மர்மத் தொடர்27சகுந்தலாவைப் பார்த்தபடியே போய் சட்டையைக் கழற்றி ஒற்றைச் சோபா மேல் போட்டுவிட்டு, அப்படியே அதில் சொத்தென்று விழுந்தவராய் அமர்ந்தார், ஆனந்தமூர்த்தி.“என்னங்க நடக்குது... எனக்கு உங்களப் பாக்கப்பாக்க பயமா இருக்குதுங்க...’’ என்று சகுந்தலாவும் தொடங்கினாள்.“சகுந்தலா, இப்ப என்னை எதுவும் கேட்காதே... போய் நல்லா ஒரு காபி போட்டு கொண்டு வா. ப்ளீஸ்...’’“அதுக்கென்ன... போட்டுக் கொண்டுவர்றேன். இப்ப நீங்க போன காரியம் என்னாச்சு? அந்தப் பொண்ணு பொழைச்சிகிச்சா?’’“அதெல்லாம் பயப்படும்படியா எதுவுமில்லை. அந்தப் பொண்ணுக்கும் ஆயுசு கொஞ்சம் கெட்டி...’’“ஆமா, இந்த ஜீன்ஸ்பேன்ட்காரி யாரு... அந்தப் பத்து லட்சத்துக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’’“இவ எனக்கு உதவி செய்ய வந்திருக்கறவ... என்னோட அசிஸ்டென்ட்... போதுமா?’’“அசிஸ்டென்டா... என்னங்க மாத்திச் சொல்றீங்க? அவ உங்கள அசிஸ்டென்டா நினைக்கறமாதிரி இல்ல நடந்துகிட்டா...’’“என்னை எதுவும் கேட்காதேன்னு சொன்னேன்ல...’’“எதுவும் கேக்காதேன்னா என்னங்க அர்த்தம்? நான் கேக்காம யாருங்க கேட்பா..? அதுலயும் புலிவாலைப் பிடிச்சிட்டதா நீங்க சொன்னதுல இருந்து, மனசு கிடந்து துடிக்குதுங்க...’’“ஓ... ஒரு வேகத்துல ஔறிட்டேனோ? அப்படி எல்லாம் இல்லை. நீ போய் காபி போட்டுக் கொண்டா... அப்புறம் மத்த விஷயமெல்லாம் பேசலாம்...’’ஆனந்தமூர்த்தி, சகுந்தலாவை வலிந்து அனுப்பிவிட்டு ஒரு முடிவோடு செல்போனை எடுத்து சுந்தரை தொடர்புகொள்ளத் தொடங்கினார்..சுந்தர் தன் பண்ணையில் ஜாக்கி உடையில், தனது சவாரிக் குதிரைக்கு கேரட் துண்டுகளை தின்னக் கொடுத்துக் கொண்டிருந்தான். அருகில் கொள்ளுடன் பார்லி கலக்கப்பட்ட தோல்பை தயாராக இருந்தது. அதை அதன் முகத்தில் மாட்டித் தொங்கவிட்டால் போதும். மூன்று கிலோ அளவுள்ள அதை நன்கு அரைத்தும் செரித்தும் தின்ன அந்தக் குதிரைக்கு அரைமணிநேரம் தேவைப்படும். கேரட் முடியவும் பையை மாட்டிவிட்டான். அப்போது பண்ணையின் வேலைக்காரன், உள்ளே டேபிள் மேல் சிணுங்கிய செல்போனுடன் ஓடிவந்து சுந்தரிடம் நீட்டினான். சுந்தரின் காதுகளுக்குள் ஆனந்தமூர்த்தி குரல் வடிவில் புகத் தொடங்கினார்.“ஹலோ மிஸ்டர் சுந்தர்...’’“யெஸ்... நீங்க?’’“நான் ஆர்க்கியாலஜிஸ்ட் ஆனந்தமூர்த்தி. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’’“ஓ... நீங்களா? சொல்லுங்க சார்...’’