தலித் மக்களுக்கு விநியோகிக்க இந்த கிராமத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த குடிநீர்த் தொட்டியில் யாரோ மலத்தைக் கலந்தார்கள். விளைவாக, குழந்தைகள் உள்பட பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டார்கள். அடுத்தடுத்து மருத்துவமனைக்கு வந்தவர்களைப் பார்த்து, மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் தண்ணீரில் பிரச்னை இருக்கலாம் என்று கருதி, கிராமத்தார் சிலர் தொட்டியில் ஏறி எட்டிப் பார்த்தபோது அங்கே மலம் மிதந்திருக்கிறது.இந்த அக்கிரமம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை இதைச் செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் இடையே அந்தத் தண்ணீர்த் தொட்டி இடிக்கப்பட்டு, புதிய தொட்டி கட்டப்பட்டது. சிறப்புக் காவல் படை அறிவிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இதைத் தாண்டி வேறு செயல்பாடுகள் ஏதும் இல்லை என்கிற நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலித் மக்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்தார்கள். சமூக வலைதளங்களில் வெளிப்படையாக இதைப் பார்க்க முடிந்தது.இந்த நாட்களிலும் இவ்வளவு மோசமான தாக்குதலைத் தம் மீது நடத்த முடிகிறதே; ‘இதைக் கேட்பார் இல்லையே!’ என்கிற ஆற்றாமைதான் தலித் மக்களுடைய கொந்தளிப்புக்கான அடிப்படை. அரசை நோக்கி அந்த ஆற்றாமையை அவர்கள் வெளிப்படுத்தினாலும், உள்ளபடி அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எதிர்நோக்கும் ஆற்றாமைதான். தலித் அல்லாதவர்களும் அதே குரலில் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பிவிட்டு இங்கே நகர முடியாது. ஏனென்றால், ஜனநாயகத்தில் ஓர் அரசு என்பது பெரும்பான்மையின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கிறது; தலித் அல்லாதவர்களே இங்கே அந்தப் பெரும்பான்மையினர்.மனசாட்சி கொஞ்சமேனும் இருக்குமானால், தலித் அல்லாதவர்கள் தம்மை நோக்கி ஆழமான கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டிய விஷயம் இது. ஊடகங்கள் கேள்வி எழுப்புவது என்றால், தலித் அல்லாத தரப்புகளை நோக்கித்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.வேங்கைவயலில், தண்ணீரில் மலம் கலக்கப்பட்டதோடு வெளிப்பட்டிருக்கும் முக்கியமான விவகாரம் அங்கே இரட்டைக்குவளை முறையும் கோயிலில் தலித் மக்களுக்கான விலக்கமும். அரசு தலையிட்டு இப்போது அங்கே பிடிபட்டிருக்கும் ஓரிருவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதைத் தாண்டிய நிரந்தரத் தீர்வு என்ன?அரசைத் தாண்டி சமூக நீதி பேசும் பல குழுக்கள் இங்கே உள்ளன. அவை என்ன செய்கின்றன? அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன? இதே மண்ணில்தானே நூறாண்டுகளுக்கு முன் காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பெரும் இயக்கத்தை முன்னெடுத்தார்? தலித் அல்லாதோர் மத்தியில் அவர்களில் ஒருவராக நின்று குற்றவுணர்வோடு கேள்விகளை எழுப்பினார்..ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டிய புள்ளி இதுதான்: ‘உண்மையில், தலித் அல்லாதோரிடம் இன்று தீண்டாமைக்கு எதிராகப் பேச, செயல்பாடுகளை முன்னெடுக்க நம்மிடமிருந்து உருவான செல்வாக்குள்ள ஓர் ஆள், ஓர் அமைப்பு இங்கே இருக்கிறதா? சமூக நீதி என்பது பிராமணர் - பிராமணரல்லாதோர் இடையிலான பாகுபாடு மட்டும்தானா, தலித் – தலித்தல்லாதோர் இடையிலான பாகுபாடு நம் கண்ணுக்கு என்றைக்குத்தான் தெரியும்? என்றைக்கு நம்முடைய உள் உரையாடல்களில் மையத்துக்கு வரும்?’வேங்கைவயலோடு இந்த விவகாரம் முடியவில்லை. புதுக்கோட்டை பிராந்தியத்திலேயே பல கிராமங்களில் சூழல் வேங்கைவயலுக்கு நெருக்கமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக இப்படிக் கேள்வி கேட்டுக்கொள்வதற்குப் பொது மொழி உதவாது. அடையாளத்துடன் கூடிய கேள்விகளே அர்த்தம் பெறும். உதாரணமாக, நான் தலித் அல்லாதோர் தரப்பிலிருந்தே பேசுகிறேன்; குற்றவுணர்வுடன் என்னுடைய சொந்த தரப்பை நோக்கியே இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். இன்னும்கூட சக மனிதர்களிடம் இவ்வளவு இழிவைத் திணிப்போம்; இப்படிப்பட்ட பாகுபாட்டை சாதாரணமாகப் பார்த்தபடி கடப்போம் என்றால், நாம் எப்படி ஒரு நாகரிகச் சமூகமாக இருக்க முடியும்?தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் இன்னும் நேரடியான தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்று ஊடகங்கள் ஒரு தொடர் ஆய்வு செய்ய முடியும்; ஒவ்வோர் அரசியல் கட்சி நோக்கியும், ஒவ்வொரு சமூக நீதிச் செயல்பாட்டாளரை நோக்கியும், ‘நீங்கள் இதற்காகச் செய்ததும், செய்யப்போவதும் என்ன?’ என்று கேட்க முடியும். வெட்கக்கேடான முறையில், தலித் தரப்பை நோக்கி கேள்விகளை வீசினர் ஊடகர்கள்..விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம், “வேங்கைவயல் விவகாரத்தில் நீங்கள் செய்தது என்ன? ஆளும் கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்கிறீர்களா?” என்று ஆரம்பித்து, “நீங்கள் திமுகவாக மாறிவிட்டீர்களா?” என்று பொருள்பட செய்தியாளர்கள் கேட்டது அருவருக்கத்தக்கது. விசிக இது தொடர்பில் அரசுக்கு இயன்ற அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. “அரசு தன்னாலான நடவடிக்கைகளை எடுக்கிறது; நாங்கள் காத்திருக்கிறோம்” என்ற திருமாவளவன் தன்னுடைய கட்சி எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். அடுத்து, “என்ன கையை நீட்டிப் பேசுகிறீர்கள்?” என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். இதனூடாகவே மீண்டும் விசிகவை மையப்படுத்திய கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு எதிர்வினை ஆற்றிய திருமாவளவன் ‘பிரச்னை சமூகத்தில் இருக்கிறது’ என்பதையும் ‘திமுகவையும் விசிகவையும் மையப்படுத்தியதாக இந்த விவகாரத்தை உருமாற்றுவதானது, விசிக மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்க வேண்டும் எனும் உள்நோக்கத்தைக் கொண்டது’ என்பதையும் சரியாகவே வெளிப்படுத்தினார். ஆயினும், விவாதங்கள் விசிகவையும் திருமாவளவனையும் மையப்படுத்தியதாகவே தொடர்ந்தன. வேங்கைவயல் தூக்கி எறியப்பட்டது..நம் காலத்தில் மிக அரிதான ஒரு தலைவர் திருமாவளவன். வரலாற்றில் அவரை சரியான இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றால், சமூக நீதித் தளத்தில் அம்பேத்கருக்கு அடுத்து சிந்தனைத் தளத்தில் திருமாவளவனையே பெரும் தாவலாகக் குறிப்பிடுவேன். இன்னும் சொல்லப்போனால், அம்பேத்கரியத்தின் இடைவெளிகளைத் திருமாவளவனே தன்னுடைய பார்வையால் நிரப்புகிறார்.இந்திய அரசியல் மேஜையின் மையத்தில், தீண்டாமை தொடர்பான விவாதத்தைக் கொண்டுவந்து போட்டவர் அம்பேத்கர். சாதியச் சமூகமான இந்தியச் சமூகம் அரசியலில் ரொம்பவும் ஜனநாயகமான சமத்துவச் சமூகம் போன்ற பாவனையையே நீண்ட காலம் கொண்டிருந்தது. விடுதலை இயக்கம் தந்த மரியாதையைத் தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு எதிரான கவசமாகக் கொண்டிருந்தது. பிராமணியத்தைக் கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் சாதி அமைப்பை, குறிப்பாக அதில் பிராமணர்களின் பங்கைக் கேள்விக்குள்ளாக்கினார், பெரியார். தீண்டாமையைக் கேள்விக்குள்ளாக்கியதன் மூலம், சாதியமைப்பை, குறிப்பாக தலித்தால்லாதோரின் பங்கைக் கேள்விக்குள்ளாக்கினார் அம்பேத்கர். எப்படியும் சாதிய அமைப்பை எதிர்கொள்வதில் பிராமணர் - பிராமணரல்லாதோர் பார்வையை மையப்படுத்தியதாகப் பெரியாரியமும், தலித்துகள் - தலித்துகளல்லாதோர் பார்வையை மையப்படுத்தியதாக அம்பேத்கரியமும் உருவெடுத்தன. காந்தி தனக்கே உரிய பாணியில் ஒட்டுமொத்தச் சமூகத்திலும் பாதிப்புக்குள்ளாக்கும் தரப்பாகத் தன்னுடைய தரப்பைக் கட்டமைத்தார்..திருமாவளவன் தன்னுடைய பார்வையில் பெரியாரையும் அம்பேத்கரையும் இணைத்தார்; நாளடைவில், அவருடைய மொழியானது காந்தியத்தன்மைக்கு மாறியது. இன்றைக்கு அவருடைய கேள்விகளும், செயல்பாடுகளும் நம் காலத்தின் பெரும் உரையாடலாக உருவெடுத்திருக்கிறது. அவரை நோக்கிக் கேள்வி கேட்க அல்ல; பதில் அளிக்கக் கடமைப்பபட்டவர்கள் நாம்!-சமஸ்