- எம்.எல்.ஏ இராம.அரங்கண்ணல் வாக்குமூலம்பார்த்தசாரதி: உங்கள் கழகத்தைச் சேர்ந்த பெரியவர்கள், அமைச்சர்கள் சிலர் போடும் பிறந்தநாள் மலரில், ஒவ்வொரு நூல் நிலையமும் பல பிரதிகள் வாங்கச் சொல்கிறார்களாம்.இராம.அரங்கண்ணல்: நான் சட்டமன்ற உறுப்பினர். எந்த எந்த நூலகங்களில் அந்தமாதிரி வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.பா: பட்டியலே தரலாம்.அ: நீங்கள் சொல்வது நூலக நிர்வாகிகள் சரியில்லை, மாற்றப்படவேண்டும் என்பதா?பா: நான் அப்படிக் கூறவில்லை தரம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு நூலகங்களில் புத்தகங்கள் வாங்கப்பட வேண்டும் என்பதே..அ: நீங்கள் சொல்வதுபோல் கூட்டுறவு வெளியீட்டாளர்கள் எந்தந்த நூல்களை வெளியிடுகிறார்களோ, அவற்றை வாங்கவேண்டும் என்று அரசாங்கத்தின் மூலம் சிபாரிசு செய்யவேண்டும் இல்லையா?பா: அப்படிச் செய்தால் நஷ்டம் இல்லாமல் கூட்டுறவுச் சங்கம் நடக்கும்.அ: பிரசுரகர்த்தர்களும் இப்போது குறைந்துகொண்டு வருகிறார்களே..?.பா: எனக்குத் தெரிந்து இந்த ஐந்தாறு வருஷத்தில் பிரசுரகர்த்தர்களில் சிலர் பிரசுரத் தொழிலை விட்டுவிட்டு வட்டிக்கடை வைத்துவிட்டார்கள். கடைகளில் பழைய பப்ளிஷிங் கம்பெனி போர்டு மட்டும் இன்னும் இருக்கிறது. ‘ஸ்டாக்’ இருக்கிற புத்தகங்கள் விற்றால் போதும் என்று அயர்ந்து இருக்கிறார்கள்.அ: புதிதாகப் புத்தகம் போடுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்கிறீர்களா?பா: கழகத்தில் அண்ணா இருந்து வழிநடத்தியதற்கும் இப்போது கலைஞர் வழி நடத்துவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?அ: ஒன்றும் தெரியவில்லை.பா: அண்ணாவைப் போல் கலைஞர் அவ்வளவு நிதானம் இல்லை. இது என் அபிப்பிராயம்..அ: கலைஞரைப் பொறுத்தவரை முதலமைச்சராக வரும்பொழுது நான்கூடச் சந்தேகப்பட்டேன். நிதானமாக இருப்பாரா என்று. ஏனெனில், நானும் அவரும் திருவாரூரில் ஒன்றாகப் படித்தவர்கள். அவரது குணங்கள் எப்படி என்பது எனக்குத் தெரியும். அதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருப்பதால் அவர் எப்படி நடந்துகொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், அவர் இன்று காட்டுகின்ற நிதானம் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.பா: நீங்கள் கூறுவதுபோல் நான் கருதவில்லை. அண்ணாவிடம் இருந்த அவ்வளவு நிதானமும் பக்குவமும் கலைஞரிடம் அவ்வளவாக இல்லை.அ: அந்த வயதில் அவர் எப்படி இருந்தார்? இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதைப் பார்த்துதான் இதை முடிவு செய்யவேண்டும்.பா: உங்கள் குடிசை மாற்று வாரியம் கட்டுகின்ற வீடுகளைக் கழகக்காரர்களை வைத்தே ஏன் திறக்கிறீர்கள்? எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை வைத்தும் ஏன் திறக்கக் கூடாது?அ: ஒவ்வொரு தொகுதியிலும் விழா நடக்கின்றபோது வாரியத்தின் அமைச்சரான முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோரை அழைக்கிறோம். நொச்சி நகரில் அனந்தநாயகிதான் எம்.எல்.ஏ. அவர்தான் அங்கு விளக்கேற்றினார். பெரிய திட்டம் ஏதேனும் இருந்தால் பிரதம மந்திரியைக்கூட அழைக்கலாம். