- ஜி.எஸ்.எஸ்.ஆப்கானிஸ்தான் பெண்கள் மிக அழகானவர்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைதான் துயரமானது. அமெரிக்கா ரஷ்யா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியாக இருந்தாலும் சரி; உள்ளூர் அரசியல் கட்சிகள் தாலீபன்களுக்கு இடையேயான ஆதிகாரப் போட்டியாக இருந்தாலும் சரி… பாதிக்கப்படுவதும், கொடுமைக்குள்ளாக்கப்படுவதும் ஆப்கானிஸ்தான் பெண்கள் தான். ஒரு சுதந்திரமான நல்ல விடியலுக்காக அவர்களும் காலம்காலமாக காத்திருக்கிறார்கள், ஆனால் விடிந்தபாடில்லை. எப்போதும் ஏதோ ஒரு இருள்….2021 ஆகஸ்டில், தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த கையோடு முதல்வேலையாக பள்ளிகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனிவகுப்பறைகள் என்றனர். ஆண்டு விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு திரும்பினால் போதும் என்று மற்றொரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ‘பெண்களுக்குக் கல்வி தேவையே இல்லை. இனி பல்கலைக்கழகங்களில் மாணவிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்றது. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் கூட ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகளை அனுமதிப்பதைகல்விக்கூடங்கள் தவிர்க்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்கள் பணிக்குச் செல்வதையும்பல விதங்களில் தடுத்து வருகிறார்கள். ஐ நா சபையில் பெண்கள் பணியில் தொடர தடை விதிக்கப்பட்டது. நீதித் துறையிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை..பொதுவாழ்க்கையில் பெண்கள் ஹைஹீல் காலணிகள் அணிய தடை. நாளிதழ்களிலும் புத்தகங்களிலும் பெண்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது. தெருவில் இருந்து பார்த்தால் உள்ளிருக்கும் பெண்கள் தெரியும்படியான ஜன்னல்கள் வீடுகளில் இருக்கக் கூடாது. பெண்கள் தங்கள் வீட்டு பால்கனிகளில்நிற்கவோ உலவவோ கூடாது. ஜிம் போன்ற உடற்பயிற்சி நிலையங்களின் மகளிர் பிரிவுகள், மூடப்பட்டன. எழுபது கிலோமீட்டரை விட அதிக தூரம் பயணம்செய்ய வேண்டும் என்றால் ஒரு ஆணையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மட்டுமே பெண்கள் செல்ல வேண்டும். அந்த ஆண் அவளதுநெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.எந்த அமைப்பிலும் தலைமைப் பதவிகளை பெண்கள் வகிக்கக்கூடாது. ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக் கூடாது.மிக அவசியமாக தேவைப்பட்டால் கூட ஒரு ஆண் உறவினரைத்தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டுதான் சென்றாக வேண்டும்..பூங்காக்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது.இத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் மிக வினோதமான ஒரு சட்டத்தையும் தாலிபன் அரசு அமலுக்கு கொண்டு வந்தது. ஹெராத் மாகாணத்தில் உணவகங்களில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்றது. அப்படியெல்லாம் அனுமதித்தால் ஆண்களும் பெண்களும் கலந்து பழகும் வாய்ப்பு உண்டாகிவிடும் என்றது..இப்போது லேட்டஸ்டாக மகளிர் அழகு நிலையங்களுக்கு தடைவிதித்துள்ளது. ‘தலைநகர் காபூல் உட்பட இனி நாட்டில் எங்குமே பெண்களுக்கான அழகு நிலையங்கள் செயல்படக் கூடாது’ என்று கூறுகிறார் தாலிபன் அரசின் அமைச்சர் ஒருவர். அவரின் துறை என்ன தெரியுமா? நாம் வேறு எங்கும்கேள்விப்பட்டிருக்காத, பாவ புண்ணியங்களுக்கான துறை - தாலிபன் மினிஸ்ட்ரி ஆஃப் வைஸ் அண்டு வெர்ச்சூ. அதற்கான அமைச்சர் முகம்மது அகீப் மகாஜர் தான் மகளிர் அழகு நிலையங்களுக்கு தடைவிதித்திருக்கிறார்.அதற்கு அரசு சொல்லும் காரணம்… ‘ இந்த அழகு நிலையங்களில்செய்யப்படும் புருவங்களை அழகாக்குவது, ஒப்பனை செய்துகொள்வது போன்றவை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானவை. தவிர திருமணத்தின்போது ஏழை மாப்பிள்ளை வீட்டாருக்கு இத்தகைய அழகு நிலையங்கள் சிரமத்தை தருகின்றன’என்கிறது. (அங்கே மணப்பெண்கள் மற்றும் அவர்களது அவளது நெருங்கிய பெண் உறவினர்களை மணவிழாவின் போதுஅலங்கரிப்பதற்கான செலவை மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக்கொள்வதுவழக்கம்)பணிகளுக்கான பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில்அழகு நிலையங்களை நடத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைநம்பி கணிசமான பெண்கள் அங்கே வாழ்க்கை நடத்துகிறார்கள்.இப்போது சட்டென அந்த வாழ்வாதார வாசல் அடைபட்டதில் (மேலும்)கலங்கி நிற்கிறார்கள். அதுவும் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு அங்குகுறைந்து விட்டதால், அழகு நிலையங்களில் வேலைசெய்து குடும்பத்தைநடத்தி வந்த பெண்களின் வருமானம் இப்போது நின்றுவிட, பலகுடும்பங்கள் தவிக்கின்றன...சிலகாலங்களுக்கு முன்புவரை சுதந்திரமாக செயல்பட்டு கல்வி, பணி என்று பல கோணங்களில் சாதனை புரிந்து வந்த ஆப்கானியப் பெண்களுக்கு இந்தப் புதிய சங்கிலிகள் பெரும் வேதனையை அளிக்கின்றன. “தங்கள் தேசமே பெண்களுக்கான பிரம்மாண்டமான சிறை” என்று சோகத்துடன் சொல்கின்றனர் ஆப்கானிஸ்தான் பெண்கள்.