-மதுரை சத்யாசமீபத்தில் ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்தியைப் படித்தபோது தம்பதியர் இருவருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று தோன்றியது. இருவர் முகத்திலும் அரும்பியிருந்த புன்னகையில், கடந்த கால கசப்புகளை கடந்துவிட்ட உன்னதம் புரிந்தது. .நடிகரின் முதல் மனைவி, அவரது இரண்டாம் திருமணத்தை ஆதரித்து மிகவும் பாசிட்டிவ்வான ஸ்டேட்மென்ட் கொடுத்ததுதான் இதில் ஸ்வீட் சர்ப்ரைஸ். அதனால்தான் தம்பதியர் இருவருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னேன். பொதுவாக ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அந்தத் திருமணத்தை முதல் மனைவி ஆமோதித்ததுதான் இங்கே பல பெண்களுக்கும் ஆச்சர்யம். காரணம், பெண்களுக்கு இயல்பாகவே பொறாமைக் குணம் அதிகம். எந்த உறவையும் அத்தனை எளிதில் யாருக்கும் விட்டுத் தர மாட்டார்கள்.என் தோழி ஒருவர் நினைவுக்கு வருகிறாள். அவளுக்குத் திருமணமாகி ஏழெட்டு வருடங்கள் இருக்கும். கணவன் - மனைவிக்குள் புரிதல் இன்றி நீண்ட காலமாகப் பிரிந்துள்ளார்கள். ஆனால், பரஸ்பரம் விவாகரத்து கொடுத்துக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. அதே நேரம் சேர்ந்து வாழவும் தயாராக இல்லை. இதுபற்றி ஒருமுறை அவளிடம் பேசியபோது அவள் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது."அதெப்படி... நான் விவாகரத்து பண்ணிட்டா அந்தாளு இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்துருவான்ல. அப்படியெல்லாம் அவனை விட்டுட முடியாது" என்றாள் ஆக்ரோஷமாக. அந்த கணம் தொனித்த அவளது உடல்மொழியை என்றுமே நான் அவளிடம் பார்த்தது கிடையாது. அந்த முகத்தை நான் மறக்கவும் முடியாது. கிட்டத்தட்ட கோபமான சந்திரமுகியின் முகம் அது! "அட, அவரைப் பிடிக்கலைன்னா தூக்கிப் போட்டுட்டு நீயும் இன்னொரு வாழ்க்கையை தேடிக்கலாம்ல " என்று நான் கூறியதற்கு, என்மீதும் கோபப்பட்டு, "ம்க்கும்... வர்றவன் இவனவிட மோசமானவனா இருந்தா என்ன பண்றது? என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லா ஆம்பிளைங்களுமே அயோக்கியனுங்கதான். வாய்ப்பு கிடைச்சா வக்கிரமாகிடுற பொறுக்கிங்க...” ஆண்களின் மீதான உச்சக்கட்ட வெறுப்பின் தீர்மானத்தோடு பதில் அளித்தாள்.தனக்குத் தானே ஒரு பிம்பத்தை வடிவமைத்து அதனுள் அவளும் சுழல்கிறாள் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. இவளை மாற்றுவது கடினம் என்பதையும் உணர முடிந்தது. தோழியின் நிலைப்பாடு இப்படி இருக்க பெரிய பெரிய பிரபலங்கள் சர்வ சாதாரணமாக உறவின் பிரிவையும், விவாகரத்து சிக்கல்களையும் எப்படி இத்தனை எளிதாகக் கையாளுகிறார்கள் என்ற யோசனை என்னை சுற்றிவந்தது..பொதுவாக ஒரு பெண் தனக்கான மனிதனை யாருக்கும் விட்டுத்தரவே மாட்டாள். அவன்மீது காதல் இருக்கிறதோ இல்லையோ தன்னை மீறி சென்றுவிடக் கூடாது என்ற பயம், பொறாமை மட்டும் மாறாமல் இருக்கும். பெண்களின் இந்த அதீதமான பொசஷிவ் தான் பின்னாளில் பழிவாங்குவதற்கும் அவர்களைத் தூண்டிவிடுகிறது.