- ஸ்ரீ மல்லிகா குருஅலுவலகத்திலிருந்து ஏகப்பட்ட களைப்புடன் வீட்டுக்கு வந்தாள் ஸ்ருதிகளைத்துப்போய் வீடு திரும்பிய தனக்கு, பானு ஆறுதலாக வார்த்தை ஒத்தடம் தருவாள் என எதிர்பார்த்த ஸ்ருதிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.போருக்கு ஆயத்தமாவது போல பானுவிடமும் ஒரு வீராப்பு. காப்பியைக் கொண்டு வந்து ஸ்ருதியிடம் வேண்டா வெறுப்பாக நீட்டியவள் “வெளியில போயிட்டு வந்திருக்கே… முகத்தை கழுவிட்டு காப்பிய குடி” என்றாள்.பானுவின் சிடுசிடுப்பை பொருட்படுத்தாமல் காப்பியை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடித்தாள் ஸ்ருதி.“குடிச்சுட்டு… டம்ளரை எடுத்துட்டுப்போய் ஸிங்க்ல போடு” அடுக்களையில் இருந்த பானுவிடம் இருந்து கட்டளை காற்றில் பறந்துவந்தது.“அடடா! ரொம்ப டயர்டா ஆபீஸ்லேர்ந்து வந்திருக்கேன். வந்ததும் வராததுமா எத்தன ஆர்டர்?’’ எரிந்து விழுந்தாள் ஸ்ருதி. ‘’குளிச்சா களைப்பெல்லாம் போயிடும். சிக்கிரமா சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு கிச்சனுக்கு வா…” அடுத்த ஆர்டர்.இதற்குமேல் பானுவிடம் வாய்தா வாங்க முடியாது என்பது தெரிந்து… குளிக்கச் சென்றாள் ஸ்ருதி.அப்போது ‘’அவகிட்ட ஏன் கடுமையா நடந்துக்கிற பானு?’’ மனைவியிடம் கேட்டார் பாலய்யா.“அப்படி இல்லீங்க. இன்னும் ரெண்டு மாசத்துல அவளுக்கு கல்யாணம் வெச்சிருக்கோம். புகுந்தவீட்ல ஹாயால்லாம் உட்கார முடியாது. வேலைகள் இருக்கும். இதை செய் அதை செய்னு மாமியார் சொன்னால் இவளுக்கு உடம்பு வளையாது. அதான் கொஞ்சம் கடுமை காட்டினால் வேலையும் செய்வாள். அவங்க ஏதாச்சும் பேசினாலும் இவளுக்கு தப்பாத் தெரியாது!’’ என்றாள் பானு என்கிற பானுமதி.