மன்னர்களின் வரலாறு என்றாலே அதில் நடிக்கும் ஆண்கள், பெண்களின் முகத்தோற்றம், உடலமைப்பு, ஒப்பனை, உடையலங்காரம் என அனைத்திலும் ஆரியத்தின் அடையாளமே இருக்கும். திரைக்கதை அமைப்பிலும் வழக்கமான காதல், நகைச்சுவை, நாயகனின் சாகசம், என ஒரு சராசரி பொழுதுபோக்கு திரைப்படத்தின் அம்சமே இருக்கும். இந்த கிளிஷேக்களை கிழித்து, குப்பையில் வீசி விட்டு, திராவிட முகங்கள், யதார்த்த வாழ்வியல், தூய தமிழ் என தமிழினத்தின் அடையாளத்துடன் ஒரு வரலாற்றை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன். சேரர்களும், சோழர்களும் பாண்டிய மன்னன் ரனதீர பாண்டியனிடம் போரில் தோல்வியுற, சோழனின் கோட்டையில் மீன் கொடி பறக்கிறது. சோழ மன்னர்களுக்காக போரில் ஈடுபட்டு பாண்டிய மன்னனிடம் தங்களின் நிலத்தையும் உரிமையையும் இழந்த எய்னர்கள் என்ற பழங்குடி மக்கள், கொதி என்கிற வீரமிக்க இளைஞனின் தலைமையில் மீண்டும் பாண்டியனை எதிர்த்து போராட முடிவெடுக்கின்றனர். கொதி பாண்டியர்களை வென்றானா? எய்னர்களுக்கு தனிநாடு கிடைத்ததா என்பதுதான் கதை..வசனம் தான் படத்தின் உயிர். தமிழின் தொன்மையும் உன்னத இலக்கியத்தின் ஆழமும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது. தமிழுக்கு தமிழில் சப்டைட்டில்… ஒளிப்பதிவும், சக்ரவர்த்தியின் இசையும் பிரம்மாண்டம். தேவரடியார்களாக வரும் ராஜலட்சுமி, வைதேகியின் நடிப்பும் நடனமும் கலைநயம். கொதியாக வரும் சேயோன் புருஷோத்தமன், ரணதீரனாக வரும் சக்தி மித்ரன் என அனைவரும் அறிமுகக் கலைஞர்கள் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படத்தின் பின் பாதியில் இருக்கும் வேகம் முன்பாதியில் இல்லாதது, துணை நடிகர்களின் ஒப்பணையில் போதிய கவனம் செலுத்தாதது, மன்னர்களுக்கு எதிரான அடிதட்டு மக்களின் அரசியலை அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் விதத்தில் காட்சிகளை அமைத்திருப்பது, ஒரு வெற்றிப் படத்தை விருதுப் படமாக்கி விட்டது.