அன்பினால் பிணைக்கப்படும் பந்தங்கள் எல்லாம் அதிகாரத்தின் கீழ் செல்லும்போது, "என்னாலதான் நீ வாழ்ற... உன்னால நான் ஏன் வாழணும்?" என்பதான ஆணவ சிறகு தானாகவே முளைத்துவிடுகிறது. அதற்கு முன் அதீத அன்போடு காதலைப் பரிமாறிக்கொண்ட நாட்களும் அவர்களிடம் இருக்கும். அன்றைய நாட்களில் ஆசை ஆசையாக ‘கொன்னேப் போடுவேன்!’ என்று சொன்ன வார்த்தையைக்கூட இன்றைய நாளில் கொலைக் குற்றமாக அர்த்தம் மாற்றத் துணிந்த ஆணவ மனது அது!சரி... இப்படி அன்போடும் ஆசையோடும் தொடங்கிய திருமண பந்தத்தில் திடீரென இவ்வாறான வெறுப்பு மனப்பான்மை வளர்வதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? உறவுகளுக்குள் குறையும் சகிப்புத் தன்மை. எதிர்பார்ப்பு மற்றும் ஆசைகள் நிறைவேறாமை. போட்டி, பொறாமை, சலிப்பு, சங்கடங்கள் என அத்தனையும் கலந்து இருவருக்கும் இடையே இத்தகைய ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறது.இன்னும் சொல்லப்போனால் நமக்கென அமையும் இணையைப் பொறுத்தே நம் வாழ்வும் மாறுகிறது. அதீத பொசஷிவ் எனும் பெயரில் சந்தேகப்படுபவராக அமைந்துவிட்டால் அந்த வாழ்வு நரகம்தான். நேர்மையாக இருக்கும் ஒருவரிடம் தொடர்ந்து சந்தேகத்தைத் திணிக்கையில் பெரும் சலிப்பைக்கொண்டு தனது நேர்மையைத்தான் அவர்கள் முதலில் காவு கொடுப்பார்கள். " நீ சந்தேகப்பட்டதை நான் நிஜமாக்கி காட்டிட்டேன் போதுமா" என பழிவாங்கிவிட்ட சுயதிருப்தியில் திளைப்பார்கள் என்பதே நிஜம்.இதைவிட இன்னும் சிலர் விசித்திரக் குணாதிசயங்கள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது காரணம் எதுவுமற்று உறவுகளை விட்டு விலகி நிற்பது. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையைப் போல், “நீ வேணா சண்டைக்கு வாடா” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தலை வாடிக்கையாகக்கொண்டு நாட்களை நகர்த்துவது.சிலர் இதிலிருந்தும் வேறுபட்டவர்கள். தன் இணையரின் குற்ற உணர்ச்சியைத் தூண்டத் தெரிந்தவர்கள். எடுத்ததெற்கெல்லாம் கோபித்துக்கொள்வது, அடம் பிடிப்பது, சாப்பிடாமல் இருப்பது, கெஞ்ச வைப்பது, அன்பைக் காட்டி பயமுறுத்துவது... அகிம்சை வழியில் இம்சிக்கிறார்களாம்!இதுபோன்ற குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை அத்தனை சீக்கிரத்தில் சமாதானப்படுத்தவோ, மீண்டும் வழிக்குக் கொண்டுவருவதோ சிரமமானக் காரியம். இவர்களின் நோக்கமெல்லாம், தனக்கான உறவு 24 மணி நேரமும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்... தன் பெயரை மட்டுமே உச்சரிக்க வேண்டும்... தான் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும்... என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். என்னதான் பொறுமையாக எடுத்து சொன்னாலும் புரியாது. எடுத்துச் சொல்பவரும் எதிரியாகிவிடுவார். அதாவது இவர்களுக்கு வாய் மட்டுமே இருக்கும். காதுகள் இல்லை எனலாம். அந்த பேராசையே அவர்களை அடுத்தக்கட்ட சைக்கோத்தனத்திற்கும் இழுத்துச் செல்கிறது..