- சி.எம். ஆதவன்“எவரெஸ்ட் உச்சியைத் தொட்டேன்ங்கிறதைவிட, மரணத்தைத் தொட்டு வந்தேன்னுதான் சொல்லணும். கண் முன்னாடி உயிர் விடப்போறவங்களுக்கு உதவக்கூட முடியாத துர்பாக்கிய நிலையை எவரெஸ்ட்ல அனுபவிச்சேன். மரணங்களை அவ்ளோ பக்கத்துல பாத்த கணத்துல, என் மனசு சுக்கு நூறாகிப்போச்சுங்க சார்…” சொல்லும்போதே கண்கள் கலங்குகின்றன ‘வீரமங்கை’ முத்தமிழ்ச்செல்விக்கு. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட ‘முதல் தமிழ்ப்பெண்’. இந்த சாதனை செய்த அடுத்த மாதமே ஐரோப்பியக் கண்டத்தின் மிக உயரிய ‘மவுண்ட் எல்ப்ரஸ்’ சிகரம் தொட்டுத் திரும்பியிருக்கிறார். 2 பெண் பிள்ளைகளின் தாயாக, 33 வயதில் சாதித்தவருக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினேம்....சிகரம் தொடணும்ங்கிற எண்ணம் எங்கு உருவானது?“விருதுநகர் ஜோகில்பட்டிதான் சொந்த ஊர். அப்பா நாராயணன், அம்மா மூர்த்தியம்மாள் எனக்கு சின்ன வயசுலயே தைரியம் கொடுத்து வளர்த்தாங்க. ‘தனித்துவமா இருக்கணும், யாரும் செய்யாததைச் செய்யணும்’ங்கிற ஆர்வம் இருந்துச்சு. அதுதான், ஸ்போர்ட்ஸ்ல இருந்து, எவரெஸ்ட் வரை கொண்டு வந்திருச்சு. இதுக்கு முன்னாடி 3 உலக சாதனைகளும் பண்ணிருக்கேன். 2021ல, ஶ்ரீபெரும்புதூர் மலையில, கண்களைக் கட்டிக்கிட்டு 155 அடி உயரத்தை 58 விநாடிகள்ல இறங்கினேன். அடுத்து இமாச்சலப் பிரதேசத்தில் 165 அடி உயரத்தைக் கண்ணைக் கட்டிக்கிட்டு, 55 செகண்ட்ல இறங்கினேன். அப்போ 9 வயசா இருந்த என்னோட சின்னப்பொண்ணு வித்திஷாவை முதுகுல கட்டிக்கிட்டும், பெரிய பொண்ணு தக்ஷாவை கையில பிடிச்சிக்கிட்டும் இறங்கினேன். அடுத்த மாசமே, வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செய்யுற விதமா, அவரைப் போலவே வேடமிட்டு குதிரை மீதமர்ந்து அம்பு விடும் சாதனை செஞ்சேன். சாதாரணமா ஒரு மணி நேரத்தில் 18 அம்புகள்தான் விட முடியும். நான் 450க்கும் மேற்பட்ட அம்புகள் வீதமா, 3 மணி நேரத்துல 1,389 அம்புகள் எய்து, 87 சதவீத புள்ளிகள் பெற்றேன்.”.மலையேறிய அனுவம் எப்படியிருந்தது?