களோடு இருப்பதே பாதுகாப்பு என்று பெண் சமூகத்தையும் நம்ப வைத்து விட்டார்கள்.உண்மையில் மனதளவில் பெண்கள் தைரியமானவர்கள். ஆனால், பிறப்பிலிருந்தே ஆண் பிள்ளைக்கு தைரியத்தை வெளிப்படையாகவும், பெண் பிள்ளைக்கு பயத்தை மறைமுகமாகவும் ஊட்டத் தொடங்கியது, இந்த சமூகத்தில் இன்றுவரை தொடரும் மரபுப் பிழை..இன்றையக் காலக்கட்டத்தில் புகழ் மீதான ஆசையும், இணையத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தின் எதிர்பார்ப்பும் பெண்களிடம் பெருகிவருகிறது. அதனாலேயே சிலர் தங்களை கவர்ச்சியாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ இவையெல்லாம் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை, துணிச்சலின் வெளிப்பாடு, ’ஆமாம் நான் அப்படிதான், இப்போ என்ன?’ என்கிற சுயத்தை உறுதி செய்துக்கொள்ளும், கூடவே பாதுகாப்பு வளையத்தை இறுக்கிக்கொள்ளும் செயலாகவே கருதி செய்கிறார்கள். இவையெல்லாம் சரியென, தவறென சொல்லும் உரிமையை யாருக்கும் யாரும் தரத் தேவையில்லை. ஏனெனில் எல்லோருமே ஏதோ ஒரு தேவையின் பொருட்டே ஓடிக்கொண்டிருக்கிறோம். கவர்ச்சியாக தோன்றும் பெண்களைப் புகழ்வதை ஆண்கள் இயல்பாகவே செய்கிறார்கள். அதை விரும்பும் அந்த பெண்களோ அந்த பாராட்டைக்கூட ஒருவித லாபமாகவே கருதுகிறார்கள்..சமீபத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, “கல்லூரி பெண்கள் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தங்களது புகைப்படங்களைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். பெண்களின் பாதுகாப்புக் கருதி அவர் சொன்னது நியாயமாகவே இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலம் எங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பெண்களின் எதிர் கேள்வியும் நியாயமானதுதானே?பெண்கள் பலரும் வெளியே சொல்லாவிட்டாலும் ஆடை சுதந்திரம் குறித்து அவர்களிடம் இருக்கும் ஒரு கேள்வி என்னவெனில், “வெளிநாட்டில் பெண்கள் என்னதான் கவர்ச்சியாகவும் அரைகுறையாக ஆடை அணிந்தாலும் அங்கே அவர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, நம்மூரில் துப்பட்டா போடவில்லை என்றாலே தவறாக மதிப்பிடுகிறார்கள், அறிவுரைகளையும் வாரி வழங்குகிறார்கள். அப்படி என்றால் வெளிநாட்டு ஆண்கள் என்ன, அவ்வளவு நல்லவர்களா?”.கிடையாது. உலகம் முழுவதும் ஆண் என்பவன் ஆண் மட்டுமே. ஆண்களால் அவர்களே நினைத்தாலும் அவர்களின் அக இயல்பை மாற்றிக்கொள்ள இயலாது. அதுவே அறிவியல், உடலியல், உளவியல். கடவுளே ஆணாக உருமாறிவந்தாலும் இதுவே உண்மை. ஓர் ஆண் நல்லவன், கண்ணியவான், கெட்டவன், கேடு கெட்டவன் என்பதெல்லாம் அவன் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் மன வரையறைகளைப் பொறுத்தது. அதன் சதவிகிதங்கள் மாறக்கூடும். அப்படி மாறும் சதவிகிதங்களே அவன் எப்படியானவன் என்பதை தீர்மானிக்கும். மற்றபடி ஆண் ஒருபோதும் மாறுவதில்லை. மாறவும் முடியாது.அப்படி எனில் வெளிநாடுகளில் பெண்ணின் ஆடை சுதந்திரத்தில் பெரிதாக ஆண்கள் பிரச்னையைக் கிளப்பாததது ஏன்? ஏனெனில், சிறு வயதிலிருந்தே பெண்ணின் உடலமைப்பு இதுதான் என்று பார்த்து பார்த்து சகஜமாக வளரும் வெளிநாட்டு ஆணுக்கும், மூடிமறைத்து பார்க்கும் நம்மூர் ஆணுக்கும் உள்ள வித்தியாசமே இதற்கான பதில்..தான் யாரென உலகிற்கு வெளிக்காட்டும் செயலால் யாவருக்குள்ளும் ஒரு தன்னம்பிக்கை வளர்கிறது. உடல் அமைப்பு குறித்து வரும் எதிர்மறையான கருத்துக்களை தகர்ந்தெறிந்து தனது திறமையில் கவனம் செலுத்தி பெண்கள் பலரும் இணையத்தில் மிளிர்கிறார்கள்.காரணம் எதுவாகஇருப்பினும் தன்னை அழகுப்படுத்திக் கொள்கையில் வாழ்வதற்கான ஆர்வம் தன்னிச்சையாகவே பெண்களுக்குள் வளர்கிறது. எது மகிழ்ச்சியோ, எது நம்மை உற்சாகப்படுத்துகிறதோ, எது அறிவுக்கு உகந்ததோ, எது தனக்கு பாதுகாப்பானதோ, எதைத் தவிர்த்தால் துன்பத்தை தூரம் வைக்க முடியுமோ… இவற்றை எல்லாம் அறிந்து பெண்கள் இயங்கினாலே போதும். இந்த சமூகம் அசைபோடுவதை அனிச்சையாக நிறுத்திவிடும்!அறம் பேசுவோம்