உண்மையில் பொசஷிவ் என்பது எவ்வளவு அழகானது தெரியுமா? வெளியே காட்டிக்கொள்ளாமல் இதயவெளியில் அன்பின் குளிருக்கு இதமாக தீ மூட்டி குளிர்காய வேண்டிய மென்பொறாமை உணர்வு அது. நீ இவ்வளவுதான் அவரை/அவளை நேசிக்க முடியுமா? நான் இன்னும் இன்னும் நேசிக்கிறேன் பார் என்று இணையின் மனம் கோணாமல் காதலை வளர்க்கச் செய்யும் பொசஷிவ் பொட்டாசியத்தை ஏன் ஆசிட் அமிலமாக மாற்றுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இங்கே பொசஷிவ் என்பது பெரும் பொறாமை மனப்பான்மையாக மட்டுமே கையாளப்படுகிறது. ஆண்களும் பெண்களும் எதிர்மறை செயல்களைக் கொண்டுதான் அதைக் கையாள்கிறார்கள். உறவின் விலகலை யாராலும் அத்தனை இயல்பாகக் கடந்துவிட முடியாது எனும்போது பிரபலங்கள் தங்கள் இணையர்களின் பிரிவுகளைப் பக்குவமாகக் கடப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.அவர்களும் மேற்கண்ட அத்தனைப் போராட்டங்களையும் வலிகளையும் கடந்துதான் வந்திருக்க வேண்டும். அல்லது வெளிக் கெளரவத்திற்காக மறைத்திருக்கக் கூடும் என்றே பலருக்கும் சந்தேகம் தோன்றுகிறது. ஒருவேளை பக்குவமாக ஒரு உறவின் பிரிவைக் கையாள முடிகிறதெனில் இந்த மூன்று நிலையில் அவர்கள் இருந்தாக வேண்டும்.* கணவன் / மனைவி இருவரும் பொருளாதாரத் தேவைக்காக ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க மாட்டார்கள்.* இருவருக்கும் தனித்தனியே பெரும் லட்சியங்கள் ஏதேனும் இருக்கக் கூடும்.* இருவரும் வெவ்வேறு துணைகளைத் தேடிக்கொள்ளும் முடிவில் இருக்க வேண்டும்.பெரும்பாலும் நடுத்தர வர்க்க மனிதர்களிடம் மேற்கண்ட இத்தகைய பக்குவம் இல்லாதிருக்கக் காரணம் அவரவர் இயலாமை, பொருளாதாரம் மற்றும் கெளரவம் சார்ந்த காரணமாக இருக்கலாம். இந்த பொசஷிவ் என்ற குணம் ஒன்றே உறவுகளை தக்கவைக்க ஒரு கருவியாக இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். தன்னால் படைக்கப்பட்ட, தான் படைத்த, தனக்காகப் படைத்த எந்த உறவும் தன்னைத் தாண்டிப் போய்விடக் கூடாது என்பதுதான் உறவிற்கான விதிமுறையாக எழுதி வைத்துக்கொண்டுள்ளார்கள்.அதீதப் பொசஷிவ் மற்றும் சந்தேகம் கொண்ட மனிதர்களைப் பேசி சரிசெய்து விடலாம் என நினைத்தாலும், சிலரிடம் பேசவே முடியாத தோல்விகளை வாழ்வில் சந்திக்க நேர்வதாக அனுபவப்பட்டவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் உறவுகளாக வாய்த்த மனிதர்களில் சிலர் தாங்கள் செய்வதே சரி எனும் பிடிவாதம், தவறைக்கூட நியாயப்படுத்தும் புத்திசாலித்தனம், எதற்கும் காதுக் கொடுக்க மறுக்கும் அகம்பாவம், உறவின் மீதான நம்பிக்கையின்மை போன்ற குணங்களோடு அமைந்துவிட்டால் இயல்பு வாழ்க்கை கடினமாகவே நகரும்..இவ்வாறான மனிதர்களிடம் பேசிப் புரிய வைத்து களைத்துப்போனவர்கள் மெளனம் காப்பதும், அனுசரித்து செல்வதும் முடியாதபட்சத்தில் விலகி நிற்பதுதான் நிம்மதிக்கான வழி என்றே பெரும்பாலான மனிதர்கள் நினைத்து விடுகிறார்கள். இதனாலேயே உறவுகள் இடையே பிளவு ஏற்பட்டு குடும்ப அமைப்பு முறை சிதறிக்கொண்டே செல்கிறது.(அறம் பேசுவோம்)