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, மத்திய அரசில் அப்போது அமைச்சராக இருந்த கே.கே.ஷாவை அழைத்து நடத்தியிருக்கிறோம். பார்த்தசாரதி! இப்பொழுது நாம் அரசியல் பேச வேண்டியிருக் கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். நொச்சி நகரில் முன்பு ஒரு விழா நடந்தது. அப்பொழுது ஆர்.வெங்கட்ராமன் அமைச்சராக இருந்தார். எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். உட்கார இடம் இல்லை. உட்கார வைப்பதற்கும் ஆள் இல்லை. நான் நின்றுகொண்டே இருந்தேன். அவர்கள் அப்படிச் செய்ததற்குப் பதிலாக நாமும் செய்யவேண்டும் என்பதில்லை..பா: உங்களை ஒரே ஒரு விஷயத்திற்காகப் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். அரங்கண்ணல்! தேர்தல் சமயத்தில் நீங்கள் போய் நின்ற தொகுதியை விட்டுவிட்டு முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்த தொகுதியான மயிலாப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து நீங்கள் ஒரு போஸ்டர் போட்டிருந்தீர்கள். அதற்காக உங்களைப் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன்.அ: வேறு தொகுதிக்குப் போய்விட்டாலும் முன்பு என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கு நன்றி தெரிவிப்பது கடமையென நினைத்தேன்.பா: குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள் அரசியல் ரீதியாக, தி.மு.க. சார்பு உள்ளவர்களுக்கே கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறதே?அ: அப்படியெல்லாம் இல்லை. எந்தக் கட்சியில் இருந்தாலும் வீடு கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.4 கோடிக்குத் திட்டம் போட்டிருக்கிறோம். இதில் இரண்டேகால் கோடிக்கான திட்டம் திருமதி அனந்தநாயகியின் தொகுதியில்தான் நிறைவேற்றப் படுகிறது. அடுத்து, தியாகராய நகர் தொகுதிக்கு ர ஒன்றேகால் கோடித் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. என் தொகுதிக்கு ரூ.20 லட்சம்தான் செலவு செய்கிறோம். எந்தக் கட்சி எம்.எல்.ஏ. தொகுதி என்பதையெல்லாம் பார்க்காமல் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடு தரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் குடிசை மாற்று வாரியத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.பா: கண்ணம்மாபேட்டையை ஏன் இன்னும் நீங்கள் கவனிக்கவில்லை?.அ: கவனிக்கப் போகிறேன். நாங்கள் வீடுகளை தி.மு.க. தொகுதிக்கே கொடுக்கவேண்டும் என்பதில்லை. எந்தக் கட்சியின் தொகுதியிலும் குடிசை இருக்கக்கூடாது என்பதற்காகவே குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது.பா: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலவிடப்படுகின்ற பணம் பொருளாதார ரீதியில் ‘Non productive expenditure’ என்று சொல்லுவார்களே?