தனது முதல்இயக்குநர் சரணின் முதல் படம் ’காதல் மன்னன்’. அந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அஜித்தை அமரவைத்தார் சரண். அடுத்து அவர் இயக்கிய ’அமர்க்களம்’ அஜித்தை இன்னும் இன்னும் உயரத்துக்கு தூக்கிச் சென்றது. அதன் பிறகும் விடவில்லை, ’அட்டகாசம்’, ’அசல்’ என அதகளம் செய்தது சரண் – அஜித் காம்பினேஷன்! அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷல் இதழ், இயக்குநர் சரண் பேட்டி இல்லாமல் முழுமை பெறுமா, என்ன..?.நீங்க இயக்குநரா அறிமுகமான ’காதல் மன்னன்’ படத்துக்கு அஜீத்குமாரை தேர்வு செய்தது ஏன்?நான் கே.பி. சார்கிட்ட வொர்க் பண்ணிகிட்டிருக்கும்போது ’நான் சொந்தமா ஒரு படம் பண்ணணும்’னு ஒரு கதையை ரெடி பண்ணேன். ஹீரோவுக்கு அப்ப யார் ’யூத் ஐகானா’ இருக்காங்கன்னு பார்க்கும்போது முதல்ல பிரபுதேவா இருந்தாலும், அவர் நாட் ரீச்சபிள்ல மோட்ல இருந்தார். அப்போ ’ஆசை’ படமெல்லாம் வந்திருந்த நேரம். அஜீத்தோட போஸ்டர்ஸ் நிறைய கண்ணுல பட்டது. அதையெல்லாம் பார்த்தப்போ அவரை எனக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. ’ரொம்ப அழகான ஒரு முகம்... நாம நினைக்கற எல்லா விஷயங்களும் இந்த முகத்துல இருக்கு, இவர் பண்ணா நல்லா இருக்குமே?’னு தோணுச்சு. ’எதிர்காலத்துல இவர் ரொம்ப பெரிய ஸ்டாரா வருவார்’னும் உள்ளுணர்வு சொன்னுச்சி. அவரை எப்படி அணுகுறதுன்னு பார்த்துட்டு என் ஃப்ரண்டு விவேக்கிட்ட, ’நீங்கதானே சமீபத்துல அவர்கூட நடிச்சீங்க, அவரை அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா?’னு கேட்டேன். ’சரி வாங்க பேசுவோம்’னு அஜீத் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாரு. அவரை முதல் தடவை மீட் பண்ணும்போதே என் கதைக்கான உருவம் நான் எதிர் பார்த்ததைவிட அதிகமா செட் ஆகிடுச்சி..கல்லூரி படிச்சுகிட்டிருந்ததால நடிக்கறதுல விருப்பமே இல்லாமல் இருந்த ஷாலினியை வற்புறுத்தி ’அமர்க்களம்’ படத்துல அஜீத்துக்கு ஜோடி சேர்த்தது எதனால?முதல்ல அவங்களை என்னோட கேரக்டராதான் நான் பார்த்தேன். அப்பதான் ’காதலுக்கு மரியாதை’ ரிலீஸ் ஆகியிருந்தது. அவங்க ஆடியோ கேசட்டைப் பார்க்கும்போது அவங்களோட கண்ணு அவ்ளோ அழகா இருந்தது. ஒரு டெப்த்தும் அட்ராக்ஷனும் இருந்தது. ஸோ, மேகனாங்கிற கேரக்டரை அவங்க பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ’காதலுக்கு மரியாதை’ படத்தால அவங்களை எல்லாரும் கொண்டாடிட்டு இருந்தாங்க, அடுத்த வீட்டுப் பொண்ணு மாதிரியான தோற்றமும் இருக்கணும்; என்னோட ஸ்டோரி லைனுக்குப் பொருத்தமாவும் இருக்கணும்னு பார்த்தப்போ அவங்க அதுக்கு செட் ஆவாங்கன்னு தோணுச்சு. அவங்ககிட்ட கேட்டப்போ, ’நான் சின்ன வயசுலேர்ந்தே நடிப்புல கவனம் செலுத்தினதால சரியா படிக்க முடியல, இனிமே படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னாங்க. ‘நீங்க