'நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க' - மாணவர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

"காடு இருந்த எடுத்துவாங்க.. பணம் இருந்த புடுங்கிக்குவானுங்க.. ஆனால் படிப்பை மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கொள்ள முடியாது" இந்த வசனம் என ரொம்ப பாதிச்சிடுச்சி". அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம் தான் இது என நினைக்கிறேன்.
'நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க' - மாணவர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற 10,மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை நடிகர் விஜய் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுத் தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நடிகர் விஜய் வழங்கினார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார்.

பின்னர் இதனைதொடந்து மேடையில் பேசிய அவர், “பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மனதிற்குள் பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது உங்களைப் போல பெஸ்ட் மாணவன் இல்லை சுமாரான மாணவனாகத் தான் இருந்தேன். வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நடச்சத்திரங்கள் மாணவர்கள் உங்களைச் சந்திப்பதை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன ரொம்ப பாதித்த ஒரு வசனம் "காடு இருந்த எடுத்துவாங்க.. பணம் இருந்த புடுங்கிக்குவானுங்க.. ஆனால் படிப்பை மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கொள்ள முடியாது" இந்த வசனம் என ரொம்ப பாதிச்சிடுச்சி. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம் தான் இது என நினைக்கிறேன்.

இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதிங்கனு பெற்றோர்களிடம் சொல்லுங்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பேத்கர், பெரியார், காமராஜ் பற்றிப் படிக்க வேண்டும். இனி வரும் காலத்தில் நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்ய போகின்றீர்கள். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லுங்கள். அந்த மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தால் அது நீங்கள் எனக்குக் கொடுக்கும் பரிசு" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com