“இப்ப எங்க இருக்கீங்க?’’“நான் திருமங்கலத்துல இருக்கற என் பண்ணைல இருக்கேன். என்ன சார் விஷயம்?’’“ஒரு முக்கியமான விஷயமாதான் கூப்ட்டேன்... இப்பவும் எதாவது வாய்ஸ் உங்களுக்குக் கேட்குதா?’’“இந்த வாய்ஸ் பிரச்னை எனக்கு அந்த பங்களாவுக்குப் போனா மட்டும்தான்... நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னீங்களே, என்ன அது?’’“ஒண்ணுமில்ல... உங்களையும் அந்த மீனாங்கற பெண்ணையும் லேடி ஜர்னலிஸ்ட் ஒருத்தர் மீட் பண்ணிப் பேச நினைக்கிறாங்க...’’“ஓ... பேட்டியா?’’“இருக்கலாம்... கவர் ஸ்டோரிகூட அவங்க பண்ணலாம்...’’“ஸாரி... எனக்கு அதுல எல்லாம் இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல சார். விட்றுங்க...’’“ஐய்யோ என்ன நீங்க... நீங்களும் சரி, அந்த மீனாவும் சரி, இப்ப எவ்வளவு அபூர்வமானவங்க தெரியுமா?’’“இல்ல சார்... நான் கொஞ்சம் குழப்பத்துலயும் இருக்கேன். இப்ப இந்தப் பேட்டி, கவர் ஸ்டோரி இதெல்லாம் எதுவும் வேண்டாம்.’’“சரி... நீங்க மேற்கொண்டு என்ன பண்ணப்போறீங்க சுந்தர்?’’“தெரியல... அதான் சொன்னேனே, குழப்பத்துல இருக்கேன்னு...’’“உங்க குழப்பத்தை நான் போக்கறேன். கவலப்படாதீங்க.’’“ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரே ஒதுங்கிட்டார்... உங்களால என்ன பண்ணமுடியும் சார்?’’.“சைக்கியாட்ரிஸ்ட்டும், ஆர்க்கியாலஜிஸ்ட்டும் ஒண்ணா மிஸ்டர் சுந்தர்?’’“சரி... உங்களால எனக்கு எந்த வகைல உதவி செய்யமுடியும்?’’“இந்த மதுரையோட ஹிஸ்டரி அவ்வளவும் என் மண்டைக்குள்ள ஆதாரங்களோட இருக்கு மிஸ்டர் சுந்தர்.’’“அதனால?’’“என்ன அதனாலன்னு சாதாரணமா கேக்கறீங்க... உங்க பூர்வஜன்மம் உங்களுக்கு இன்னுமா பிடிபடல?’’“அப்ப நான்தான் கள்ளன் ராமவீரன்னு நீங்க நம்பறீங்களா?’’“நிச்சயமா..!’’“அப்ப மீனா..?’’“அவங்கதான் அங்காயி... ராணி மங்கம்மாவோட அந்தரங்க தாதி. உங்க மனைவி..!’’ஆனந்தமூர்த்தி அழுத்தமாய்ச் சொன்னார். அதைக்கேட்ட சுந்தரிடம் ஒரு மெல்லிய அதிர்வு. அதன் எதிரொலியாக கொஞ்சம் மௌனம்.“என்ன சுந்தர் சார்... ஒரு மூணாவது மனுஷனான நானே நம்பிட்டேன். உங்களுக்கு இன்னுமா நம்பிக்கை வரலை?’’“அப்படி இல்லை... இந்த நினைவுகள் இப்ப ஏன் வரணும்? அப்புறம், எப்படி ஒரே சமயத்துல மீனாவும் மறுஜன்மம் எடுத்து வந்திருக்க முடியும்? அதான் குழப்பமா இருக்குன்னேன்...’’