Kumudam
அஜித்துக்கு கதை ரெடி, தீவிரமா முயற்சி செய்யறேன்- தீராக்காதல் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்
“நான் லாக் ஆகுற விஷயமே டைட்டில்தான். என்னோட முதல் படத்தை முழுசா ரெடி பண்ணதுக்கு அப்புறம்தான் ‘அதே கண்கள்’ன்னு பேர் வச்சோம். இந்தப் படத்துக்கு பழைய படத்தோட பேர் ஏதும் வச்சிட வேணாம்னு உறுதியா இருந்தோம். இந்தப் படத்தோட ரைட்டர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத். அவர் எழுதிய ஒரு சிறுகதைதான் படத்தோட ஆரம்பப் புள்ளி. கதைக்குப் பொருந்திப் போனதால், அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் பெயரையே படத்துக்கும் வச்சிட்டோம்.