- திருப்பூர் சாரதி ‘‘குட்மார்னிங் டாக்டர்!’’ ‘‘குட்மார்னிங்... உட்காருங்க, உடம்புக்கு என்ன பிரச்னை?’’ ‘‘உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்லை சார்… வேறொரு பிரச்னை...’’ ‘‘கமான்… எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க. க்யூர் பண்ணத்தானே நாங்க இருக்கோம்!’’ ‘‘கொஞ்சநாளா… கண்ணுக்கு முன்னாடி என்ன அநியாயம் நடந்தாலும் கண்ணு மண்ணுத் தெரியாம கோவம் வந்திடுது டாக்டர். திடீர்னு சம்பந்தப்பட்டவங்க மேலே கை வெச்சிடறேன்! " ‘‘அடடா! பயப்படாதீங்க, இது எல்லாருக்குமே ஆழ்மனதில் இருக்கும் சமூகக் கோபம்தான். என்ன... உங்களுக்கு அது வெளியே வந்துடுது. கரெக்டான நேரத்தில் வந்துட்டீங்க… குணப்படுத்திடலாம். இல்லேன்னா சரியான ட்ரீட்மெண்ட் தரலேன்னு என்னையும் அடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்… ஹா...ஹாஹா!’’ ‘‘போங்க டாக்டர், நீங்களும் காமெடி பண்ணிட்டு. உங்களை எல்லாம் அப்படிச் செய்வேனா?’’ ‘‘ஒன் மினிட் வெயிட் பண்ணுங்க… போன் வருது. ஹலோ... ’’ ‘‘டாக்டர்... நான்தான் நர்ஸ் கீதா பேசறேன். உங்க ரூமுக்குள்ள வந்திருக்கும் ஆசாமியை உடனே வெளியே அனுப்பிடுங்க!’’ ‘‘ஏம்மா?’’ ‘‘கீழே கார் பார்க்கிங்கில் செக்யூரிட்டியை அடிச்சுப் போட்டுட்டு, முந்தின டோக்கன்காரரை உள்ளே அனுப்பிட்டோம்னு ரிசப்ஷன் இன்டர்காமை உடைச்சு, என்னையும் கம்பவுண்டரையும் கட்டிவச்சுட்டு அவர் உள்ளே வந்திருக்கார் டாக்டர். இப்பதான் கஷ்டப்பட்டு கட்டுகளை அவிழ்த்தோம்!’’ வந்த ஆசாமியை… எப்படி சீக்கிரம் வெளியே அனுப்பலாம் யோசித்துக்கொண்டிருந்தார், டாக்டர்.