“மீனா மட்டுமல்ல... சங்கரலிங்கம்னு ஒருத்தர்- அவர்தான் அந்தக் காலத்துல பொற்கொல்லரா இருந்து நகைகளை எல்லாம் செய்தவர். அவரும் இப்ப உங்களப் போலவே மறுஜன்மம் எடுத்து வந்திருக்கார்...’’“அது எப்படி சார் எங்க மூணு பேரையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு..?’’“இதை நீங்க டாக்டர் துவாரகநாத்கிட்டதான் கேக்கணும். அவர் என்னைக் கூப்பிடவும்தானே நான் வந்தேன். அங்கதானே உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன்.’’“இந்தப் பொற்கொல்லர்..?’’“அவரே என்னைத் தேடிவந்தார். அவர், நாடி ஜோசியம் பார்த்திருக்கார். அப்ப தெரியவந்திருக்கு. சரித்திரம் தொடர்பான விஷயம்கறதால என்னைத் தேடிவந்தாரு. அப்பதான் அவரை நான் தெரிஞ்சுகிட்டேன்...’’“எல்லாத்துக்கும் டாண்டாண்ணு பதில் சொல்றீங்க. அதேசமயம் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டா இருந்துக்கிட்டு, இந்த மறுஜன்ம விஷயத்தை நீங்க நம்பறதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியம்..!’’.“அப்ப உங்க வரைல இன்னும் அந்த நம்பிக்கை வரலையா?’’“வந்தா இப்படிக் கேள்வி கேட்பேனா..? ஒருத்தர் இப்படி மறுஜன்மம் எடுத்து அந்த நினைவுகளோட அப்படியே வரமுடியும்னா, நம்மைச் சுத்தி வாழற லட்சக்கணக்கான மக்களுக்கு அவங்க பூர்வஜன்மம் பத்தி ஏன் தெரியல..?’’“இது நல்ல கேள்வி சுந்தர்... இப்ப நான் உங்கள ஒரு கேள்வி கேட்கறேன். இந்த நாட்டுல வாழற எல்லாருக்கும் ஜனாதிபதியா, பிரதமரா வர உரிமை இருக்குதானே?’’“அதுதானே ஜனநாயகம்?’’“அப்ப ஏன், எல்லாரலேயும் ஜனாதிபதியா, பிரதமரா வரமுடியலை? குறைந்தபட்சம் ஒரு வார்டு கவுன்சிலராகூட பலரால வரமுடியலியே, ஏன்?’’“உரிமை இருந்தா போதுமா... தகுதின்னு ஒண்ணு இருக்குல்ல?’’“கரெக்ட்... எப்படி ஒரு பெரிய பதவிக்குத் தகுதி அவசியமோ அப்படித்தான் சில அமானுஷ்யங்களும்... உங்க மறுபிறப்புக்கும் ஒரு சரியான காரணம் இருக்கு... அப்படி ஒண்ணு மத்தவங்களுக்கு இல்லாம இருக்கலாம்...’’“அது என்ன காரணம்?’’“உங்க மூணு பேரையும் கவனிச்ச அளவுல, அந்த மீனாட்சியம்மனுக்கான தங்கக் கவச நகைகள்தான் காரணம்னு நான் நினைக்கறேன்...’’“கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் என் மாமா அழகியபாண்டியனும் சொன்னார்...’’“அப்புறம் என்ன இன்னும் குழப்பம்?’’“அப்படின்னா அந்த நகைகளுக்காகத்தான் நாங்க மறுஜன்மம் எடுத்திருக்கோமா?’’“ஏன் இருக்கக்கூடாது?’’“அப்ப அந்த நகைகள் மீனாட்சி அம்மனுக்குக் கொடுக்கப்படலியா?’’“இதுவரை இல்ல... எங்களுக்குக் கிடைச்ச சில ஆதாரங்கள்படி அவங்க 100 கிலோவுக்கும் மேலான தங்கத்துல நகைகள் கவசங்கள் செய்தது உறுதி. அதை ராணி மங்கம்மாவோட பேரன் விஜயரங்கன், மீனாட்சியம்மனுக்குக் கொடுக்கவிடலை. அவன் அந்தத் தங்கத்தைத் தன்வசப்படுத்தப் பார்த்திருக்கான். ஆனா அது நடக்கல.கள்ளன் ராமவீரனும் அங்காயியும் அதை ஒளிச்சுவெச்சு மங்கம்மாவுக்கு உதவியிருக்காங்க. அதாவது நீங்க உதவியிருக்கீங்க... இந்த விஷயத்துல பொற்கொல்லரும் உங்களோட கூட்டு சேர்ந்திருக்கார்...’’“அப்ப எங்க மூணு பேருக்கும் அது இருக்கற இடம் தெரிஞ்சிருக்கணுமே?’’.“நிச்சயமா... இதுவரை தெரியாம இருந்தாலும், இனி தெரியவரும்னு நான் உறுதியா நம்பறேன்...’’“சரி... இது சம்பந்தமா மீனாகிட்ட பேசிட்டீங்களா?’’“இல்ல... அடுத்து அவங்ககிட்டதான் பேசப்போறேன்...’’“அப்ப அவங்ககிட்டபோய் பேசுங்க... என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு எனக்கு சொல்லுங்க.’’“உங்க ஒத்துழைப்பும் வேணும் மிஸ்டர் சுந்தர். இப்படி விலகி நின்னு பேசினா எப்படி?’’“சரி, நான் என்ன செய்யணும்?’’“பசுமலைல இருக்கற ஹோட்டலுக்கு நாளைக்கு நான் சொல்ற டைமுக்கு வந்துடுங்க. மீனாவும் வருவா... அதோட, அந்த சங்கரலிங்கமும் வருவார்! நீங்க மூணுபேரும் முதல்ல சந்தியுங்க. அப்ப நிச்சயம் உங்களோட அடுத்தகட்டம் உங்களுக்குத் தெரியவரும்னு நான் உறுதியா நம்பறேன்...’’“சரி... நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால வரேன்...’’சுந்தர் சம்மதிக்க, ஆனந்தமூர்த்தியிடம் அப்பாடா என்கிற ஒரு பெருமூச்சு... சுந்தர் தன் குதிரையை வருடியபடியே ஆனந்தமூர்த்தி சொன்னவற்றை அசைபோடத்தொடங்கினான். காபியுடன் வந்திருந்த சகுந்தலா வெறித்தபடியே நின்றுகொண்டிருந்தாள். போனை முடக்கியபடி நிமிர்ந்த ஆனந்தமூர்த்தி, சகுந்தலா வந்து நிற்பதை உணர்ந்தராக,“ஏ... நீ வந்துட்டியா? நான் கவனிக்கல..’’ என்றார்.“எப்படி கவனிக்கமுடியும்? மறுஜன்மம்... தங்கநகை... அது இதுன்னு பரபரப்பால்ல பேசிகிட்டிருந்தீங்க...’’“ஓ.. எல்லாத்தையும் கேட்டுட்டியா?’’“நல்லாவே கேட்டேன்... நீங்க என்ன பண்ணப்போறீங்கன்னும் எனக்குத் தெரிஞ்சுபோச்சு...’’“முதல்ல காபியக் குடு... அப்புறமா உனக்குத் தெரிஞ்சத சொல்லு...’’கைநீட்டி வாங்கிய காபி ஆறிவிட்டிருந்தது. இருந்தும் குடித்தார்.“ஆமா, யார் அப்படி மறுஜன்மம் எடுத்து வந்திருக்கறது?’’ எதிரில் அமர்ந்தபடியே ஆரம்பித்தாள், சகுந்தலா.