“மொத்தம் 56 நாள் பயணம் அது. இதுக்கான பிரத்யேக நிறுவனங்கள் நேபாளத்தில் இருக்கு. கடும் பிரயத்தனங்களுக்குப் பின்னாடிதான் மலையேற அனுமதிப்பாங்க. அரசிடம் முறையான அனுமதி வாங்கினாத்தான், எவரெஸ்ட் ஏற முடியும். ஏற்கனவே மலையேறிய அனுபவம் அல்லது பயிற்சி இருந்தால்தான் அனுமதிப்பாங்க. நான் அதுக்காகவே, லடாக்ல 18 ஆயிரம் அடி மலைல ஏறினேன். அதை வச்சி என்னை அனுமதிச்சாங்க. எவரெஸ்ட் அடிவாரமான ‘லுக்லா’வுல இருந்து மேல போற வழியில 3 கேம்ப்கள் இருக்கு. அடுத்தடுத்து கேம்ப் 1ல இருந்து 3 வரைக்கும் போய் வரணும். ‘கரணம் தப்பினால் மரணம்’ங்கிறதை அங்கே நேரடியாப் பாக்கலாம். உருகும் ஐஸ்கட்டிகள் மீது நடக்கணும். ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட் எடுக்கக் கூடாது. உருகுற பனியில விழுந்துட்டா, நம்ம உடம்பு கிடைக்கிறதே கஷ்டம் ஆயிடும். மைனஸ் 45 டிகிரி குளிர்லயும், அடிக்கிற பனிக்காத்துலயும் நம்ம உடம்பு நமக்கே கனமா இருக்கும். ஒவ்வொரு கட்டமா பாஸ் பண்ற மாதிரி, ஒவ்வொரு கேம்ப்க்கும் போய், 3வது கேம்ப் வரை போறவங்கதான் ஃபிட் ஆவாங்க. இந்த வருஷம் மலையேற வந்தவங்கள்ல பலபேர் பாதியிலயே ஃபிட் ஆகாமத் திரும்பிட்டாங்க. தமிழ்நாட்டுல இருந்து முதல்ல போய் சிகரம் தொட்ட ஒரே பொண்ணு நான்தான்.”.உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணமா இது?“இந்த வருஷம் 3 கைடுகள் உட்பட பலர் இறந்துட்டாங்க. மலையேறும்போது ஹார்ட் அட்டாக், மவுன்டெயின் சிக்னெஸ் வர வாய்ப்பு அதிகம். Hillary Step ங்கிற இடத்தைக் கடக்குறது ரொம்பவே கஷ்டம். 100 மீட்டரைக் கடக்க 2 மணி நேரத்துக்கு மேலாகும். பல பேரைக் காவு வாங்கிய இடம் அது. ‘யூட்யூப்’ வீடியோவுல, அந்த இடம் எவ்ளோ டேஞ்சர்ன்னு பாத்துத் தெரிஞ்சிக்கலாம். அங்கே தவறி விழுந்த சிங்கப்பூர் தமிழர் ஒருவர், 3 நாள் உயிரோட இருந்து அப்புறம் இறந்தது சாட்டிலைட் மூலமாத்தான் தெரிஞ்சது. எங்ககூட வந்த மகாராஷ்டிரா போலீஸ்காரர் ஒருத்தர், கோமா ஸ்டேஜ்க்குப் போயி, மருத்துவமனையில இறந்திட்டார். இன்னொருத்தர் என் கண் முன்னாலயே இறந்தார். 5 மரணங்களை அவ்ளோ பக்கத்துல பார்த்தேன். வழியில ஏற்கனவே இறந்தவங்களோட உடல்கள் பழுத்தும், வெளிறியும் கிடந்தது. வழியில நமக்கு ஏதாவது ஆனாலோ, ஆக்சிஜன் தீர்ந்தாலோ கஷ்டம். 3வது கேம்ப்க்கு அப்புறமா ஹெலிகாப்டர் கூட வரமுடியாது. அதனால, உயிருக்கு உத்தரவாதம் இல்லைதான். தவிர, ‘க்ளவுஸ்’ தாண்டியும் சில சமயங்கள்ல குளிர் தாக்கும். அந்தப் பகுதியில ரத்தம் ஓட்டம் நின்னுடும். அப்படி பாதிச்ச விரல், உள்ளங்கைகளை வெட்டித்தான் எடுக்கணும். என்கூட வந்த ரெண்டு பேருக்கு இப்படி ஆகிடுச்சு.”