அ: ‘Productivity’ என்ற வகையில் தொழிலுக்காகப் பணம் போடுகிறோம். அப்படிப் போட்டால் 6 மாதம் ஒரு வருஷத்திற்குள் என்ன பலன் என்று பார்த்துவிடலாம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிகமாகப் பணம் செலவிடுகிறோம். உடனே பலன் கிடைத்துவிடுகிறதா? ஆனாலும் ரொம்பக் காலமாகச் செய்து வரவில்லையா? மனிதனுடைய தேவைகளில் முதலாவது உணவு. அதற்கு அடுத்தது வீடு. என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். சுதந்திரம் பெற்ற பிறகு வீட்டு வசதி என்று பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, ஒன்றும் செய்யவில்லை. சென்னை நகரத்தின் மக்கள்தொகை 25 லட்சம். இன்று 1,14,000 வீடுகள்தான் இருக்கின்றன. சென்னையில் உள்ள மக்களுக்குத் தேவையான வீடுகள் இல்லை. தமிழ்நாட்டுத் திட்டக் கமிஷன் மொத்தமாகத் திட்டம் போட்டு 10 ஆண்டில் 400, 500 கோடி ரூபாய்ச் செலவில் வீட்டு வசதி செய்து கொடுக்க ஆலோசனை செய்துவருகிறது. வீடு கட்டுவது லாபகரமானது அல்ல என்று சொன்னீர்கள். ஆனால், மனிதனுடைய வாழ்வுக்கு these are all assets. 4 கோடி ரூபாய் செலவு செய்தால் 3.95 கோடிக்கு சொத்து மதிப்பில் ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷனும் மற்றவர்களும் கடன் தருகிறார்கள்.பா: பப்ளிக் ஹெல்த் எஜுகேஷனுக்குச் செலவு செய்தால் பின்னால் தேர்தலில் உங்கள் கட்சி அதைச் சொல்லி exploit பண்ண முடியும். அதுபோல நீங்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலவிடுகிற பணமும் பின்னால் கட்சிக்கு ஓட்டு சேகரிக்க உதவும். அ: சரியாகச் சொல்லவேண்டுமானால் நீங்கள் வருத்தப்படக்கூடாது. வெளி மாநிலத்திலி ருந்து இங்கு வந்து பார்த்தவர்கள் ஒரு ஆர்க்யூமென்ட் சொன்னார்கள். ‘நீங்கள் இப்படியே குடிசைகளுக்குப் பதில் வீடுகளைக் கட்டிக்கொண்டே போனால் பிறகு யாரிடம் ஓட்டுக் கேட்பீர்கள்? இப்படிக் கட்டிக் கொடுத்துவிட்டால் ஓட்டுக்களை இழந்துவிடுவீர்கள். குடிசைகளை வைத்துக் கொண்டிருந்தால்தான் உங்களுக்கு ஓட்டுக் கிடைக்கும்’ என்று சொன்னார்கள். ஓட்டு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி எல்லாம் நிரந்தரம் இல்லை. வெய்யிலுக்குப் பிறகு நிழல் வரத்தான் போகிறது. ஆகவே, நம்மால் செய்ய முடிந்த நல்ல காரியங்களையெல்லாம் செய்வதுதான் கட்சியின் கடமை.பா: சென்னை தவிர மற்ற ஊர்களில் பெரும்பாலும் குடிசைகள் என்று தனியாக இல்லை. அதற்குக் காரணம் தொழிற்சாலை ஆரம்பிப்பவர்கள் எல்லோரும் சென்னையிலேயே ஆரம்பிப்பதுதான். ‘சேட்டிலைட் டவுன்’ என்று நகரங்களிலிருந்து விலகித் தனித் தனித் தொழில் நகரங்களை ஆரம்பிக்கலாமே?அ: ஆர்.வெங்கட்ராமனின் பெருமையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். வேக வேக மாகத் தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தார். ஆனால், ரெகுலரைஸ் பண்ணவில்லை. அதனால் சென்னையைச் சுற்றி ஆவடி, அம்பத்தூர், கிண்டி ஆகிய இடங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைந்துவிட்டன. அப்படித் தொழிற்சாலை அமைத்தவர்கள் அந்தந்தப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கவில்லை. விம்கோ தீப்பெட்டித் தொழிற்சாலையினர் வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். ஐ.சி.டி. கம்பெனியாரும் கட்டிக் கொடுத்தார்கள்.பா: குடிசைகளே வராமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா?