“இன்று தமிழ் சினிமா வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இளம் இயக்குநர்களால் பூத்துக் குலுங்குகிறது என்றால் அதற்கு விதை போட்டவர்கள் மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற மகா உன்னதமான இயக்குநர்கள்தான்” - தனது வழக்கமான ரத்ன சுருக்கப் பேச்சிலிருந்து வெளிவந்து சரளமாக உரையாடுகிறார், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குநர் மணிரத்னம்.ஒரு சில இயக்குநர்களின் கற்பனை திரையில் காட்சிகளாக விரியும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களுள் முக்கியமானவர் மணிரத்னம். அவருக்குப் பின் இரண்டு தலைமுறைகள் வந்த பின்பும், இன்னமும் மணிரத்னமே புதிய தலைமுறையினரின் திறமைக்கு அளவுகோலாக இருக்கிறார். ’பொன்னியின் செல்வன் பாகம் 2’ ரிலீஸாக இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில், ‘குமுதம்’ பேட்டிக்காக, மணிரத்னத்தை அவரது மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் சந்தித்தோம்..கல்கியின் பாத்திரங்களுக்கு பிரம்மாண்டமாக உயிர்கொடுத்த ’பொன்னியின் செல்வன்’முதல் பாகத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்தாச்சு. இரண்டாவது பாகத்தை என்ன ஸ்பெஷல்?“முதல் பாகத்துல நீங்க பார்த்தது பாத்திர அறிமுகம் மட்டுமே. கதையை, அந்தப் பாத்திரங்களுக்குள் நடக்கிற ஈகோ மோதலை இனிமேதான் பார்க்கப் போறீங்க. முதல் பாகத்துல எழுப்பப்பட்ட நிறைய கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்துலதான் விடையே இருக்குது. உண்மையைச் சொல்லணும்னா முதல் பாகம் டீஸரும் ட்ரெயிலரும் தான். இப்பப் பாக்கப்போறதுதான் மெயின் பிக்சர்.”.பொ.செ.வில் ரொம்ப ரசிச்சி படித்த நிறைய பகுதிகளை, குறிப்பா சில கேரக்டர்களை படத்துல பார்க்க முடியலை. இதையே ரெண்டு பாகங்களுக்குள் அடக்காமல் பல எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸா இயக்கியிருக்கலாம்னு எப்பவாவது உங்களுக்குத் தோணினதுண்டா?”“என்னோட ஆதர்ஷ மொழி சினிமா மட்டும்தான். கல்கியின் பாத்திரங்களை செல்லுலாய்ட்ல கொண்டு வர்றதுதான் எனக்கு விருப்பமான விஷயம். நாவல்ல சில பகுதிகளை மிஸ் பண்றோமேங்குற வருத்தம் ரொம்ப சின்னதுதான். ஆனா, இந்த இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் மூலமா அவரது படைப்புக்கு கவுரவம் செஞ்சிருக்கேன்னுதான் நினைக்கிறேன். இலக்கிய மொழி வேற. சினிமா மொழி வேற. படிக்கிறதுல கிடைக்கிற பரவசம் சினிமாவுல சில இடங்கள்ல நடக்காம போகலாம். அதே சமயம் எழுத்துல அனுபவிக்க முடியாத சில தருணங்களை உங்களுக்கு சினிமா கொடுக்க முடியும். அது பொன்னியின் செல்வன்ல நிறைவாவே இருக்கு.”.இதுவரை தமிழ் சினிமா பார்க்காத எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளம். எப்படி சமாளிச்சீங்க... ஷூட்டிங்ல பலரை பட்டினி போட்டீங்களாமே? “எனக்கு எதுலயுமே பங்சுவாலிட்டி முக்கியம். சொன்ன நேரத்துக்கு பத்து நிமிஷம் முன்னாடியே வந்து நிக்கணும். சினிமாவுக்கு வேலை செய்யறதுக்குத்தான் வந்துருக்கோம். ஒரு நல்ல காட்சி படமாகிக்கிட்டிருக்கப்போ, நடுவுல வேற யோசனையில்லாம ஒரே மூச்சுல அதை முடிக்கணும்னு நினைப்பேன். ஒரு காட்சி எடுத்துக்கிட்டிருக்கப்ப பாதியில சாப்பிடப்போறோம். அப்பிடியே கேரவன்ல கொஞ்ச ரெஸ்ட் எடுக்குறோம்னா அந்த சீன் எப்படி நல்லா வரும்?இத்தனை நட்சத்திரங்களை வெச்சி எப்பிடி சமாளிச்சீங்கன்னு எல்லாருமே கேட்குறாங்க. ஆனா, உண்மையில இந்தப் படத்துல ஒவ்வொருத்தர்கிட்டயும் அவ்வளவு டெடிகேஷன் இருந்தது. நடிகர்கள் மட்டுமில்ல, அத்தனை டெக்னீஷியன்களுமே ’ஒரு நல்ல நாவல் படமாகுது. இந்தப் படம் நம்ம தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கப் போகுது’ங்கிற பெருமிதத்தோடு அபாரமா உழைச்சாங்க.அந்த பட்டினி சமாச்சாரம்... சும்மா எங்களை நாங்களே ட்ரோல் பண்ணிக்கிட்டது. ’மணி சார் ஷூட்டிங்னா பட்டினி கிடக்கணும்’ங்குற எங்க யூனிட் மக்களோட கமென்ட்டுகளை நான் ரொம்ப ரசிச்சேன். ஷூட்டிங்க்கு டைம்க்கு போகணுமேங்கிற டென்சன்ல சிலர் லேட்டா சாப்பிட்டிருக்கலாம். ஆனாலும் சொல்றேன்... சினிமாதான் முதல் சாப்பாடு. அப்புறம் சாப்பிடு.”.ஏ.ஆர். ரஹ்மானுடன் லண்டன் அபே ரோடு ஸ்டியோஸ் அனுபவம் எப்படி இருந்தது? “இந்தப்படம் சம்பந்தமான முதல் சிட்டிங்கிலேயே , கதை புராண காலத்து கதையா இருந்தாலும் இசை நவீனாமாத்தான் இருக்கணும்னு நானும் ரஹ்மானும் முடிவு செஞ்சோம். அதை முதல் பாகத்துல அபாரமா செஞ்சி முடிச்ச ரஹ்மான், பார்ட் 2வுல இன்னொரு பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கார். லண்டன் ஸ்டுடியோவுல அவர் கொடுத்த நோட்ஸ்களை, அந்த ஊர் இசைக் கலைஞர்கள் ஒரு சிங்கிள் ரிகர்சல் கூட பார்க்காம வாசிச்சப்ப சிலிர்ப்பா இருந்தது. மேஜிகல் மொமன்ட் அது.”.’எப்பப் பாரு... தமிழ் சினிமாவுல சோழ மன்னர்கள் பெருமையைத்தான் அதிகமா பேசுறங்க’என்று பாண்டியர்கள் ஏரியாவிலிருந்து கேள்விக் கணைகள் கிளம்பறதை கவனிச்சீங்களா?“அடடே... இது வேறயா? டைரக்டர் ஷங்கரோட அடுத்த படமான ‘வேள் பாரி’ தயாராகப் போகுதே? இனி அடுத்தடுத்து பாண்டிய மன்னர்கள் தொடர்பான படங்களும் வர ஆரம்பிக்கும்.” தமிழ்ல ‘பொன்னியின் செல்வன்’ மாதிரியே வேற சில நல்ல நாவல்களும் படமாகுது... இந்த ட்ரெண்டை எப்படிப் பாக்குறீங்க?. கடைசியா நீங்க பார்த்த தமிழ்ப் படம் எது? “கடைசியா நான் பார்த்தபடம் ‘பொன்னியின் செல்வன் 2’ தான் [சிரிக்கிறார்]. இது ரிலீஸான மறுநாள்ல