ஒருதடவை கதையைக் கேளுங்க’னு சொன்னேன். அவங்களோ, ’உங்களோட முதல் படத்தை பார்க்கணும்’னு சொன்னாங்க. ’காதல் மன்னன்’ படத்தைப் போட்டுக் காட்டினேன். அந்த ஹீரோயின் கேரக்டர் ரொம்ப பாந்தமா அவங்களை நான் யூஸ் பண்ணியிருந்த விதம் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும் ஒரு தயக்கத்துலயே இருந்தாங்க. அப்போ அஜீத் நல்லா வளர்ந்து வந்துகிட்டிருந்த நேரம், காலேஜ் பொண்ணுங்களுக்கு எல்லாம் அவரை ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால நான் அஜீத்கிட்ட, ’நீங்க ஒருதடவை பேசினா அவங்க சம்மதிப்பாங்க’னு சொன்னேன். சரின்னு போன் பண்ணிக் கொடுக்கச் சொல்லி அவங்ககிட்ட பேசினாரு. ‘இந்தப் படத்துல நீங்க பண்ணா நல்லா இருக்கும்’னு அவர் சொன்னவுடனே அவங்களால தட்ட முடியல. அதுக்கப்புறம் அவங்க என்னைப் பார்த்ப்போ, ’என்ன ஜி, நீங்க டக்குன்னு அவர்கிட்ட போனைக் கொடுத்துட்டீங்க, எனக்கு அவரை ரொம்பப் புடிக்கும், என் ஃப்ரண்ட்ஸுங்க எல்லாருக்கும் அவரை ரொம்பப் புடிக்கும். நான் ’நோ’ன்னு சொல்லலாம்னு இருந்ததை ’யெஸ்’னு சொல்ல வச்சிட்டீங்க ஜி’ன்னு சொன்னாங்க. பெரிய பெரிய கம்பெனியிலேர்ந்து வந்த பல படங்களை அவங்க வேண்டாம்னு சொல்லியிருந்திருக்காங்க. அவங்களை நான் கன்பர்ம் பண்ணியிருக்கறேன்னு சொல்லும்போது ’அந்தப் பொண்ணு எப்படி சம்மதிச்சிருக்கும்?’னு இண்டஸ்ட்ரீயில யாருக்குமே நம்பிக்கை இல்லை. ஆனா, அதையெல்லாம் தாண்டி அவங்க நடிச்சாங்கன்னா அதுக்குக் காரணம், அஜீத் பேசின ஒரேயொரு போன் கால்தான்..அந்தப் படம் எடுக்கும்போது அவங்க ரியல் லைஃப்லயும் ஜோடி சேருவாங்கன்னு நினைச்சீங்களா?முதல்ல நினைக்கல. அஜீத் எப்பவுமே கேரிங்கான பர்சனாலிட்டி. யூனிட்ல யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கூட இருப்பாரு. அந்த மாதிரி அவங்க சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டபோது, இவர் வீசின கத்தி தெரியாம அவங்க கையில பட்டு ரத்தம் வந்துடுச்சி. அதனால அவர் ’சாரி சாரி’னு அன்னைக்கு மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரம் தடவை கேட்டிருப்பார். அவர் கார்ல இருந்த ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்துகிட்டு வந்து, அவரே மருந்து போட்டு எல்லாம் பண்ணிவிட்டவுடனே ’இவ்ளோ கேரிங்கா இருக்கறாரே?’னு அவங்களுக்கு ஒரு அட்ராக்ஷன் வந்திருக்கலாம். ஆனா, எங்களுக்கெல்லாம் அது தெரியல. அதுக்கப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தப்பவே அவங்களுக்குள்ள ஒரு லவ் இருக்குன்னு புரிய வந்தது.