“அது போகட்டும்... இந்த மறுஜன்மத்தை எல்லாம் நீ நம்பறியா?’’“ஒரு பாவமும் செய்யாம எவ்வளவு பேர் கஷ்டப்பட்றாங்க... அதுக்கு என்ன காரணம்..? அவங்க முன்ஜன்ம பாவம்தானே?’’“ஓ... நீ அப்படி யோசிக்கிறியா..?’’“அப்படித்தானே நம்ம மதத்துல எல்லாரும் நம்பறாங்க...’’“அந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையில்ல, அது ஒரு நிதர்சனம்னு இப்ப இந்த மதுரைல மூணுபேர் இருக்காங்க...’’“ஏதோ தங்ககவசம் நகைன்னெல்லாம் சொன்னீங்களே?’’“ஆமா சகுந்தலா... ஒரு ஆயிரம் கோடி ரூபா மதிப்புக்கான தங்க நகைங்க இந்த மதுரைல இருக்கு. அதைத் தேடறதுதான் என் அசைன்மென்ட்...’’“இந்த ஜீன்ஸ்பேன்ட்காரியோட சேர்ந்துகிட்டா?’’“ஆமாம் சகுந்தலா... அதுக்குதான் அந்தப் பத்து லட்சம் அட்வான்ஸ்!’’“இவள உங்க அசிஸ்டென்ட்டுன்னீங்களே...’’“ஆமாம்... எங்க ரெண்டு பேருக்குமே பாஸ்னு ஒருத்தர் இருக்காரு...’’“என்னங்க, சினிமால வர்ற மாதிரியே சொல்றீங்க?’’“போதும். இதுக்குமேல என்ன ரொம்ப நோண்டாதே... போய் வேலையைப் பாரு. அது சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு. இப்பதான் அதுல ஓர் ஆள்கூட பேசி இழுத்துக் கட்டியிருக்கேன். அந்தப் பொண்ணுகூட பேசி அவளையும் இழுத்துக் கட்டணும்.’’“இந்த மூணு பேரை வெச்சுதான் கண்டுபிடிக்கணுமா?’’“ஆமாம்... இவங்களும் அதுக்காகவே பிறந்திருக்காங்க...’’“நல்லாத் தெரியுங்களா?’’“நடந்ததை எல்லாம் நீ கேட்டே, வாயைப் பொளந்துடுவே...’’“அப்ப அது என்னன்னு சொல்லுங்களேன்...’’“இப்ப அதுக்கு நேரமில்லை... அதை எல்லாம் சொல்ற மனசுமில்ல...’’“பாத்துங்க... அந்த ஜீன்ஸ்பேன்ட்காரிய நினைச்சா எனக்கு பயமா இருக்கு...’’“பயந்தா சம்பாதிக்க முடியாது சகுந்தலா. சாகறதுக்குள்ள கொஞ்சமாவது அனுபவிச்சிடணும்னு நினைக்கறேன்...’’- என்ற ஆனந்தமூர்த்தி அடுத்து அழைத்தது, சந்திரசேகரை.“ஹலோ சந்திரசேகர் சாரா?’’“ஆமாம்... நீங்க?’’“நான் ஆர்க்கியாலஜிஸ்ட் ஆனந்தமூர்த்தி பேசறேன். உங்க நம்பரை டாக்டர் துவாரகநாத்தான் கொடுத்தார்...’’“சொல்லுங்க, என்ன விஷயம்?’’“உங்க மகளைப் பத்தின எல்லா விஷயங்களும் எனக்கு நல்லா தெரியும். உங்க மகளுக்கு உதவி செய்யத்தான் இப்ப நான் உங்ககூட பேசிக்கிட்டிருக்கேன்...’’ஆனந்தமூர்த்தி அப்படிச் சொன்னபோது வாசல்புரத்தில் இருந்து ‘ஓம் நமசிவாய’ என்கிற ஒரு பெண் குரல்!சகுந்தலா எட்டிப் பார்த்தபோது, அந்தப் பெண்சித்தர் தெரிந்தாள்!ரகசியம் தொடரும்...