.நீங்க எளிதா போயிட்டீங்களா?“எவரெஸ்ட் ஏறுகிறவங்க உச்சியை அதிகாலைல தொட்டுட்டு கிளம்பிடணும். 36 மணி நேரத்துல திரும்புற மாதிரிதான் ஆக்சிஜன் கொடுப்பாங்க. வழியில தூக்கம், ஓய்வு, உணவு எதுவுமே கூடாது. நான் போறப்போ கடுமையான பனிக்காத்து வீசுனதால, 10 மணி நேரம் லேட் ஆகி மதியம்தான் உச்சிக்குப் போனேன். இதனால, திரும்புற வழியில ஆக்சிஜன் தீர்ந்து போச்சு. உயிர் போயிட்டா, பாடிகூட வீட்டுக்கு வராதுங்கிற நிலைமைல, பிள்ளைங்களை நினைச்சு அழ ஆரம்பிச்சிட்டேன். ஒரு இடத்துல உறைஞ்சு போய் உட்கார்ந்த எனக்கு மெக்சிகனைச் சேர்ந்த ஒரு வீரர், அவரோட ஆக்சிஜன் கொடுத்து உதவினார். அவர் இல்லாட்டி, நானும் இறந்தவங்க லிஸ்ட்ல சேர்ந்திருப்பேன்.”.இதெற்கெல்லாம் ரொம்ப செலவு ஆகுமே?“தேவைப்படுற வசதிகளைப் பொறுத்து 35 லட்சத்துல இருந்து 1 கோடி வரை ஆகும். அரசுக்கு வரி 10 லட்சம், மைனஸ் டிகிரி குளிரைத் தாங்கும் ஆடைகளுக்கு 10 லட்சம், ஆக்சிஜன் சிலிண்டர், ஹெலிகாப்டர் கட்டணம், கைடு சம்பளம்னு செலவு அதிகம் பிடிக்கிற சாகசப் பயணம் இது. எனக்கு 45 லட்சம் ஆனது. நடுத்தரக் குடும்பத்துல இருந்த வந்த எனக்கு தமிழ்நாடு அரசு 25 லட்சம் கொடுத்தாங்க. ஸ்பான்சர், சொந்தபந்தம், தெரிஞ்சவங்களோட உதவியாலதான் இது சாத்தியமாச்சு.”.மோட்டிவேஷனல் ஸ்பீக்கராவும் இருக்கீங்களே...“நமக்குன்னு ஒரு அடையாளம் இருந்தாதான், நாம சொல்றதை மத்தவங்க கேட்பாங்க. இப்போ என்னை நிறைய பேருக்குத் தெரியுது. பள்ளி, கல்லூரி, பொது இடங்கள்ல பேசப்போறேன். மோட்டிவேஷனல் விஷயங்களை என்னோட ‘யூட்யூப்’ பக்கத்துல ஷேர் பண்றேன். கத்துக்கிட்டே இருக்கணும்ங்கிற ஆர்வம் எனக்கு அதிகம். ஜப்பானிய மொழி கத்துக்கிட்டு, அதை பயிற்றுவிப்பாளராவும் இருக்கேன்.”.அடுத்த இலக்கு..?“உலகின் 7 கண்டங்கள்ல இருக்குற உயரமான சிகரங்கள்லயும் ஏறணும். இப்போ, ரெண்டு முடிச்சிட்டேன். அடுத்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் உயரிய ‘கிளிமாஞ்சாரோ’வில் ஏற ரெடி ஆயிட்டிருக்கேன். அடுத்த வருஷத்துக்குள்ள எல்லா சிகரங்கள்லயும் கண்டிப்பா ஏறிடுவேன்.நமக்கான பாதையை நாமளே அமைச்சிக்கிட்டு, முயற்சி பண்ணினால் தான் வெல்ல முடியும். அந்தப் பாதையில தான் நான் பயணிச்சுக்கிட்டு இருக்கேன்.”தீர்க்கமாகச் சொல்லி விடை கொடுத்தார் முத்தமிழ்ச்செல்வி.