வேலையில ரெண்டு பேருமே ரொம்ப சின்சியரானவங்க. அஜீத் இருக்குற இடம் எப்பவுமே ரொம்ப கலகலப்பா இருக்கும். அவர் அடிக்கற ஜோக் அவர் பேசறது எல்லாருக்குமே ஒரு என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். ’அமர்க்களம்’ செட்ல ஷாலு சிரிக்கற சத்தம் கேட்டுகிட்டே இருக்கும். நடிகர் நடிகைங்கிறதைத் தாண்டி பேசிக்கா எல்லாருமே ஹியூமன் பீயிங்தானே? அவங்களுக்கும் ஆசாபாசங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா? ஸோ, கேரிங்கான அட்ராக்டிவான ஒருத்தர் சென்சிபிள் பர்சனாவும் இருந்ததால ஒட்டுமொத்தமா ஷாலுவுக்கு அவரை பிடிச்சிருக்கும். சினிமா கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் இருக்கும், அதுக்கப்புறம் நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு புத்திசாலித்தனமா அவங்க ஒரு முடிவு பண்ணாங்க, அதனாலதான் அது கல்யாணத்துல முடிஞ்சது..படப்பிடிப்பின்போது வெளி உலகத்துக்கு தெரியாத இன்ரெஸ்ட்டிங்கான சம்பவம் ஏதாவது நடந்ததா?ஒருமுறை மூணார்ல ஷூட்டிங் வச்சிருந்தோம். நானும் அஜீத்தும் கொச்சின் போயிட்டு, அங்கேருந்து கார்ல மூணாருக்குப் போய்கிட்டிருந்தோம். அப்பல்லாம் செல்ஃபோன் சிக்னல் எல்லா இடத்துலயும் கிடைக்காது. ஃப்ளைட்டுலேர்ந்து நாங்க இறங்கி மலை ஏறிப் போற வரைக்கும் நெட்வொர்க் ரீச் ஆகலை. அப்போ ஷாலினி நிறைய முறை காண்ட்டாக்ட் பண்ண ட்ரைப் பண்ணியிருக்காங்க, முடியலேன்னதும் அவங்க மலைப்பாங்கான இடம்கிறதால ஏதோ ஆயிடுச்சோன்னு அவங்க ரொம்ப பயந்துட்டிருக்காங்க. கடைசியா நாங்க போனவுடன, ’என்ன சரண் ஜி சிக்னல் கிடைக்கலைன்னா வழியில ஏதாவது ஒரு எஸ்.டி.டி. பூத்ல இருந்தாவது தகவல் சொல்லுங்கன்னு நீங்களாவது அவர்கிட்ட சொல்லியிருக்கக்கூடாதா? நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?’னு உரிமையோட அவங்க கோபப் பட்டப்போதான் அவர் மேல எவ்ளோ ஒரு ஆழமான லவ் வச்சிருக்காங்கங்கிறதே எனக்குப் புரிஞ்சது. .அஜீத்தை வெச்சு நான்கு படங்களை இயக்கியிருக்கீங்க, அவருடனான உங்களின் நட்பு எப்படிப்பட்டது?அவர் மூலமாதான் எனக்கு முதல் படம் இயக்கற வாய்ப்பே கிடைச்சது. அதனால அவர் மேல பெரிய மரியாதை, பாசம் எப்பவுமே எனக்கு இருக்கு. படப்பிடிப்பு நேரம் போக மத்த நேரத்தையெல்லாம் நான் அவர்கூடதான் செலவிட்டிருக்கேன். அண்டர் த ஸ்கை அவர்கிட்ட ரொம்ப ஜாலியா எதைப் பத்தி வேணும்னாலும் பேசலாம். எனக்கு அவரை ரொம்...பப் பிடிக்கும், ஒரு பொசசிவ்னஸ்கூட உண்டு. அவருக்கும் அந்த மாதிரி ஃபீல் இருக்கும், அந்த அளவுக்கான பாண்டிங் எங்களுக்குள்ள இருந்தது. ’அமர்க்களம்’ படத்துக்கு அடுத்தபடியா ’அட்டகாசம்’பண்றதுக்கு அவரேதான் கூப்பிட்டார். அடுத்து ’அசல்‘ பண்ணோம். அதாவது, இந்த நேரத்துக்கு இந்த மாதிரியான படம் பண்ணா நல்லாயிருக்கும். அதுவும் அஜித் பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சிக்கிட்டே இருப்பேன். கரெக்டா இவர் கூப்பிடுவார். ஒரு ஸ்டார் என்பதைத் தாண்டி இயல்பான, வாழ்க்கையோட தத்துவத்தைப் புரிஞ்ச, யதார்த்தம் தெரிஞ்ச உண்மையான ஒரு மனிதர் அஜித்.-வாசுகி லட்சுமணன்