இருந்து விடுபட்ட அத்தனை படங்களையும் தொடர்ச்சியா பார்க்க ஆரம்பிச்சுடுவேன். பார்க்கவேண்டிய பெரிய லிஸ்ட் பெண்டிங்ல இருக்கு. நல்ல நாவல்கள் திரைப்படங்களா வரணும்னா முதல்ல மக்கள் அந்தப் படங்களை ஆதரிக்கணும். இன்னொரு பக்கம் இலக்கியவாதிகளும், திரைப்படக் கலைஞர்களும் பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சி, அங்கீகரிச்சி கைகோத்து படங்கள் செய்யணும். அப்பதான் தொடர்ச்சியா நல்ல படங்கள் வரும்.”.வெற்றிமாறனின் ‘விடுதலை’படத்துல உங்க ஆஸ்தான கேமராமேன் ராஜீவ் மேனன் ஒரு முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்கார். அவர் ஆக்சுவலா உங்க ‘பம்பாய்’படத்துல அரவிந்த் சுவாமிக்குப் பதிலா ஹீரோவா நடிச்சிருக்கவேண்டியவர்தானே? “அவர் நடிகரானதுல ரொம்ப சந்தோஷம். நான் நடிக்கச் சொன்னப்ப, நாம வெறும் கேமராமேனா சாதிச்சா போதும்னு நினச்சு நடிக்க மறுத்தார். எனக்கும் அப்ப அவரை வற்புறுத்தி நடிக்க வைக்கணும்னு தோணலை. இப்ப அவருக்கு நடிக்கலாம்னு தோணியிருக்கு. அதுல ஒண்ணும் தப்பில்லையே? ஆனா, அடுத்தடுத்து அவர் நடிச்சாலும்கூட, படங்களுக்கு கேமராமேனாவும் அவர் வேலை செய்யணும்ங்குறது என்னோட ஆசை. ஒரு கேமராமேனா அவ்வளவு அபாரமான ஆற்றல் கொண்டவர் ராஜீவ் மேனன்.”இளையராஜாவும் நீங்களும் சேர்ந்து செஞ்ச படங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம். மறுபடியும் நீங்க சேர்ந்து படங்கள் செய்ய வாய்ப்பிருக்கா? “என்னோட காம்பினேஷன் மட்டுமா? ராஜா சாரோட மகேந்திரன் சார் செஞ்ச படங்கள்... ராஜா சாரோட பாரதிராஜா செஞ்ச படங்கள்னு அவரோட யார் சேர்ந்தாலும் அது பொன்னான கூட்டணிதான். ராஜா மேல எனக்கு எப்பவுமே அசாத்திய மரியாதை உண்டு. அவரோட இசையின் காதலன் நான். நான் மட்டுமா என்னோட தலைமுறையே அவரோட இசையைக் கேட்டு வளர்ந்த தலைமுறைதான். அவரோட பாடல்கள் ரிலீஸாகுறப்ப கேசட்களை வாங்குறதுக்காக கடைகடையா அலைஞ்ச இளமைக்காலங்களை மறக்கமுடியுமா? வெயிட் பண்னுங்க... ஒரு நல்ல சூழல் அமையும்போது நிச்சயம் எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாம்.”அடுத்த படம் என்ன? ‘தேவர் மகன் 2’, நாயகன் 2’ இப்படி சில யூகங்கள்..? “யாரும் எப்படி வேணும்னாலும் யூகம் பண்ணிக்கலாம். ‘பி.எஸ். 2’ ரிலீஸான மறுநாள், அதாவது வர்ற ஏப்ரல் 29ம் தேதிதான் அடுத்த படத்தோடகதைக்காகவே உட்காரப்போறோம். இப்போதைக்கு என்னோட அடுத்த படத்துல நான் இருக்கேன். கமல் இருக்கார். எங்க ரெண்டு பேரோட நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸும், ராஜ்கமலும் இருக்குது. மற்றவை அடுத்த சந்திப்பில்...” உற்சாகமாக கைகுலுக்கி வாசல் வரை வந்து வழியனுப்பி அனுப்பி வைக்கிறார் மணிரத்னம்.”-முத்துராமலிங்கன்