புருஷனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு மசாலா செய்து வைத்தாள்,அருணா. பூரிகளைச் சுடச்சுட பொரித்துப் போட்டு, நாலைந்து உள்ளேபோனதும் மெதுவாகக் கேட்டாள். “ஏங்க, பாப்பாவுக்கு பிளே ஸ்கூல்ல லீவு விட்டாச்சு. ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வரலாமா?”“மாசக்கடைசிம்மா... எப்படி லீவு குடுப்பானுங்க? அடுத்த மாசம் வேணா பார்க்கலாம்.”“பாப்பாவை வீட்டுலவச்சு சமாளிக்க முடியல. எப்பப் பார்த்தாலும் எதையாவது உருட்டிகிட்டே இருக்கா. இல்லன்னா பொழுதன்னிக்கும் மொபைல் ஃபோன்!.”“என்னை என்ன பண்ணச் சொல்ற? என்னால வர முடியாது. டிரெயின்ல போறதுன்னா முன்னாடியே டிக்கெட் வாங்கியிருக்கணும்.”“நான் வேணா என் தம்பிகிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா? அவன் தட்கல்ல போட்டுத் தருவான்...”“ம்… ஆனா நீ தனியா பாப்பாவை வச்சிகிட்டு போயிடுவியா?”“கஷ்டந்தான். உங்களுக்கு லீவு இல்லைங்கறீங்களே?”“சரி… பார்க்கச் சொல்லு.”‘அப்பாடா. தப்பிச்சோம். போன தடவை லீவு போட்டுட்டு வாங்கன்னு கட்டாயப்படுத்திக் கூட்டிட்டுப் போயிட்டு, அங்கயே ஒர்க் ஃப்ரம் ஹோம்னு ஒரு மாசம் டேரா போட்டுட்டார். ரெண்டு வேளை டிஃபன், ஸ்பெஷலா லஞ்சு, இடையிடையில் காஃபி, டீன்னு இவரை கவனிக்கவே நேரம் சரியாப் போயிடுச்சு. இந்த தடைவையாவது கொஞ்ச நாள் நிம்மதியா லீவை அனுபவிச்சுட்டுடு வரலாம்.’மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள், அருணா.-ஒய். காயத்ரி