- ஆர்.முத்துக்குமார், அரசியல் ஆய்வாளர்மதுரையில் மாநாடு என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தபோது அவருக்கு ஐந்து இலக்குகள் இருந்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய தொண்டர்களின் நம்பிக்கையை உறுதி செய்வது. கட்சியிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்டோருக்கு தனது பலத்தை நிரூபிப்பது, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்குத் தனது மெய்யான பலத்தை வெளிப்படுத்துவது, தி.மு.க.வுக்கு தனது செல்வாக்கு குறையவில்லை என்று காட்டுவது, தோல்விகளை மீறி தொண்டர்கள் களத்தில் நிற்கிறார்கள் என மக்களுக்குச் சொல்வது ஆகியவை அந்த ஐந்து இலக்குகள். ஆறாவதாகவும் ஓர் இலக்கு இருந்திருக்கும். அது என்ன என்று கட்டுரையின் பிற்பகுதியில் பார்க்கலாம்..இந்த ஐந்து இலக்குகளில் எவற்றையெல்லாம் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக அடைந்திருக்கிறார், எவற்றையெல்லாம் ஓரளவுக்கு அடைந்திருக்கிறார், எவற்றையெல்லாம் தவறவிட்டிருக்கிறார் என்பதை வைத்தே ஆறாம் இலக்கு அவருக்குச் சாத்தியமா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி, சட்டமன்றம் என்று தேர்தல்கள் நடந்தன. அவற்றில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் மட்டுமே 100 சதவிகித வெற்றி. மற்ற அனைத்திலும் தோல்வி அல்லது படுதோல்வி. அந்தத் தோல்விகள் கொடுத்த சோர்விலிருந்து கட்சியையும் தொண்டர்களையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடனேயே மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்தார் எடப்பாடி பழனிசாமி..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையிலான மாநாடுகளில் மட்டுமே பங்கேற்றுப் பழகியிருந்த தொண்டர்களுக்கு மதுரை மாநாடு ஒரு புதிய அனுபவம். ஆடம்பர மாநாடு என்று டி.டி.வி.தினகரன் விமர்சித்தார் என்பதே மாநாட்டின் பிரம்மாண்டத்துக்குச் சாட்சியம்.கட்சித் தலைமையில் வெற்றிடம் இல்லை என்ற எண்ணம் தொண்டர்களுக்கு அரும்பியதற்கு இந்த மாநாடு முக்கியக் காரணம். அதனால்தான் பெரும்பாலான தொண்டர்கள் உற்சாகம் பொங்க மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பினர். உணவு உபசரிப்பில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அந்த தொண்டர்களின் உற்சாகம் முழுமையடைந்திருக்கும். என்றபோதும், தொண்டர்கள் மனத்தில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது மாநாடு.2017 முதல் அ.தி.மு.க மூத்த தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். வெளியேற்றப்பட்டவர்கள் கட்சிக்கு வெளியே இருந்து சவால்விடுகிறார்கள். அவர்களுக்குத் தனது பலத்தை நிரூபிப்பதோடு, கட்சிக்கு வெளியே நிற்பவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்பதையும் நிரூபிக்கவேண்டிய தேவை எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. அதற்காகவே அவர் மாநாட்டுக்கு மதுரையைத் தேர்வு செய்தார்..ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா செல்வாக்குடன் இருப்பதாகக் கருதப்படும் மதுரையில் வைத்து மாநாடு நடத்தினால் தனது பலம் கொங்கு மண்டலத்தைத் தாண்டி தென்மண்டலத்திலும் இருக்கிறது என்று நிரூபிக்கலாம் என்பது அவரது கணக்கு. தவிரவும் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என்று பலரும் அவர் பக்கம் இருந்ததால் அது எளிது என்றே கருதப்பட்டது.அதற்கேற்ப மதுரை மாநாடு பிரம்மாண்டமாகவே நடந்தது. தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். என்றாலும், மதுரை மாநாட்டில் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்ற கொங்கு மண்டல முகங்கள் முதன்மையாக இருந்ததும் தவறவிடக்கூடாத அம்சம். அதன் பொருள் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் புரியும்.கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அ.தி.மு.க தேர்தல் பணிகளைத் தொடங்கிடாத நிலையில், கூட்டணியின் இளைய பங்காளியான பா.ஜ.க. ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை ஆரம்பித்தது, பாதயாத்திரையைத் தொடங்கிவைக்க அதிமுகவை அழைத்தது, ஜெயலலிதாவை விமர்சித்து பேட்டி என பா.ஜ.க.வும் அண்ணாமலையும் செய்யும் காரியங்களுக்குப் பதிலடி தந்து, அ.தி.மு.க.வின் தோல்விகள் – பிளவுகள் - வழக்குகளைக்காட்டி 2024ல் அதிக இடங்களைக் கேட்கத் தயாரான பா.ஜ.க.வுக்கு, கூட்டணியில் அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் சக்தி என்பதை அழுத்தமாகச் சொல்லவேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு இருந்தது..அந்த இலக்கை அடைவதில் மதுரை மாநாடு சற்றே தவறியிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பமோ, மோதலோ, முரணோ வெடித்திருக்கும் சூழலில் ஒருகட்சியின் மாநாடு நடந்தால், அதில் அந்த மோதல் எதிரொலிக்கும். கூட்டணிக் கட்சியின் செயல்பாடுகள் கண்டிக்கப்படும். விமர்சிக்கப்படும். தொண்டர்களின் உணர்வுகளைத் தலைவர்கள் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அதுதான் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தும், உற்சாகப்படுத்தும். அந்தக் காரியத்தை முதல் கட்டத் தலைவர்கள் பெரியளவுக்குச் செய்யவில்லை. அப்படிச் செய்வதற்கு அ.தி.மு.க. தலைவர்களுக்கு ஏதேனும் தயக்கம் இருந்திருந்தால், அதன் பின்னணி என்ன என்பது முக்கியமான கேள்வி..ஒருவேளை தலைவர்கள் செய்யாவிட்டாலும், இரண்டாம் , மூன்றாம் கட்டத் தலைவர்களும் பேச்சாளர்களும் அந்தக் காரியத்தைச் செய்வார்கள். ஆனால், அப்படியான விமர்சனங்கள் எதுவும் பெரிதாக பா.ஜ.க. மீதோ, அண்ணாமலை மீதோ வைக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கோ, அண்ணாமலைக்கோ எந்தவொரு சவாலும் அதிமுக மாநாட்டு மேடையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுக்கப்படவில்லை. அது, அதிமுகவுக்குள் ஏதோவொன்று குறைகிறது என்பதற்காக அடையாளம்.ஆனால், பிரம்மாண்ட மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “எந்தப் பிரம்மாண்டமும் இல்லை. அரசியலில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையே கிடையாது. பத்து லட்சம் தொண்டர்கள் வந்தாலும் பிரம்மாண்டம் என்பதே கிடையாது” என்று கூறியிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வும் அண்ணாமலையும் இந்த மாநாட்டைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. .பா.ஜ.க.வுக்கு சவால்விடாத மதுரை மாநாடு தி.மு.க. மீது விமர்சன அம்புகளைப் பாய்ச்சியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி, களத்தில் சவால் விடமுடியும் என்பதுதான் ஆளும் தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி உணர்த்திய செய்தி. அதேபோல, தி.மு.க. அரசையும் தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய அ.தி.மு.க. தலைவர்கள், வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதே முதன்மையான பணி என்பதை வெளிப்படுத்தினர். மாநாட்டுத் தீர்மானங்களும் அதையே பிரதிபலித்தன.அந்த வகையில், தி.மு.க.வுக்குப் போட்டி அ.தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போட்டி தி.மு.க. என்பதை உறுதி செய்தது அதிமுக மதுரை மாநாடு. இல்லாவிட்டால், அ.தி.மு.க. மாநாடு நடத்திய அதே நாளில் நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய உண்ணாவிரதத்தை தி.மு.க. நடத்தியிருக்காது. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க மதுரையில் மட்டும் உண்ணாவிரதப் போராட்ட நாளை ஒத்திவைத்திருக்காது. அந்த வகையில் ஆகஸ்டு 20 தி.மு.க. அ.தி.மு.க.வுக்கான களமாகவே இருந்தது. இது 2024, 2026 தேர்தல் களங்களிலும் எதிரொலிக்கும்.மாநாட்டின் ஐந்தாவது இலக்கு, கட்சி வலுவாகவும் வீரியத்துடனும் இருக்கிறது என்பதை நிரூபிப்பது. கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது, தொண்டர்கள் சிதறிக்கிடக்கிறார்கள், வழக்குகளால் கட்சி தடுமாறுகிறது, கூட்டணியை வலுப்படுத்த திணறுகிறது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, கட்டமைப்புரீதியாக கட்சி வலுவிழந்துவிடவில்லை என்பதை மதுரை மாநாடு கணிசமாக நிரூபித்திருக்கிறது..கட்சி ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது என்பதற்கான அடையாளமே இந்த மாநாடு என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்பதை 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும். ஏனென்றால், ஈ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் ஒன்றாக இருந்தபோதுதான் கடந்த காலத் தேர்தல்களில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.அதேபோல, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. பிரித்த வாக்குகள் பல இடங்களில் அ.தி.மு.க.வின் வெற்றிகளை தி.மு.க.வுக்கு மடைமாற்றியது. அந்த நிலை முழுமையாக மாறிவிட்டதென சொல்லமுடியாது. குறிப்பாக, ஓ.பி.எஸ். விலகியதோடு, டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்படப்போகிறார். அது அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சவாலான அம்சமே..இறுதியாக, ஆறாவது இலக்கு. அது, 2024 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்பது. தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டம். இப்போது த.மா.கா. தவிர வேறெந்த கட்சியும் உறுதியான உறவில் இல்லை. தேசிய அளவில் பா.ஜ.க. உறவில் இருந்தாலும் மாநில அளவில் உரசல் தொடர்கிறது. பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் உறுதிகாட்டவில்லை.இந்தச் சூழலில், மாநாடும் அதற்குத் திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கையும் தோழமைக் கட்சிகளிடமும் மாற்று அணியில் இருக்கும் கட்சிகளிடமும் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வையும் எடப்பாடி பழனிசாமியையும் நம்பி கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தைத் தோழமைக் கட்சிகளிடமும், தி.மு.க. கூட்டணியில் அதிருப்தியோ, வருத்தமோ ஏற்பட்டால் அ.தி.மு.க. அணியை நோக்கி நகரலாம் என்ற எண்ணத்தை மாற்று அணியில் இருக்கும் கட்சிகளிடமும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமிக்குப் பெரியளவுக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அதைக்கொண்டு கூட்டணி முதல் தொகுதி ஒதுக்கீடு வரை துணிச்சலாகவும் கறாராகவும் தொலைநோக்குடனும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால்,2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விமுகம் மறைவதற்கும் வெற்றிமுகம் எழுவதற்கும் வாய்ப்புண்டு!